அவர்கள் வழியிலேயே இவர்களும் செல்கிறார்களே…! – ஏ.எம்.ஆர்.


பயங்கர ஆபத்தில் பாரதம்!‘ என்ற தலைப்பில், நமது மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் ராணுவத் தலைமைச் செயலகம், நாடாளுமன்றம், அணு நிலையங்கள் ஆகியவற்றைக் குறி வைத்துத்தாக்க பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதைப் பற்றி சர்வதேச உளவுத் துறை எச்சரிக்கை செய்திருந்ததையும், இனியும் நமது மத்திய அரசும், அரசியல் கட்சிகளும் இந்த எச்சரிக்கையைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் கூறியிருந்தது நமது பாலஹனுமான் வாசக அன்பர்களுக்குத் தெரியும்.

மேலும், நமது பிரதமர், தானே வலிய பாகிஸ்தானுக்குச் சென்று, அந்நாட்டுப் பிரதமரைக் கட்டித் தழுவியதால் நம் நாட்டிற்கு எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தோம்.

இந்தியாவை எவ்விதமாவது அழித்து விட வேண்டும் என்ற முயற்சியில் சென்ற 68 ஆண்டுகளாக இடைவிடாது மறைமுகப் போரில் ஈடுபட்டுவரும் பாகிஸ்தானுக்கு, பாரதப் பிரதமரின் திடீர் விஜயம் நமது மக்களுக்குத் திகைப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது!  அதிலிருந்து மக்கள் மீள்வதற்குள், சரியாக எட்டாவது நாளில், பாகிஸ்தானைத் தங்கள் தளமாக வைத்துக்கொண்டுள்ள தீவிரவாதிகள், பஞ்சாபின் பதான்கோட்டிலுள்ள இந்திய விமானப்படைத் தளத்தைத் தாக்கியுள்ளனர், இத்தாக்குதலுக்கு முன், பாகிஸ்தானில் ஒத்திகை நடத்தியுள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது.

இந்திய விமானப் படையின் மிக முக்கிய விமானத்தளம் இது! தீவிரவாதிகளின் குறிக்கோள், அங்கு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மிக்-21 போர் விமானங்களையும், எம்.ஐ.25, எம்.ஐ.35 போன்ற போர்ப்படை ஹெலிகாப்டர்களையும் தாக்கி அழிப்பதே ஆகும்.

Pathankot attack Confident that all terrorists will be killed says Rajnath

அப்போது நடந்த சண்டையில், நமது ராணுவத்தைச் சேர்ந்த இரண்டு உயரதிகாரிகள் உட்பட, ஆறு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

Must discuss terror with Pakistan: Rajnath

இத்தகைய வேதனை நிறைந்த தருணத்தில், இந்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், இதுபற்றி பாகிஸ்தானுடன் ‘விவாதிக்க வேண்டும்‘ என்று கூறியிருப்பது நகைப்பிற்கிடமாக உள்ளது.

பாகிஸ்தான் அரசு, மற்றும் அதன் ராணுவத்தின் ஆதரவில்லாமல், அந்நாட்டின் மண்ணிலிருந்து இத்தகைய தாக்குதலை தீவிரவாதிகள் எவ்விதம் நடத்தியிருக்க முடியும் ? இது சிறு குழந்தைக்குக்கூட எளிதில் விளங்கும்.

அன்று காங்கிரஸ் கட்சி எந்த தவறைச் செய்ததோ, அதே தவறைத்தான் பி.ஜே.பி. அரசும் செய்து வருகிறது! இதை நமது நாட்டின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்!

பதான்கோட் சம்பவத்திற்குப் பிறகாவது நம் இந்திய அரசு மற்றொரு காங்கிரஸ் அரசு போல் செயல்படாமல், துணிவுடன் நடவடிக்கை எடுக்குமா?

எதிர்பார்ப்புடன்,
உங்கள் ஏ.எம்.ஆர்.

 

 

2 thoughts on “அவர்கள் வழியிலேயே இவர்களும் செல்கிறார்களே…! – ஏ.எம்.ஆர்.

  1. ஸ்ரீராம் January 22, 2016 at 12:27 AM Reply

    பேச்சு வார்த்தை கூடாது என்றால் என்ன செய்ய வேண்டும்? படையெடுப்பா?

  2. பொன்.முத்துக்குமார் January 22, 2016 at 4:42 AM Reply

    இனி எதுவும் செய்ய இயலாத அளவுக்கு நிலைமை கை மீறிப்போய்விட்டது. பாகிஸ்தானில் ஜனநாயக அரசு ஒரு புறம், ராணுவம்-ஐ.எஸ்.ஐ கூட்டணி மறுபுறம். அரசே ஒருவேளை நாம் எதிர்பார்ப்பது போல இந்த தாக்குதல் நிகழ்த்திய தீவிரவாதியரை களையெடுக்க நினைத்தாலும், ராணுவ-ஐ.எஸ்-ஐ கூட்டணி விடாது. அவர்களுக்கு இந்த தீவிரவாத கும்பல்தான் இந்தியாவை எதிர்க்க உள்ள வலுவான துருப்புச்சீட்டு. ஒரு வேளை நவாஸ் சர்வதேச அழுத்தத்துக்கு பணிந்து நடவடிக்கை எடுக்கத்தொடங்கினால் அவர் ஒன்று பதவி நீக்கம் செய்யப்பட்டு பர்வேஸ் செய்தது போல ராணுவ ஆட்சி வரும், அல்லது அவரும் கொல்லப்படுவார்.

    எனவே எந்த அரசாலும் எதுவும் செய்ய இயலாமல் இந்தியா இன்னும் கொஞ்ச (கொஞ்சம் என்ன கொஞ்சம், நிறைய காலத்துக்கு என்றே சொல்லலாம், உறுதியாக) காலத்துக்கு இந்த பரிதாபகரமான நிலையில்தான் இருக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s