ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: ரிஷபம் – ஏ.எம்.ஆர்.


குடும்பம்:

நிகழும் ராசி மாறுதல் அனைத்து ராசியினருக்குமே அதிக கெடுபலன்களை விளைவிக்காது. சில ராசியினருக்கு சிரமங்கள் ஏற்பட்டாலும் அது அளவோடு நின்றுவிடும். இதற்கு முக்கிய காரணம், ஏற்கனவே குருபகவான் சிம்மராசியில் இருப்பதுவே ஆகும்.

குருபகவானின் ராசியில் இருந்தாலோ, அல்லது குருபகவானோடு சேர்ந்திருந்தாலோ ராகு தனது குரூர பலத்தை இழந்து விடுகிறார் என ஜோதிஷ கிரந்தங்கள் ஏகமனதாகக் கூறுகின்றன. ஆதலால், ராகுவின் சிம்மராசி சஞ்சார காலத்தைப் பற்றி நீங்கள் அதிகமாக கவலை கொள்ள வேண்டியதில்லை. இருப்பினும், அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் தோன்றக்கூடும். அதற்கேற்ற எளிய பரிகாரங்களைக் கீழே தந்திருக்கிறோம்.

சிறுசிறு உடல் உபாதைகள் அடிக்கடி ஏற்படுவதினால் உடலில் ஆயாசம் தோன்றும் என்றாலும் எளிய மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டி வரும். அதனால் சிறு அளவில் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படுவதால் மனநிம்மதி சற்று பாதிக்கப்படும். குழந்தைகளினால் சிறுசிறு சிரமங்கள் ஏற்படும் என்றாலும் அவை உடனுக்குடன் நிவர்த்தியாகும். வரவை விட செலவுகளே அதிகமாக இருக்கக்கூடும். ஆகவே தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்வது மிகவும் அவசியம். நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்து நீடிக்கும். பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவை அளவோடு இருக்கும்.

உத்தியோகம்:

ராசிக்கு 10-ம் இடத்தில் கேது நிற்பதால் அலுவலகப் பொறுப்புகளில் உற்சாகம் குறையும். காரணமில்லாமல் உத்தியோகத்தில் வெறுப்பும், விரக்தியும் உண்டாகும். மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். அடிக்கடி ஒய்வு எடுக்க மனம் விழையும். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தடைபடும்.

தொழில், வியாபாரம்:

நன்றாக நடந்து வந்த வியாபாரத்தில் முன்னேற்றம் தடைபடும். விற்பனையும், லாபமும் குறையும். சக கூட்டாளிகளினால் சிரமங்கள் ஏற்படும். சில தருணங்களில் நிதி நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிவரும். அனைத்து விஸ்தரிப்புத் திட்டங்களையும் தற்போதைக்கு நிறுத்தி வைத்துக்கொள்வது உங்கள் எதிர்கால நன்மைக்கு உகந்ததாகும். நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது.

மாணவமணிகள்:

இரு சாயா கிரகங்களின் இந்த ராசி மாறுதல் மாணவ-மாணவியருக்கு எவ்வித நன்மையையும் செய்யாது. அதற்கு மாறாக பாடங்களில் மனம் ஈடுபடாதவாறு பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபடாமல் விலகி நிற்பது உங்கள் எதிர்கால நன்மைக்கு உகந்ததாகும். விளையாட்டுகள், போட்டிகளில் இந்த ஒன்றரை வருட காலத்தில் கலந்து கொள்ளாமலிருப்பது நல்லது.

பெண்மணிகள்:

நீங்கள் பொறுமை, நிதானம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டிய கால-கட்டமிது என்பதை ராகு-கேது சஞ்சார நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. குடும்பத்தின் பொருளாதார நிலை சற்று பாதிக்கப்படுவதால், குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும் என்றாலும் அவை கட்டுக்கடங்கியே இருக்கும்.

பொருளாதாரம்:

பாலஹனுமான் வாசகர்களான ரிஷப ராசி அன்பர்களுக்கு ராகுவினால் அர்த்தாஷ்டக தோஷம் ஏற்பட்டிருப்பதால், வருமானத்திற்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். எனவே சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

ஆரோக்கியம்:

அடிக்கடி சிறுசிறு உடல் உபாதைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதனால் அன்றாட வாழ்க்கையில் விரக்தியும், உடல் பலவீனமும் ஏற்படும். தரமற்ற உணவு வகைகள் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

அறிவுரை:

1) ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். சிறு உடல் உபாதையானாலும், உடனடியாக மருத்துவரிடம் காட்டுங்கள்.

2) கைப்பணத்தை எண்ணி எண்ணிச் செலவழிக்கவும்.

3) குடும்பம், தொழில், வியாபாரம் ஆகியவை பற்றிய அனைத்திலும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பது நல்லது.

பரிகாரம்:

1) ராகுவின் அர்த்தாஷ்ட தோஷத்தைப் போக்குவதற்கு, மிகவும் சக்தி வாய்ந்த மேல்வெண்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மிநாராயணப் பெருமான் திருக் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வைத்து தரிசிப்பதும், திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்விப்பதும் மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.

2) பெண்மணிகள் ‘ஸ்ரீ அபிராமி அந்தாதி’, ‘ஸ்ரீ மீனாக்ஷி பஞ்ச ரத்தினம்’, ‘ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்திரம்’, ‘ஸ்ரீ தன்வந்திரி ஸ்தோத்திரம்’ ஆகியவற்றில் எவை முடிகிறதோ அவற்றை தினமும் படித்து வரவும்.

3) ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில், சூரியோதய காலத்தில் மண் அகல் தீபம் ஒன்றை கிழக்கு திசை நோக்கி ஏற்றி வருவது கைமேல் பலன் அளிக்கும்.

4) 24 சனிக்கிழமைகள் அவரவர் ஊர்களில் உள்ள அம்பிகை அல்லது தாயார் அல்லது நவக்கிரகங்கள் சந்நிதியில் மாலையில் தீபமேற்றி தரிசித்து வரவும். ராகுவினால் ஏற்படும் அர்த்தாஷ்டக தோஷத்தைப் போக்க வல்ல சக்தி வாய்ந்த பரிகாரங்கள் இவை.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s