22-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


ரமணரைக் காணவந்த ஒரு அமெரிக்கப் பெண்மணி கால்களை மடக்க முடியாது நீட்டியபடி தரையில் அமர்ந்தார். உடனே பகவானின் அன்பர்கள் பகவானுக்கு முன் அவ்வாறு கால்களை நீட்டி அமர்வது மரியாதைக்குறைவு என்று அப்பெண்மணியை கால்களை மடக்கிக் கொள்ளுமாறு வற்புறுத்த அப்பெண்மணி முடியாமல் தவித்தார். இதைக் கண்ட பகவான், ஓஹோ! கால்களை நீட்டி உட்காருவது மரியாதையல்ல என்றால் இதோ நானும் அவர்களை நோக்கி அப்படித்தானே உட்கார்ந்து உள்ளேன். அவர்களுக்குச் சொல்வது எனக்கும் பொருந்தும்” என பத்மாசனத்தில் அமர்ந்து விட்டார்!  வாதத்தால் பகவானின் முழங்கால்கள் வீங்கி இறுகிவிட்டன. பிறகு கால்களை நீட்ட முடியாது பகவான் சிரமப்பட, அன்பர்களுக்கு தவிப்பாகிவிட்டது! மன்னிப்புக்கோரிய அவர்களிடம் பகவான், அந்த அம்மாளின் செய்கையில் தவறோ, மரியாதைக் குறைவோ இல்லை! இயலாமைதான் காரணம்!” என்றார்.

கைலாயத்தில் ஔவைபிராட்டி ஈசனை நோக்கி கால்களை நீட்டி அமர்ந்த கதையைக் கூறி, ‘இறைவன் இல்லாத இடம் ஏது? அவர் எங்கும் இருக்கிறார்’ என்று விளக்கினார்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

Ramanar_1000

இந்தப் புத்தகம் பற்றி அரவிந்த் சுவாமிநாதன் கூறுகிறார்…

இது கேள்வி – பதில் தொகுப்பல்ல. அவரது வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு. அதில் கேள்வி – பதில்களும் அடக்கம்.

இதற்கு முகப்போவியம் வரைந்திருப்பவர் நண்பர் மணியம் செல்வன்.

நூல் கிடைக்குமிடம் :

சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s