கத்திரிக்காயும் கொத்தமல்லியும் – பாக்கியம் ராமசாமி


ஒரு கிலோ கத்திரிக்காயின் இன்றைய ரூ. 143. அந்தக் காலத்தில் மாவட்ட மேலதிகாரியின் (கலெக்டரின்) மாத சம்பளமே நூறு ரூபாய் என்பார்கள்.

கதைகளில் ‘மாப்பிள்ளைக்கு கை நிறைய சம்பளம். முழுசாக நூறு ரூபாய் வாங்குகிறார்‘ என்றெல்லாம் வரும்.

கத்தரிக்காய் என்பது காய்களிலேயே மலிவான காய் என்று பெயரெடுத்தது. அந்தக் கத்தரிக்காய்க்கும் இப்படியொரு காலம் வந்து கிலோ 143 ரூபாய்க்கு விற்கிறது.

எவ்வளவு மட்டமான நிலையில் ஒருத்தர் இருந்தாலும் அவருக்கும் ஒரு காலம் வரும் என்பதை கத்தரிக்காய் நிரூபித்துவிட்டது.

பொருள்களின் விலை ஏறிக்கொண்டு போவது, நல்லவர்களைக்கூட கெட்டவர்களாக மாற்றிவிடுகிறது.

என் மாமா பரம நல்லவர். இருதினம் முன்பு காய் வாங்கப் போனார். ஒரு கட்டுக் கொத்தமல்லி ரூபாய் 25 (இருபத்தைந்து) என்பதைக் கேட்டு அசந்து போனார்.

கொத்தமல்லி கட்டு வாங்காமல் அருகிலிருந்த கீரைக் கட்டு வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார்.

அவர் முகத்தில் தெரிந்த வெற்றிப் புன்னகைக்கு என்ன காரணம் என்பது கீரைக் கட்டைப் பிரித்ததும்தான் தெரிந்தது. கீரைக் கட்டுக்குள் சிறிய கொத்தமல்லி கட்டு ஒளிந்துகொண்டது. (மாமாவின் கடத்தல்!)

மாமா இந்த அல்ப மோசடியை ஏன் செய்தார். துளியூண்டு கொத்தமல்லிக் கட்டின் விலை ரூபாய் இருபத்தைந்து என்பதால்தானே.

நார்மல் நல்லவர்களைக்கூட விலைவாசி நாணயமற்றவர்களாக மாற்றி விடுகிறது.

One thought on “கத்திரிக்காயும் கொத்தமல்லியும் – பாக்கியம் ராமசாமி

  1. Karunaharamoorthy.P December 9, 2015 at 12:47 PM Reply

    கறிவேப்பிலையோ/கொத்தமல்லிக்கட்டோ விலை ஏறிவிட்டது என்பதற்காக அதைத்திருடிக்கொண்டுவருவதும், அதற்கான பழியை விலைவாசிமேல் போடுவதும் அறம் சார்ந்த விடயங்கள் அல்ல. திருட்டுப்புத்தி எப்போதுமே மனைதனிடம் இருப்பதுதான், சந்தர்ப்பம் வாய்த்தவன் திருடுகிறான், வாய்க்காதவன் நல்லவனாகத்தோற்றம் தருகிறான். அவ்வளவே,………………!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s