பதான்கோட் புகட்டும் பாடம்! – ஏ.எம்.ஆர்.


காலம் காலமாகக் கடைப்பிடிக்கவிட்டு வந்த போர் முறைகள் தற்போது அடியோடு மாறிவிட்டன. எந்த தேசமாயினும், அதன் பாதுகாப்பிற்கு விமானப்படை அவசியமாகிவிட்டது.

போர் விமானங்களும், வினாடிக்கு வினாடி புதுப்புது Technical கண்டுபிடிப்புகளுடன் வடிவமைக்கப்பட்டு, வேகத்திலும், தாக்குதல் திறனிலும், போட்டி போட்டுக் கொண்டு உலக ஆயுத சந்தையில் விற்கப்படுகின்றன.

பாரத நாடு பரந்து விரிந்த நாடு. அதன் பாதுகாப்பிற்கு நவீன விமானப்படை எந்த அளவிற்கு அவசியம் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும். ஆதலால்தான், நமது பதான்கோட் விமான தளத்தை ‘தீவிரவாதிகள்‘ என்று சொல்லிக்கொண்டு, நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு வருகிறோமே, அந்த பாகிஸ்தானியர்கள் திட்டமிட்டு அழிக்க முயன்றுள்ளனர்.

இதில், நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு பயங்கர உண்மை என்னவென்றால், அந்த பாகிஸ்தானியர்கள் நாட்டினுள் ஊடுருவி, பதான்கோட் விமான நிலையத்தை அடைவதற்கு நம் உள்நாட்டு துரோகிகள் உடந்தையாக இருந்து அவர்களுக்கு உதவியுள்ளனர் என்பதே ஆகும்.

No reason to distrust Pakistan promises on action: Rajnath

சமரசம் என்பது பகல்கனவுதான்!

நமது மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்கள் பாகிஸ்தானை நம்பலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால், அவர் கூறிய அதே தருணத்தில் ஆப்கானிஸ்தானில் மழர்-இ-செரீப் என்ற ஊரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தை தீவிரவாதிகள் தாக்கியிருக்கிறார்கள். அந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதை பிரபல ஆங்கில நாளிதழான ‘தி இந்து‘ செய்தி வெளியிட்டுள்ளது.

Pak army officers involved in attack on Indian mission in Mazar-e-Sharif: Afghan police

Pak army officers involved in attack on Indian mission in Mazar-e-Sharif: Afghan police

நமது மத்திய அமைச்சர் பாகிஸ்தானைப் பற்றி கொண்டுள்ள நம்பிக்கையைக் கேலி செய்வது போல் உள்ளது பாகிஸ்தானின் செயல்கள்!

பாகிஸ்தான் – துவேஷத்தினாலும், பகை உணர்ச்சிகளினாலும், மத வெறியினாலும் உருவாகிய பாரதத்தின் ஒரு பகுதியாகும். அன்று காந்திஜி செய்த பாவத்தின் விளைவை இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

நம் வீர இளைஞர்களைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இனியும் அனுபவிக்கப் போவது நம் குழந்தைகளே! அரைகுறையாக (Unfinished Partition) ஒருபட்சமாகத் திணிக்கப்பட்ட பிளவினால், பல லட்சம் இந்துக்கள் வேற்று மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

என்று பாகிஸ்தான் உதயமானதோ அந்த வினாடியிலிருந்தே அந்த நாட்டின் கண், பாரதத்தின் மீதமிருக்கும் பகுதி மீதுதான்! அகண்ட பாகிஸ்தானை உருவாக்குவதுதான் அவர்களது நோக்கம். அதற்கு ஆதரவாக பலர் நம் நாட்டினுள்ளேயே இருந்துவருவது மறுக்க முடியாத உண்மையாகும். இதை அரசும், மக்களும் இன்னமும் உணர்ந்து கொள்ளாதது நமது துரதிருஷ்டமே.

பதான்கோட் சம்பவம் பாகிஸ்தானின் சிறிதளவும் மாறாத மனநிலையை எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையிலாவது, பாகிஸ்தானை உள்ளபடி உணர்ந்து, அதற்கேற்ப தக்க நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும். பாரத புண்ணிய பூமியின் எஞ்சியிருக்கும் பகுதியையாவது (காஷ்மீர் உட்பட) நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதை இந்திய அரசு மற்றும் ராணுவத்தால் மட்டுமே செய்ய முடியாது. மக்களும் தங்களை இத்தேச பக்த போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

கவலையுடன்,
உங்கள் ஏ.எம்.ஆர்.

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s