மதுரை கோபி ஐயங்கார் கடை வெள்ளையப்பம், கார சட்னி!


மூடியிருந்த அக்கடை வாசலில் திருவிழா தேர்க்கூட்டம்போல் பெரியவர்கள் முதல் இளவயதினர் வரை கடைக் கதவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி நமக்கு புரியாத புதிராக இருக்கிறது. சரியாக மதியம் 3 மணிக்கு கதவு திறந்தவுடன், ஆஹா! மூக்கைத் துளைக்கும் வாசனை! மதுரைக்கே பெருமைசேர்க்கும் மற்றுமொரு சிற்றுண்டி கடைதான் ‘கோபி ஐயங்கார் * கடை!

எனக்கு 6 வெள்ளையப்பம், கார சட்னி எக்ஸ்ட்ரா வேண்டும்” எனக்கு 10 கார சட்னி எக்ஸ்ட்ரா” என்ற கூக்குரல்களுக்கு இடையே முண்டியடித்து கூட்டத்தைக் கடந்து நாக்கில் நீர் ஊற அந்த வெள்ளையப்பத்தை ருசி பார்க்க நுழைகிறோம்.

காரைக்குடி மக்கள் செய்யும் வெள்ளை அப்பத்திற்கும், மங்களூர் போண்டாவுக்கும் நடுத்தரமாகச் செய்யப்படும் இந்த வெள்ளை அப்பம் – கார சட்னி அபாரம் அபாரம்!

மீனாட்சி அம்மன் கோயிலின் அருகில் இருக்கும் இக்கடை, கோபி ஐயங்கார் என்பவரால் 50 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. கையால் வரையப்பட்ட சித்திரங்களை மிக நேர்த்தியாகச் சுவரில் மாட்டியுள்ளனர். அக்கடையில் உள்ள மிகப் பழமையான (antique) மேஜை, நாற்காலிகள் கூட சுவைக்கு உத்தரவாதம் பேசுகின்றன!

அழகான கரும்பலகையில் வெள்ளை சாக்பீஸைக் கொண்டு அன்றைய ஸ்பெஷல் இனிப்பு வகைகளை எழுதி விடுகிறார்கள். மளிகை சாமான்களின் உயர்தர வகைகளை வாங்கி, வெயிலில் உலர்த்தி, இடித்துப் பொடி வகைகளை ஃப்ரெஷாகத் தயாரிக்கிறார்கள். இங்கு பாக்கெட் பொருட்களை என்றுமே உபயோகிப்பதில்லை.

கோபி ஐயங்கார்’ மேனேஜர் ராமமூர்த்தியுடன் பேசும்போது, ‘வெள்ளையப்பம் கார சட்னி’ தயாரிக்கும் முறை பற்றி ரொம்ப ஜாக்கிரதையாக சிறிதளவே சொல்கிறார்! (ட்ரேட் சீக்ரெட் போல!)

பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து – இவற்றை சம அளவில் 3 மணி நேரம் ஊறவைத்து, பின் அரைக்க வேண்டும். உப்பு சேர்த்து கொதிக்கும் எண்ணெய்யில் குழி கரண்டியால் ஊற்ற வேண்டும்.

வெள்ளை அப்பத்தை விட, மக்கள் மிகவும் ருசிப்பது, அதன் பக்கவாத்தியமான கார சட்னியைத் தான். கார சட்னி தீர்ந்து விட்டால் வெள்ளை அப்பம் துணை இல்லாமல் தவிக்கும்! கார சட்னி என்றால் நமக்குத் தக்காளி, வெங்காயம், வரமிளகாய் சேர்த்து அரைத்த சிவந்த சட்னிதானே! ஆனால் கோபி ஐயங்கார் கார சட்னியோ தனித்துவம் பெற்றது. 1 கிலோ பச்சை மிளகாயும், 1 தேங்காயும், அரை கிலோ ஊறவைத்த கடலைப் பருப்பும் சேர்த்து அரைத்த ‘பீரங்கி’ என்று சொல்லலாம்.

