13-தோசையம்மா தோசை – கிருபாநிதி


என்ன செய்யறது?

கை நமநமங்கறதே!

எங்க ஊர் காளியாகுடி,மயூரா லாட்ஜ் ஸ்பெஷல் ரவா தோசையைப் பத்தி எழுதலைன்னா தூக்கம் வராது போல் இருக்கு!

பொன்னிறமா அங்கங்கே கொஞ்சம் நல்லா சிவந்து முறுகலா அதை இலையில் கொண்டு வந்து போடும்போது வரும் வாசனையே நம்ம தலையைக் கொஞ்சம் கிறுகிறுன்னு ஆக்கிவிட்றும்.

தோசையில் ஆங்காங்கே தென்பட்ற பச்சை மிளகாத் துண்டுகளையும் மிளகையும் ஒதுக்கி வைச்சுட்டு,இலையில் போட்டிருக்கிற தோசையை நன்னா ஒரு தடவை தீர்க்கமா பார்த்து ரசிங்கோ!

கெட்டியா தேங்காய்ச் சட்னி,நல்ல காரச் சட்னி ரெண்டையும் இலையில் அந்த சைட் போட்டுண்டு,இந்த இடம்தான் ரொம்ப முக்கியம்,நன்னா கவனிக்கணும்,கொஞ்சம் கூட வெக்கமே படாம சாம்பார் முழுக் கிண்ணத்தையும் தோசை மேல கவுத்துக்கணும்.சாம்பார் வாளியை ஜாடை காட்டி டேபிள் மேலையே வெச்சிடச் சொல்லிட்றது உத்தமம்.இந்த நாசூக்கா கொஞ்சம் கொஞ்சமாத் தொட்டுத் தொட்டு சாப்பிடறவா எல்லாம் ஆட்டத்திலேந்து விலகிக்கோங்கோ!

நீங்கள்ளாம் அதுக்கு சரிப்பட மாட்டேள்!

இப்போ தோசையை விண்டா எங்க ஊர் தோசையிலதான் பட படன்னு முறுகல் போர்ஷன் உடையற சவுண்ட் திவ்யமாக் கேக்கும்.அந்தத் துண்டை சாம்பார்ல இன்னொரு தடவை ஞானஸ்னானம் பண்ணி,தேங்காய்ச் சட்னியில கொஞ்சம்,காரச் சட்னியில கொஞ்சமா நனைச்சு வாயில் போட்டு ஒரு கடி கடிச்சா அந்த கலைவையான டேஸ்ட் சர்ர்ன்னு கபாலத்துல போய் படார்னு அடிச்சு மூளையில ஒரு சில ரசவாதங்களை உண்டு பண்ணி,சலைவரி க்ளாண்ட்ஸை எல்லாம் அட் எ டைம் ஓவர் ஒர்க் பண்ண வைக்கும்.காதுலையும் மூக்குலையும் லேசா ஜலம் கசிய ஆரம்பிக்கும் .அதையெல்லாம் மைண்ட் பண்ணாம புறங்கையால் தொடச்சிண்டே கன்டின்யூ!

அப்போப்போ சாம்பார்ல போட்றுக்கிற சின்ன வெங்காயம் நாம மெல்லும்போது தோசை எக்ஸ்பீரியன்ஸை வேற லெவலுக்குக் கொண்டு போகும்.

கண்ணை மூடித் தொறக்கறத்துக்குள்ள இலை காலி!

வெயிட்,வெயிட்!அதோ சிகப்புக் கலர்ல பள பளன்னு ஜாலம் பண்ணிண்டு மின்றதே,அதான் எங்க ஊர் ஃபேமஸ் கோதுமை அல்வா!

தோசையை சாப்பிட்டு முடிச்ச கையோட அதுல ஒரு துண்டை எடுத்து வாயில போட்டுக் கடிக்கலாம்னு போனா நீங்கெல்லாம் அப்படியே ஷாக்காய்டுவேள்!ஏன்னா அது வாயிலியே கரைஞ்சி எப்போவோ சறுக்கு மரம் விளையாடித் தொண்டைக் குழிக்குள்ள இறங்கிப் போயிருக்கும்.

அது முடிஞ்சதுக்கப்புறமா காஃபி,ஸ்ட்ராங்கா,சக்கரை கம்மியா குடிச்சா ஜென்ம சாபல்யம் நிச்சயம்!

ஒவ்வொரு செவ்வாயும் மயூரா லாட்ஜில் கடப்பாவோட ரவாதோசை வேற விதமான எக்ஸ்பிரியன்ஸ்.அதுக்குத் தனி ஃபேன் கிளப் இருக்கு!

Krupanidhi Vramanan

Advertisements

7 thoughts on “13-தோசையம்மா தோசை – கிருபாநிதி

 1. xavier raja January 14, 2016 at 5:59 AM Reply

  ellam sari… ethukku intha brahamana baashai ithula kooda…

  • BaalHanuman January 14, 2016 at 4:22 PM Reply

   நல்ல கேள்வி சேவியர். இதை இந்தக் கட்டுரையை எழுதிய என் டாக்டர் நண்பரிடம் தான் கேட்க வேண்டும் 🙂

   • xavier raja January 19, 2016 at 6:34 AM

    🙂

 2. Cuddalore Ramji January 14, 2016 at 9:09 AM Reply

  எங்க சாா் இருக்கு இந்த ஓட்டல். இப்பவே போகப்போறோம்

  • BaalHanuman January 14, 2016 at 4:24 PM Reply

   மாயவரம் காளியாகுடி ஹோட்டல் world famous ஆச்சே 🙂

 3. ratha January 14, 2016 at 4:07 PM Reply

  super sir your rava dossa recipes anal ungala patha engaluk. therindha ortho Dr pol irukinga

 4. D. Chandramouli January 27, 2016 at 7:17 AM Reply

  Besh! Delightful reading!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s