பயங்கர ஆபத்தில் பாரதம்! – ஏ.எம்.ஆர்.


IMG_4231

இந்திய விமானப்படையில் பொறுப்புள்ள பதவியில் இருந்துவந்த ஒரு தேசத் துரோகியுடன், தீவிரவாதிகள் ஒரு இளம்பெண்ணின் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு, அதன்மூலம் இந்திய விமானப்படையின் மிக, மிக ரகசிய, அந்தரங்க தகவல்களைப் பெற்று வந்திருப்பதை இந்திய உளவுத் துறை கண்டுபிடித்து, கே.கே.ரஞ்சித் என்ற அந்த தேசத் துரோகியை கைது செய்துள்ளனர்.

நமது போர் விமானங்கள் எங்கெங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, நமது பாதுகாப்பு திட்டங்கள் என்ன என்ற அனைத்து விவரங்களையும் இந்த தேசத்துரோகி மத தீவிரவாத அமைப்பிற்குக் கொடுத்திருக்கிறான்.

நம் நாட்டினை இத்தகைய பேராபத்து சூழ்ந்துள்ள நிலையிலும்கூட, நம் அரசியல்வாதிகள் கூட்டணிகள் அமைப்பதிலேயே கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருகின்றனர். நாட்டின் எல்லைப் பகுதிகளில், தங்கள் உயிரை பயணம் வைத்து, இரவு, பகல், ஊண், உறக்கம் பாராது போராடிக்கொண்டிருக்கும் நம் ராணுவ வீரர்களைப் பற்றி இவர்களுக்குச் சிறிதளவும் கவலையில்லை.

ரோம் நகரம் எரிந்துகொண்டிருக்கும்போது, அதன் மன்னன் நீரோ ஃபிடில் வாசித்துக்கொண்டிருந்தான்” என்றொரு பழமொழி உண்டு. அன்று நீரோ செய்ததைத்தான் இன்று நம் அரசியல் தலைவர்கள் செய்து வருகின்றனர். நாடு அழிந்தால், தாங்களும் அத்துடன் அழிந்துவிட நேரிடுமே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், தொடர்ந்து நாட்டையும், மக்களையும் ஏமாற்றுவதிலேயே கவனமாக இருந்துவரும் இந்த அரசியல் தலைவர்களும் தேசத்துரோகிகள்தான்.

பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் ராணுவத் தலைமைச் செயலகம், பாராளுமன்றம் ஆகியவற்றைத் தாக்குவதற்காக பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டுவரும் லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதிகள் 20 பேர் நம் நாட்டினுள் நுழைந்திருப்பதாக உலக உளவு அமைப்புகள் எச்சரிக்கை செய்துள்ளன. பயங்கரவாதிகளிடம் மிகவும் நவீன தொழில் நுட்பங்கள் கொண்ட ஆயுதங்களும், வசதிகளும் உள்ளன. அவற்றைக் கொண்டு குறிப்பிட்ட தலைவர்களைக் கொல்வது (Target Killing) மிகவும் சுலபம். பிரதமர் நரேந்திர மோடி தானே வலிய பாகிஸ்தானுக்குச் சென்று, அந்நாட்டின் பிரதமரைக் கட்டித்தழுவிக் கொஞ்சிவிட்டுத் திரும்பியுள்ள சில நாட்களிலேயே மேற்கூறிய செய்திகள் வெளிவந்துள்ளன.

Intel Alert: LeT fidayeen could target PM, Army HQ

தங்களை ஏமாற்றிக் கொண்டு, மக்களையும் ஏமாற்றி வருவதில் இனியும் நம் நாட்டு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தொடர்ந்து ஈடுபட்டிருந்தால், நாடு மட்டுமல்ல, அவர்களும் அழிவது நிச்சயம். இது ஒன்றும் கற்பனையல்ல.

The Killer Tiger is at our Doors!

கவலையுடன்,
உங்கள் ஏ.எம்.ஆர்.

 

One thought on “பயங்கர ஆபத்தில் பாரதம்! – ஏ.எம்.ஆர்.

  1. Keshav Venkatraghavan January 12, 2016 at 2:05 PM Reply

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s