இவ்வளவு காரம் சாப்பிட்ட வாய்க்கு ருசியாக, இதமாக உடனே ஜீரா போளியோ, இல்லை சொஜ்ஜி அப்பமோ சாப்பிட்டால் சொர்க்கம்தான் போங்கள்!

ஆ… கடை மூடப்படுகிறதே! அப்போது சரியாக மணி ஏழு இருக்கணும். ஆம், மதியம் 3 மணியிலிருந்து மாலை 7 மணி வரைதான் இக்கடை இயங்கும்.

மூன்றாவது தலைமுறையைக் கண்ட இந்த உணவகம் பாரம்பரியச் சுவையிலும், தரத்திலும், உபசாரத்திலும் சிறிதளவும் மாறாமல், கடந்த 50 வருடங்களாக வெற்றியுடன் செயல்படுகிறது. கர்ம வீரர் காமராஜர் மற்றும் பல பெரிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பலருக்கும் இது ஒரு ஃபேவரிட் உணவகமாக இருந்தது. இன்னும் இருக்கிறது.

இப்போதுள்ள ‘துரித உணவு’ கால கட்டத்தில், வீதிக்கு 4 துரித உணவகங்கள் என்ற நிலையில், ‘துருவ’ நட்சத்திரமாக மிளிரும் ‘கோபி ஐயங்கார் உணவகத்தை’ மிஸ் பண்ணிடாதீங்க!

அனுபவம் : ராகேஷ் ரகுநாதன்

எழுத்து : ரமா ரகுநாதன்

-நன்றி மங்கையர் மலர்

Advertisements

10 thoughts on “மதுரை கோபி ஐயங்கார் கடை வெள்ளையப்பம், கார சட்னி!

 1. ஸ்ரீராம் November 21, 2015 at 2:37 AM Reply

  நான் இந்தக் கடையின் ரசிகனாக்கும்! கடையின் தோற்றம் மேம்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. இந்தக் கடையின் சீவல் தோசைக்கு நான் அடிமை!

  • BaalHanuman November 21, 2015 at 3:01 AM Reply

   சூப்பர் ஸ்ரீராம். நீங்கள் குறிப்பிட்டுள்ள சீவல் தோசை மெனுவில் காணோமே 🙂

   • ஸ்ரீராம் November 21, 2015 at 3:18 AM

    தினசரி மெனு வில் குறிப்பிடவில்லை. இப்போது இது தயார் செய்கிறார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் எப்போது கேட்டாலும் செய்து தருவார்கள். மற்ற ஹோட்டல் பேப்பர் ரோஸ்ட்டின் மேம்பட்ட வடிவம்! சமீபத்தில் எங்கள் ப்ளாக் திங்கறகிழமையில் கூட குறிப்பிட்டிருந்தேன். தோசையை ஊற்றி, ஊற்றியவுடன் படியும் இழை தவிர மற்ற மாவை வழித்து எடுத்து விடுவார்கள். தொட்டுக் கொள்ள எதுவுமே தேவை இல்லை. ஆனால் தொட்டுக் கொள்ளத் தரும் சட்னியை மிஸ் பண்ணவும் முடியாது. இரண்டு வாயில் ஒரு தோசையைச் சாப்பிட்டு விடலாம். எவ்வளவு சாப்பிட்டாலும் நிறைவு இருக்காது. ஆனால் பர்ஸ் எச்சரிக்கும்! அந்தக் கடைப் பக்கம் போய் பல வருடங்கள் ஆகி விட்டன!

    வெள்ளை அப்பம் ஸ்பெஷல் என்பதைத் தீர்மானிப்பது அந்தக் கார சட்னிதான். மதுரையில் சொக்கிக் குளத்தில் இருக்கும் நாராயணா ரெஸ்டாரென்ட்டில் கூட (இதற்கு மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் ஒரு கிளையும் உண்டு) வெள்ளை அப்பம் நன்றாயிருக்கும். ஆனால் தொட்டுக் கொள்ள தரும் சட்னி கோபி ஐயங்கார்க் கடைக்கு ஈடாகாது!

