21-ரமணர் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள்…


ஒரு சமயம் மலை உச்சியில் உள்ள ஒரு அதிசய ஆலமரத்தை காணும் பொருட்டு பகவான் ரமணர் அதை நோக்கி மலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒரு பெரிய புதரில் பகவானது தொடைப்பகுதி உரச, அதிலிருந்து கூட்டமாகப் பறந்து வந்த தேனீக்கள் பகவானின் தொடையைக் கொட்டின! அவைகளின் கூட்டைக் கலைத்த எனக்கு இந்த தண்டனை வேண்டியதுதான்! ஆத்திரம் தீரக் கொட்டட்டும்” என்று பகவானும் அசையாது நின்றார். தேனீக்கள் அவரை விட்டுப் பறந்து போன பின்புதான் அந்த வலியுடன் பகவான் தன் நடையைத் தொடர்ந்தார்! அந்த வேதனையும் வீக்கமும் குறையப் பல நாட்கள் ஆயின! அறியாது பிறரைக் காயப்படுத்தினாலும்கூட அதற்கான தண்டனையை ஏற்க வேண்டும் என்பதை இவ்வாறு உணர்த்தினார் பகவான்!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

Ramanar_1000

இந்தப் புத்தகம் பற்றி அரவிந்த் சுவாமிநாதன் கூறுகிறார்…

இது கேள்வி – பதில் தொகுப்பல்ல. அவரது வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு. அதில் கேள்வி – பதில்களும் அடக்கம்.

இதற்கு முகப்போவியம் வரைந்திருப்பவர் நண்பர் மணியம் செல்வன்.

நானும் அவரும் அவ்வப்போது பேசிக் கொள்வது வழக்கம். கல்கி, சாவி, ராஜம், சில்பி, கோபுலு போன்ற ஜாம்பவான்கள், அந்தக் கால பத்திரிகை, ஓவிய மேதைகள், ஆலயங்கள், சிற்பங்கள், ஸ்தபதிகள் என்று தொடரும் எங்கள் பேச்சு, பெரும்பாலும் ரமணரைத் தொட்டு விடும். அவரும் ஒரு ரமண பக்தர் என்பதால், அவரது ரமணாச்ரம நினைவுகள், அங்கிருந்த கேப்டன் என்று அழைக்கப்படும் பக்தருடன் கிரிவலம், மௌண்டன் பாத் இதழுக்கு வரைந்தது என்று பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்வார்.

என்றாலும் ஒருமுறை கூட நான் இந்த நூல் எழுதுவது பற்றியோ, அதற்கான முயற்சிகள் பற்றியோ அவரிடம் பகிர்ந்ததில்லை. அவர்தான் இதற்கு ஓவியம் வரைந்திருக்கிறார் என்பது எனக்கு புத்தகப் பிரதி கைக்கு வந்தபிறகுதான் தெரியும். அதுபோல நான் தான் (!) இதைத் தொகுத்து எழுதியது என்பது அவருக்கான பிரதி வந்த பிறகுதான் அவருக்குத் தெரியும்.

புத்தகப் பிரதிகளை அன்றைய இரவுதான் நான் பார்த்ததால் மறுநாள் இதுபற்றி அவரிடம் பேச வேண்டும் என நான் நினைத்துக் கொண்டிருந்தபோது அவரே அழைத்துப் பேசினார். அந்த வகையில் முதன் முதலில் இந்த நூலை முழுமையாகப் படித்துவிட்டு விமர்சனம் செய்தது அவர்தான்.

பொருளடக்கம்” இல்லையே என்று மணியம் செல்வன் கேட்டார். நான் கொடுத்திருந்தேன். 100 தலைப்புகளுக்கு மேல் உள்ளே இருப்பதால் ’பக்க எண்ணிக்கை’ கருதி அவை சேர்க்கப்படவில்லை என நினைக்கிறேன். உங்கள் கருத்தை அறியக் காத்திருக்கிறேன்.

நூல் கிடைக்குமிடம் :

சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s