ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா!


கோதை பிறந்த ஊர் – கோபாலன் வாழும் ஊர்

ஆயர்பாடி சோதி மணிமாடம் தோன்றிய ஊர்

என்ற புகழ்பெற்ற 99வது திவ்யதேசமான ஸ்ரீவில்லிபுத்தூர், வைணவ ஆழ்வார்கள் பன்னிருவரில், பெரியாழ்வார், ஆண்டாள் இவர்களின் அவதார ஸ்தலம்.

Andal

‘வில்லி’ என்ற வேடனால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தலமாதலால், அவன் பெயரால் வில்லிபுத்தூர்” என்றாயிற்று. கறவைப் பசுக்கள் கணக்கிடங்கா இருந்த இடமாதலால், பால், தயிர், வெண்ணெய் போன்ற ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு பிடித்தமான பொருட்கள் அதிகம் இருக்கும் ஊர்! அதனால் நாளடைவில் பால்கோவா தயாரிக்கும் எண்ணம் தோன்றி அத்தொழில் தற்போது மிகவும் சீரும் சிறப்புடனும் நடை பெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா தயாரிக்கப்படும் இனிமையான தருணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மேனேஜர் ராஜா, 1945 ஆம் வருடம் ஆரம்பித்த இச்சங்கத்தை பற்றி கூறிவிட்டு, பின் என்னை பால்கோவா தயாரிக்கப்படும் இடத்திற்கே அழைத்துச் சென்றார். ‘சீர்த்த முலை பற்றி – வாங்க குடம் நிறைக்கும் – வள்ளல் பெரும் பசுக்களின்’ – மடியிலிருந்து கறந்த பாலின் மணம் ஒரு பக்கம், கிளறும் பாலின் மணம் மறுபக்கம் என்று அந்தப் பால்கோவாவின் வாசனை நாவில் நீர் ஊற வைத்து, ஒரு நிமிடம் நான், ஆயர்பாடியில் இருப்பதைப்போல் உணர்ந்தேன்.

ஆரம்பக் காலத்தில் பாலும் சர்க்கரையும் சேர்த்து உருண்டையாகச் செய்தார்களாம். பின் காலப்போக்கில் ‘உருண்டை’ மாறி, இப்போது நமக்குக் கிடைக்கும் வசதியான சிறுசிறு காகிதப் பாக்கெட்டில் கிடைக்கிறது பால்கோவா. அனலடிக்கும் அவ்விடத்தில் பாலைக் காய்ச்ச புளியங்கட்டை விறகையே உபயோகிக்கின்றனர். ஆம்! 5 நிமிடம் கூட அந்த அனல் அருகே நிற்க முடியவில்லை. அவ்வளவு சூடு.

இந்தச் சூட்டில் நின்றுதான் நாம் சுவைக்கும் உயர்தர பால்கோவாவுக்காக, மணிக்கணக்கில் பாலையும், சர்க்கரையும் சேர்த்துக் கிளறுகின்றனர். 10 லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ சர்க்கரை கலந்து கைவிடாமல் கிளறி தயாரித்து அங்கிருக்கும் ட்ரேயில் கொட்டி விடுகின்றனர். செயற்கை நிறங்கள் எதுவும் சேர்க்காத இந்தப் பால்கோவா நன்கு ஆறியவுடன், பாக்கெட் செய்யும் பதத்துக்கு வந்து விடுகிறது.

பாக்கெட் செய்யும் அழகோ அழகு! எடைக் கருவியில் பட்டர் பேப்பரை வைத்து, கரண்டியால் பால்கோவாவை ‘டக்’ கென்று போட, முள் துல்லியமாக 150 கிராம், 200 கிராம் என்று காட்டுகிறது. பின் அக்காகிதத்தை, லாவகமாக மடித்து, மெலிதான பாக்கெட்டில் வைக்க ‘ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா’ பாக்கெட், கடைகளை அலங்கரிக்கிறது.

அந்த மணல் மணலான கலவையும், உயர்தர பாலின் மணமும், ரொம்ப திகட்டவும் இல்லாமல், அதே சமயம் ரொம்ப குறைவாகவும் இல்லாமல், சரியான விகிதத்தில் கலந்த சர்க்கரையும், நம்மை பால்கோவா பாக்கெட்டுகளை டஜன் கணக்கில் வாங்க வைக்கின்றன.

ஸ்ரீ ஆண்டாளின் கரம் பற்றிய கோபாலன் வாழும் ஊருக்குச் சென்று கோயிலை தரிசனம் செய்து, பின் பால்கோவாவையும் வாங்கி உண்டு மகிழுங்கள்!

அனுபவம் : ராகேஷ் ரகுநாதன்

எழுத்து : ரமா ரகுநாதன்

–நன்றி மங்கையர் மலர்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா – கடல் பயணங்கள் சுரேஷ் குமார் பார்வையில்…

Advertisements

2 thoughts on “ஸ்ரீ வில்லிபுத்தூர் பால்கோவா!

  1. rathnavelnatarajan December 18, 2015 at 1:48 AM Reply

    மிக்க நன்றி சார். நாங்கள் தினம் நடைப்பயிற்சி செய்வது அந்த கூட்டுறவு பால் பண்ணை முன்பு தான். இவர்கள் தான் பால் கோவா தயாரிப்புக்கு முன்னோடி. இங்கு பால் கோவா தயாரிப்பு வைத்திருபவர்களில் நிறைய பேர் இங்கு பணிபுரிந்தவர்கள், அல்லது சம்பந்தப்பட்டவர்கள். மகிழ்ச்சி சார்.

  2. BaalHanuman December 18, 2015 at 4:08 PM Reply

    நன்றி ரத்னவேல் சார், உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s