ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: கன்னி – ஏ.எம்.ஆர்.


குடும்பம்:

இதுவரை உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்திருந்த ராகு, அதனை விட்டு விலகுவது மிகவும் நல்லது. ஜோதிடக் கலையின் கோள்சார விதிகளின்படி, ராகு எப்பொழுது உங்கள் ஜென்ம ராசியைக் கடந்து சென்றாலும், குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும் என்பது மகரிஷிகள் வாக்கு! ஆதலால், சென்ற சுமார் ஒன்றரை வருட காலத்தில் கன்னி ராசி அன்பர்கள், அமைதியை இழந்து, பல வகைகளிலும், பல துன்பங்களை அனுபவித்திருப்பார்கள். தசா, புக்திகள் பாதகமாக அமைந்திருப்பின், பிறரால் ஏமாற்றப்படுதல், நம்பினவர்கள் துரோகம் செய்தல், செய்வினை தோஷம், கைப்பணம் விரயமாதல், உடல்நலன் பாதித்தல், குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு, பணியாட்களால் தொல்லைகள் என பல வகையிலும் மன பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அவை அனைத்தும், இனி ‘பகலவனைக் கண்ட பனிபோல்‘ விலகிவிடும்.

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமாகிய சிம்ம ராசிக்கு ராகு மாறுவது நன்மை அளிக்காது என்றாலும், ஜென்ம ராசி சஞ்சாரத்தினால் ஏற்படும் சிரமங்கள் நீங்கி விடுவதே மிகப் பெரிய நன்மை அல்லவா! மேலும், ராகு சிம்ம ராசியில் சஞ்சரிக்கும்போது, பரம சுபக்கிரகமான குரு பகவானின் கட்டுப்பாட்டில் அல்லவா நிலை கொண்டிருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது அவருக்கு! இது மட்டுமா… ராகு சிம்ம ராசியில் பிரவேசிக்கும் அதே தருணத்தில் இதுவரை மீனத்தில் இருந்து வந்த கேது கும்ப ராசிக்கு மாறி, சிம்ம ராசியில் நிலை கொண்டுள்ள குரு பகவானின் 7-ம் சுபப் பார்வையும் பெற்று விடுவது, உங்களுக்குப் பல நன்மைகளை அளிக்கக் கூடிய கிரக நிலையாகும். திருமண முயற்சிகளில் ஏற்பட்டு வந்த தடங்கல்கள் விலகும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.  குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். அலைச்சல்கள் பெருமளவில் குறையும். ஜென்ம ராசி ராகு அதிக அலைச்சல்களையும், ஓய்வில்லாத உழைப்பையும்,  நிம்மதியற்ற இரவுகளையும் ஏற்படுத்துவார் என  ‘பூர்வ பாராசர்யம்‘ என்ற புராதன ஜோதிட நூல் கூறியுள்ளது. அந்நிலை இப்போது ராகுவின் சிம்ம ராசி மாற்றத்தினால் கன்னி ராசியினருக்கு அடியோடு மாறி விட்டது.

உத்தியோகம்:

பல காரணங்களினால், பொறுப்புகளில் ஏற்பட்டு வந்த உற்சாகக் குறைவு இனி இராது. சக தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளி நாடுகளில் பணியாற்றி வரும் கன்னி ராசி அன்பர்களுக்கு, அலுவலகத்தில் கவலையளித்தது வந்த பல பிரச்சினைகள் நல்லபடி தீரும். ஏதாவது ஒரு காரணத்தினால், வேலையை இழந்து, சிரமப்படும் கன்னி ராசியினருக்கு சிறு முயற்சியிலேயே நல்ல வேலை கிடைக்கும். தடங்கல்கள் நீங்கும். மீண்டும் பணியில் உற்சாகம் ஏற்படும்.

தொழில், வியாபாரம்:

இதுவரை நிலவிவந்த கடுமையான போட்டிகள் படிப்படியாகக் குறைவதை இனி அனுபவத்தில் பார்க்கலாம். குறிப்பாக, ஏற்றுமதித் துறையினருக்கு ஏற்பட்டு வந்த பல பிரச்சினைகள் இனி நல்லபடி தீரும். நிதி நெருக்கடி குறையும். அன்றாட விற்பனை அதிகரிக்கும். சமீபத்தில் ஏற்பட்ட பெருமழையினாலும், வெள்ளத்தினாலும் ஏற்பட்ட பல பின்னடைவுகளிலிருந்து மீண்டு, மீண்டும் வியாபாரம் ஸ்திரப்படும். தேவையான நிதி உதவிகள் தேடி வரும். உற்பத்திக்கு அவசியமான கச்சாப் பொருட்கள் எளிதில் கிடைக்கும். வெளிநாட்டு ஆர்டர்கள் அதிகரிக்கும்.

