23-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


“பௌதிகமாம் உடல் பற்றற்று நாளும் உன பவிசு கண்டுற அருள் அருணாசலா”

(அட்சர மணமாலை)

என பகவான் கூறியதுபோல அன்பர்களும் உடல் பற்றாகிய ஆசைகளைத் துறக்கும் வழியை பகவானிடம் வேண்டுகிறார்கள். அத்தகைய துறவு நிலையைப் பற்றி பகவான் இவ்வாறு விளக்கினார். “நான் விருபாட்ச குகையில் தங்கி இருக்கையில் ஊருக்குள் சென்று பிட்சை எடுத்துக் கொண்டு வருவதே எங்களுக்கு உணவு! அது வெறும் அன்னம்தான். தொட்டுக் கொள்ள என்று எதுவும் கிடையாது. சில சமயம் கிடைத்த உணவு எல்லோருக்கும் போதாது. அப்பொழுது அதில் நிறைய நீர்விட்டு கஞ்சியாக்கி அனைவரும் பகிர்ந்து கொள்வோம்! இந்த கஞ்சிக்குச் சிறிது உப்பு சேர்த்தால் சுவையாக இருக்குமே என்று தோன்றும்! ஆனால் கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையாது, உப்பு வேண்டும் என்று கேட்டால், அடுத்தது பருப்பு, காய்கறி என்று கேட்கத் தோன்றும்.

இப்படியாக நமது தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் ஒரு முடிவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆசைகளுக்கு உடனுக்குடன் முடிவு கட்டி விட வேண்டும். அலைவதும் நிலையற்றதுமான இம் மனது எதன்வசம் திரிகிறதோ அதனிடமிருந்து அம்மனதை மீட்டு ஆன்மாவின் கட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இச் சாதனைதான் துறவு வாழ்க்கைக்கு முதற்படி” என்றார் பகவான்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

Ramanar_1000

இந்தப் புத்தகம் பற்றி அரவிந்த் சுவாமிநாதன் கூறுகிறார்…

இது கேள்வி – பதில் தொகுப்பல்ல. அவரது வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு. அதில் கேள்வி – பதில்களும் அடக்கம்.

இதற்கு முகப்போவியம் வரைந்திருப்பவர் நண்பர் மணியம் செல்வன்.

நூல் கிடைக்குமிடம் :

சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s