ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: சிம்மம் – ஏ.எம்.ஆர்.


குடும்பம்:

சிம்ம ராசி அன்பர்களுக்கு ஜென்ம ராசியில் குரு பகவானும், ராகுவும் சேர்கிறார்கள். அர்த்தாஷ்டகத்தில் சனிபகவான் சஞ்சரிக்கிறார். சிம்ம ராசிக்கு குரு பகவான் பூரண சுப கிரகம் ஆவார். ஆதலால், குரு பகவானால் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது. அதற்கு மாறாக, ராகுவினால் ஏற்படும் தோஷத்தை குருபகவான் பெருமளவில் குறைத்து விடுகிறார். ராகு, சனி ஆகிய இரு கிரகங்களுமே சிம்ம ராசிக்கு பகை கிரகங்கள் ஆவர். ஆதலால், அடுத்து வரும் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு இந்த ராசியினர் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பச் சூழ்நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். பண விரயம் கட்டுக்கடங்காமல் போகும். நெருங்கிய உறவினர்களின் மனோபாவம் வேதனையளிக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால் பண விரயம் கவலையளிக்கும். திருமண முயற்சிகளில் தவறான முடிவுகள் எடுப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. முக்கிய முடிவுகள் எதுவானாலும், சற்று தீர ஆலோசித்து அதன் பின்னரே முடிவெடுப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது.

உத்தியோகம்:

உங்கள் கடமைகளிலும், பொறுப்புகளிலும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். அலுவலகத்தில் உருவாகும் சில பிரச்சினைகளினால், உங்கள் எதிர்காலம் பற்றிய அச்சம் அதிகரிக்கும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் சிம்ம ராசியினருக்கு, பணியாற்றுமிடத்தில் பிரச்சினைகள் உருவாகும். ஒரு சிலருக்கு நிறுவன மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை ராகு மற்றும் சனி பகவானின் நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. உத்தியோகத்திற்கு முயற்சித்து வரும் இளைஞர்களுக்கு ஏமாற்றம் ஏற்படக்கூடும். வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டும் என்ற ஆவலில் பணம் கொடுத்தும் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. எத்தருணத்திலும் பிறரை நம்பி மோசம் போய்விட வேண்டாம். அந்த அளவிற்கு ஜென்ம ராசி ராகுவினால் சிரமங்களே ஏற்படும்.

தொழில், வியாபாரம்:

லாபம் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை ராகுவின் நிலையும், சனிபகவானின் சஞ்சாரமும் குறிப்பிடுகின்றன. உற்பத்திக்கு அத்தியாவசியமான மூலப்பொருட்கள் கிடைப்பதில் தடங்கல் ஏற்படலாம். சக கூட்டாளிகளின் ஆதரவு பாதிக்கப்படும். நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதில் பயனில்லை. ஏற்றுமதி-இறக்குமதித் துறையினருக்கு லாபம் குறையும். சிம்மம் சூரிய பகவானின் ராசியாகும். ஆதலால், அரசாங்க அதிகாரிகளின் தலையீடு கவலையளிக்கும்.

மாணவமணிகள்:

சிம்ம ராசியில் ராகு இருப்பதால், சகவாச தோஷம் ஏற்படுவதற்கும், அதனால் உங்கள் கல்வி முன்னேற்றம் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. சக மாணவர்கள் எவராக இருந்தாலும், அவர்களிடமிருந்து சற்று விலகியே இருங்கள். வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க வேண்டுமென்று எண்ணமிருப்பின், அதற்கும் பல தடங்கல்கள் ஏற்படக்கூடும். பரிகாரம் உதவும்.

பெண்மணிகள்:

மிகவும் பொறுமையுடனும், நிதானத்துடனும் இருக்கவேண்டிய காலகட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். குடும்ப நிர்வாகம் செய்வதில் சிரமம் ஏற்படும். கணவர் மற்றும் குழந்தைகளின் பிரச்சினைகளினால் மன நிம்மதி குறையும்.

பொருளாதாரம்:

எவ்வளவு சம்பாதித்தாலும், அந்தப் பணம் எங்குதான் போயிற்று என வியக்கும் அளவிற்கு செலவுகள் ஏற்படும். சில தருணங்களில், வேறு வழியின்றி புதிய கடன்களை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தமும் உருவாகும். சிக்கனமும், திட்டமிட்டுச் செலவிடுதலும் ஓரளவிற்கு உதவும்.

ஆரோக்கியம்:

ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளபடி, ராகுவின் தீவிர பகை வீடு சூரியனின் ராசியான சிம்மம் ஆகும். ஆதலால், அடிக்கடி ஆரோக்கியம் குறையும். சோர்வும், அசதியும் உண்டாகும். குறிப்பிட்ட நேரத்தில் உண்பது, உறங்கச் செல்வது, ஓய்வெடுத்தல் என்று கட்டுப்பாடாக இருப்பின், உடல்நலனைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

அறிவுரை:

சிம்ம ராசிக்கு, பரம சுபக்கிரகமான குருபகவான் துணை நிற்பதால், அடுத்து வரும் சுமார் ஒன்றரை வருட காலத்தை சிம்ம ராசி அன்பர்கள் எளிதாகக் கடந்துவிட முடியும். இருப்பினும், சனிபகவானும் அனுகூலமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், கீழே குறிப்பிட்டுள்ள, சக்தி வாய்ந்த பரிகாரங்களில் எவை முடிகிறதோ அவற்றைச் செய்து வருவது மிகச் சிறந்த பலனையளிக்கும்.

பரிகாரம்:

1) சிம்ம ராசியினருக்கு உகந்த குல, குடும்ப தெய்வம் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹர். தினமும் அவரது படத்தை வைத்து, நெய் தீபமேற்றி பூஜித்து வருவது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

2) ஸ்ரீ ராகுவினால் ஏற்படும் தோஷத்தைப் போக்க ஒருமுறை திருநாகேஸ்வரம் சென்று, ஸ்ரீ ராகுவை தீபமேற்றி தரிசித்துவிட்டு வருவது சிறந்தது.

3) ஸ்ரீமத் அஹோபிலம், பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்கோயில் (அபிஷேகப்பாக்கம்), ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள சிம்மாசலம், யாதகிரி குட்டா, மங்களகிரி, கர்நாடகாவிலுள்ள மேல் கோட்டை, திருநாராயணபுரம் ஆகிய திருத்தல தரிசனம் நல்ல பலன் அளிக்கும்.

4) ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும், வீட்டின் பூஜையறையிலோ அல்லது திருக்கோயில் ஒன்றிலோ மண் அகலில் பசுநெய் தீபமேற்றி வருவது ராகுவின் தோஷத்தைப் போக்கும்.

5) தசா, புக்திகள் அனுகூலமில்லாமல் இருக்கும் சிம்ம ராசி அன்பர்கள், வசதியிருப்பின் ஸ்ரீ சுதர்சன நரசிம்ம ஹோமம் செய்வது அற்புத பலனளிக்கும்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

2 thoughts on “ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: சிம்மம் – ஏ.எம்.ஆர்.

 1. yarlpavanan January 15, 2016 at 1:48 AM Reply

  2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  • BaalHanuman January 15, 2016 at 3:07 AM Reply

   நன்றி பாவாணன். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s