ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷம் – ஏ.எம்.ஆர்.


குடும்பம்:

உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சனி சஞ்சரிக்கும் நிலையில், ராகு ராசிக்கு 5-ம் இடமாகிய சிம்மத்திற்கும் கேது 11-ம் இடமாகிய கும்பத்திற்கும் மாறுகின்றனர். ஜோதிடக் கலையின் விதிகளின்படி, ராசிக்கு ஐந்தாம் இடத்தில் ராகு சஞ்சரிப்பது நட்பு நிலையை அளிக்காது. இருப்பினும், சிம்ம ராசியில் குருவும் சேர்ந்திருக்கும் காரணத்தினால், ராகுவினால் ஏற்படும் தோஷம் பெருமளவில் குறைகிறது.

காரணம் இல்லாமல் மனதில் கவலை, கற்பனையான பயம் ஆகியவை ஏற்படும். எதிர்பாராத செலவினங்களினால் கைப்பணம் விரயமாகும். இருப்பினும், கேதுவின் கும்ப ராசி சஞ்சாரம் மிகவும் அனுகூலமாக இருப்பதால், பண நெருக்கடி ஏற்படும்போதெல்லாம், சிறு முயற்சிகளினால் உதவிகள் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை நிலவும். சிறுசிறு உடல் உபாதைகள் அவ்வப்போது ஏற்படுக்கூடும். என்றாலும், குருபகவானின் நிலையினால், சாதாரண மருந்துகளினால் உடனுக்குடன் குணமேற்படும். விவாக வயதிலிருக்கும் மேஷ ராசி அன்பர்களுக்குத் திருமணதிற்கான வரன் தேடுதலில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். நீதிமன்ற வழக்குகள் நீடித்தாலும், இறுதியில் நியாயம் கிடைக்கும்.

உத்தியோகம்:

தொழிலுக்கு காரகத்துவம் பெற்றுள்ள சனிபகவான் ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகிய விருச்சிக ராசியில் சஞ்சரிப்பதால், அலுவலகப் பொறுப்புகள் கூடும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்புக் குறையும். சக ஊழியர்களினால் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே தேவையற்ற விவாதங்களில் இறங்காமலிருப்பது நல்லது. சிலருக்கு ஊர் மாற்றம் அல்லது தற்போதுள்ள பொறுப்புகளில் மாறுதல் ஏற்படக்கூடும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் மேஷ ராசி அன்பர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தொழில், வியாபாரம்:

ராகுவின் நிலையினால் அவ்வப்போது பணப் பிரச்சினை ஏற்படக்கூடும். ஏற்றுமதி-இறக்குமதித் துறையினருக்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைப்பதில் தடங்கலும், தாமதமும் ஏற்படும். உற்பத்திக்கு அவசியமான அடிப்படைப் பொருட்கள் கிடைப்பதில் அதிக பணம் விரயமாகும். இருப்பினும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் முன்னேற்றம் பாதிக்கப்படும் அளவிற்கு நிதிப் பற்றாக்குறை இருக்காது. நிதி நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய உதவிகளில் சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் கிடைக்கும்.

மாணவமணிகள்:

கல்விக்கு அதிபதி புதன் ஆவார். அவருடைய ராசியான கன்னியில்தான்  இதுவரை ராகு இருந்திருக்கிறார். இனி, சிம்மத்திற்கு மாறுவதால் உங்களின் கல்வி முன்னேற்றம் தடைபடாமல் நீடிக்கும். இருப்பினும், ஒரு விஷயத்தில் நீங்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்பதையும் ராகுவின் நிலை குறிப்பிடுகிறது. கூடியவரையில் சக மாணவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்கவும். அப்படி செயல்பட்டால் கல்வியில் தடைபடாத முன்னேற்றம் ஏற்படும்.

பெண்மணிகள்:

குருபகவான் ராகுவுடன் சிம்ம ராசியில் சேர்ந்திருப்பதால், தற்போது நிகழும் ராகுவின் சிம்ம ராசி சஞ்சாரத்தைப் பற்றி நீங்கள் அதிகமாக கவலைப்பட வேண்டாம். சிரமங்கள் அளவோடு இருக்கும். தேவையற்ற கவலைகளைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கும் அலுவலக சூழல் திருப்தி தரும் வகையில் இருக்கும்.

பொருளாதாரம்:
அதிக செலவுகள் இருப்பினும், கடன் வாங்க வேண்டிய அவசியமோ அல்லது சூழ்நிலையோ ஏற்படாது. பொருளாதார நிலை நல்லபடி இருக்கும்.

ஆரோக்கியம்:
இந்த ஒரு விஷயத்தில் நீங்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. இருப்பினும் விபரீத அளவிற்கு பிரச்சினைகள் ஏற்பட சாத்தியக்கூறு இல்லை.

அறிவுரை:
1. வீண் செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கவும்.

2. தொழில் மற்றும் வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றில் சற்று எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.

பரிகாரம்:

1. தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் ‘ஸ்ரீ அனுமன் சாலிசா’ சொல்லி ஸ்ரீ அஞ்சனை மைந்தனைப் பூஜித்து வரவும்.

2. பெண்மணிகள் காலையில் ஸ்நானம் செய்த பின்பு ஒரு தசகம் ‘ஸ்ரீமன் நாராயணீயம்’ பாராயணம் செய்து வரவும்.

3. ஆண்கள் ‘ஆதித்ய ஹ்ருதயம்’ சொல்லி வந்தால், ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கு பிரத்யட்சப் பலனைத் தரும்.

4. மாணவ மாணவிகள் காலை, மாலை இரு வேளைகளிலும் ‘ஸ்ரீ ஹயக்ரீவர்’ ஸ்தோத்திரத்தைப் படித்துவர வேண்டும்.

5. தினமும் காலையில் ஸ்நானம் செய்த பின்பு உங்கள் இஷ்ட தெய்வத்தையும், பித்ருக்களையும் மனத்தால் பூஜித்து வாருங்கள்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

One thought on “ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்: மேஷம் – ஏ.எம்.ஆர்.

  1. nparamasivam1951 January 8, 2016 at 10:38 AM Reply

    நன்றி. குமுதத்திற்கும் பாலஹனுமான் தளத்திற்கும் மற்றும் திரு ஏ.எம்.ஆர். அவர்களுக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s