மாணவமணிகள்:

கன்னி ராசி கல்விக்கு அதிபதியான புதனின் ராசியாகும். இதுவரை ராகுவின் சக்தியினால் பாதிக்கப்பட்டிருந்ததிலிருந்து, மாணவ-மாணவியர் தற்போது விடுபட்டுள்ளனர். மீண்டும் பாடங்களில் ஆர்வம் மேலிடும். பாடங்கள் தெளிவாகப் புரியும். படிப்பவை நினைவிலிருக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் திகழ்வீர்கள்.

பெண்மணிகள்:

சென்ற சுமார் 18 மாதங்களாக மனத்தளவிலும், பிறர் தலையீடுகளினாலும், பலவித சிரமங்களுக்கு ஆளாகி, வேதனையுற்ற உங்கள் உள்ளத்திற்கு இந்த ராகு-கேது ராசி பெயர்ச்சி தருணமறிந்து கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும். மீண்டும் வாழ்க்கையில் பிடிப்பும், மலர்ச்சியும் உண்டாகும்.

பொருளாதாரம்:

செலவுகள் கட்டுக்கடங்கும் இனி! வருமானமும் ஓரளவு உயரும். பழைய கடன்களினால் ஏற்பட்டு வந்த பிரச்சினைகளின் கடுமை குறையும்.

ஆரோக்கியம்:

தற்போது நிகழவுள்ள ராகு-கேது ராசி மாறுதலின் மிக முக்கிய நன்மை உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படும் சிறந்த முன்னேற்றமே ஆகும். முக்கியமாக, சென்ற ஒன்றரை ஆண்டுகளாக உங்களை வாட்டியெடுத்த வெளியூர் பயணங்கள், அலைச்சல்கள் ஆகியவை இனி இராது – அத்த்தகைய அலைச்சல்களுக்குக் காரணமான பிரச்சினைகள் நல்லபடி தீர்வதால்!

அறிவுரை:

விரயத்தில் குரு பகவானும், ராகுவும் நீடிப்பதால், பண விஷயங்களில் சற்று ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. சிக்கனம் உதவும். மற்றபடி கவலையில்லாத காலகட்டத்தில் காலடியெடுத்து வைக்கிறீர்கள் இப்போது.

பரிகாரம்:

1) மகான்கள், சித்த புருஷர்கள், குரு ஆகியோரின் பிருந்தாவனம், சமாதி ஆகியவற்றை நெய் தீபம் ஏற்றி வைத்து, தரிசிப்பது கன்னியா ராசி அன்பர்களுக்கு உகந்த பரிகாரமாகும்.

நவபிருந்தாவனம், சோதே, சாவனூர், மந்த்ராலயம், காஞ்சி காமகோடி பீடம் மகா பெரியவா போன்றோரின் ஜீவபிருந்தாவனங்கள் சக்தி வாய்ந்தவை. வேட்டைக்காரன்புதூர் அழுக்கு சித்தர், பழனி முருகப் பெருமான் திருக்கோயிலின் கருவறையிலுள்ள போகர் சமாதி, சென்னிமலை முருகப்பெருமான் திருமலையில், நித்ய வாசம் செய்யும் பிண்நாக்கு சித்தர் ஆகிய மகான்களின் சமாதி தரிசனம் சிறந்த பரிகாரம் ஆகும்.

2) வியாழக்கிழமைகளில் சிறிது பசுநெய்யும், சனிக்கிழமைகளில் சிறிது எள் எண்ணெயும், உள்ளூர் ஆலய தீபத்தில் சேர்த்து வந்தால் போதும். 24 கிழமைகள் செய்தால் போதும்.

3) தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ‘ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம்‘ ஸ்தோத்திரத்தைச் சொல்லி வருதல் நல்ல பலனை அளிக்கும்.

4) உங்கள் குலகுரு, ஆச்சார்யன் ஆகியோரைத் தரிசித்தல் அல்லது தினமும் தியானித்தல் மிகவும் நல்லது.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

2 thoughts on “ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: கன்னி – ஏ.எம்.ஆர்.

  1. Arvind Swaminathan January 16, 2016 at 5:18 AM Reply

    100% சரியான கணிப்பு. ஏ.எம்.ஆர் அவர்களுக்கு என் நமஸ்காரம். இதனைப் பகிர்ந்த பால்ஹனுமான் – சீனிவாசனுக்கு என் நன்றிகள்.

    • BaalHanuman January 16, 2016 at 4:22 PM Reply

      நன்றி அரவிந்த். உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s