ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: கடகம் – ஏ.எம்.ஆர்.


குடும்பம்:

இதுவரை உங்கள் ராசிக்கு அனுகூல நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ராகு மற்றும் கேது ஆகிய இரு கிரகங்களும், தற்போது முறையே சிம்ம ராசிக்கும், கும்ப ராசிக்கும் மாறவிருப்பது நன்மையை அளிக்கக்கூடிய மாறுதல் அல்ல. வருமானம் திருப்திகரமாக இருப்பினும், எதிர்பாராத செலவுகளினால் அடிக்கடி பணப்பற்றாக்குறை ஏற்படக்கூடும். பல குடும்பப் பிரச்சினைகளினால் மன அமைதி குறையும். நெருங்கிய உறவினர்களிடையே தேவையில்லாத வாக்குவாதமும், கருத்து வேற்றுமையும் ஏற்படக்கூடும். சிறு விஷயங்களுக்குக் கூட அதிகமாக பாடுபட வேண்டியிருக்கும். திருமண முயற்சிகளில் தேவையில்லாத பிரச்சினைகளும், குழப்பமும் உருவாகும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்க இயலாது. பழைய கடன்களினால் சிரமங்கள் ஏற்படலாம்.

உத்தியோகம்:

சக ஊழியர்கள், மேலதிகாரிகள் ஆகியோரின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைப்பது கடினம். மேலதிகாரிகள் உங்கள் மீது ஏதாவதொரு குற்றம் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். எத்தனைதான் பாடுபட்டாலும், அலுவலகத்தில் நற்பெயர் கிடப்பது அரிது. சிறு தவறானாலும், அதனைப் பெரிதுபடுத்தி, தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். எக்காரணம் கொண்டும் உங்கள் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் வேண்டாம். கூடிய வரையில் சந்தர்ப்பங்களுக்கேற்ப சற்று வளைந்து கொடுத்து நடந்து கொள்வதும், பொறுமையை வளர்த்துக் கொள்வதும் நல்லது.

தொழில், வியாபாரம்:

தேவைக்கதிகமாகப் பொருட்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டாம். கடுமையான போட்டிகளால் லாபம் சற்றுப் பாதிக்கப்படும். கூட்டாளிகளின் மறைமுக சூழ்ச்சிகள் உங்கள் நலனைப் பாதிக்கும். ஏற்றுமதி, இறக்குமதித் துறையினர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணமிது. நிதிநிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையும். வெளியூர் பயணங்கள் ஏமாற்றத்தை ஏற்படுத்தும். விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப்போடுவது நல்லது. பண விஷயங்களில் கண்டிப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

மாணவமணிகள்:

படிப்பில் மனதை ஊன்றிச் செலுத்த இயலாதபடி, தேவையற்ற கவலைகள் மனதை வாட்டும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், வழிகாட்டுதலும் குறையும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற பாடுபட வேண்டியிருக்கும். வெளிநாடுகளில் படித்து வரும் கடக ராசி மாணவ, மாணவியருக்கு மனதில் ஏக்கமும், கற்பனையான பயமும் உண்டாகும். இருப்பினும், ராகுவிற்கு குரு பகவானின் சேர்க்கை இருப்பதால், இத்தகைய பிரச்சினைகள் தாற்காலிகமானவையாகவே இருக்கும்.

பெண்மணிகள்:

சற்று பொறுமையுடன் இருக்க வேண்டிய காலகட்டத்தில் நீங்கள் இருப்பதை ராகு மற்றும் கேது ஆகிய இரு சாயா கிரகங்களின் நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. குடும்ப நிர்வாகத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். உறவினர்களின் தேவையற்ற தலையீடு மனதில் கவலையை ஏற்படுத்தும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் நிர்ப்பந்தமான சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது.

பொருளாதாரம்:

இவ்விஷயத்தில் நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டியதன் அவசியத்தைக் கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. கைபணத்தைப் பாதுகாப்புடன் வைத்து, எண்ணி எண்ணிச் செலவழிக்கவும். கூடிய வரையில் புதிய கடன்களை ஏற்காமல் இருப்பது உங்கள் எதிர்கால நலனுக்கு உகந்ததாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால், அவசரத் தேவைக்காக சிறிது வருமானத்தை ஒதுக்கி வைத்துவிடுங்கள். சமயத்தில் உதவும்.

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கண்ட நேரங்களிலும், கண்ட இடங்களிலும், தரக்குறைவான இடங்களிலும் உண்பதைத் தவிர்க்கவும்.

அறிவுரை:

ராகுவிற்கு குரு பகவானின் சேர்க்கையும், கேதுவிற்கு அவரது சுபப்பார்வையும் உள்ளதால், கடக ராசியினருக்கு இந்த ராசி மாறுதல் பல பிரச்சினைகளை ஏற்படுத்தினாலும் கூட, அவை கடுமையாக இராது. கீழ்க்கண்ட பரிகாரங்களில் முடிந்தவற்றைச் செய்து வந்தால் நிலைமையை நன்கு சமாளித்து விடலாம்.

பரிகாரம்:

1) காலை, மாலை இரு வேளைகளிலும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஜெபித்து வரவும்.

2) பெரியோர்கள் அல்லது மகான்களிடம் உபதேசம் பெற்றிருந்தால், தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 108 அல்லது 1008 தடவைகள் ஸ்ரீ காயத்ரி மகா மந்திரத்தை ஜெபித்து வாருங்கள்.

3) உங்கள் குலதெய்வம் உள்ள இடம் தெரிந்திருப்பின், உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று, சென்று தரிசித்து, 24 அல்லது 48 நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபட்டு வந்தால் போதும்.

4) திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தை தினமும் காலையில் ஸ்நானம் செய்தபின்பு சொல்லி வரவும்.

5) தினமும் ஸ்ரீ மகாலக்ஷ்மி அஷ்டோத்திரம் அல்லது ஸ்ரீ ஸ்துதி ஆகியவற்றைச் சொல்லி ஸ்ரீ மஹாலக்ஷ்மியை பூஜித்து வாருங்கள்.

6) வசதியிருப்பின் ஒரு முறை சோளிங்கபுரம் அல்லது பூவரசன்குப்பம் திருத்தலம் சென்று, நெய் தீபம் ஏற்றி ஸ்ரீ நரசிம்மரை வழிபட்டு வரவும்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s