 2. prasath s November 21, 2015 at 4:11 PM Reply

  கடையின் விலாசம் சொன்னால் த்ன்யனாவேன். அடுத்து மதுரை செல்லும்போது உங்களுக்கும் பார்சல் வாங்கிவருகிறேன்

  • BaalHanuman November 21, 2015 at 4:37 PM Reply

   Are you sure ? நான் இருப்பதோ அமெரிக்காவில் 🙂

 3. அருண் குமார். கா November 21, 2015 at 4:42 PM Reply

  ‘பழைய டில்லி’ என்றழைக்கப்படும் சாந்தினி சௌக் போலவே இங்கும் ரசனையான உணவுகள் உண்டு. ஜங்ஷன் எதிரே உள்ளே பிரேமவிலாஸ் அல்வாதான் மதுரையின் சிறந்த அல்வா என்று சொல்லுபவர்கள் யாரும் நாகப்பட்டினக்கடை அல்வாவை சுவைத்திருக்க மாட்டார்கள். மேலக்கோபுர வாசலில் உள்ளது இந்தக்கடை. 112 ஆண்டுகளுக்கு மேலாக அதே இடத்தில் இயங்கி வரும் இந்தக்கடை அல்வா , இருட்டு கடை அல்வா போலவே சிலமணி நேரத்தில் விற்றுத்தீர்ந்து விடும். முற்றிலும் நெய்யினால் செய்யப்பட்ட இந்த அல்வாவை தாமரை இலையில் சுடச்சுட கட்டி தருவார்கள். அதே போல் அவர்களது காராச்சேவும் (காதில் புகை வரும் அளவுக்கு காரமாக இருக்கும்! ) பிரமாதமாக இருக்கும்.

  ஒன்னாம் நம்பர் சந்தின் அருகே உள்ளே ‘மூலக்கிளப்பு’ கடையும் மிகப்பிரசித்தம். மேலச்சித்திரை வீதியும் வடக்குச்சித்திரை வீதியும் சந்திக்கும் மூலையில் உள்ள ‘கிளப்பு’ கடை என்பதால் அந்தப்பெயர் (அந்தக்காலத்தில் ஹோட்டல்களை ‘Club’ / கிளப்பு கடை என்றே அழைத்தனர் ). “கோபி அய்யங்கார் கடை” என்று பெயர்ப்பலகையில் இருந்தாலும் கூட யாரும் அந்த பெயரில் கடையை அழைப்பதில்லை. இந்தக்கடையில் கிடைக்கும் வெள்ளை அப்பத்தை சாப்பிடுவதற்காகவே கோவிலுக்கு வருபவர்கள் உண்டு. மிளகும் சீரகமும் தாரளமாக போடப்பட்ட அந்த வெள்ளையப்பமும், அதன் அருகே உள்ளே விசாலம் கடையின் காபியும் – Heavenly Combination ! சிறுவனாக இருக்கும் போது ஒரு அப்பம் காலணாவுக்கு வாங்கியதாக ஞாபகம். இங்கேயும் தாமரை இலையில் தான் கட்டித்தருவார்கள். அதனுடன் அவர்கள் தரும் பச்சை மிளகாய் சட்டினியின் காரம் உச்சி மண்டையை துளைக்கும். ஒன்னாம் நம்பர் சந்தின் அந்தக்கடைசியில், அதாவது வடக்காவணிமூல வீதியில் உள்ள வண்டிக்கடையிலும் வடைகள் பிரமாதமாக இருக்கும். புதுமண்டபம் அருகே இருந்த(!) சிவசக்தி பவன், மேலக்கோபுர வீதியில் உள்ள டெல்லிவாலா, ஹாஜிமூசா வாசலில் கிடைக்கும் எள்ளு மிட்டாய் என கோவிலைச்சுத்தி உள்ள வீதிகளில் அமர்க்களமான உணவுகள் கிடைக்கும்.

 4. kashyapan November 29, 2015 at 2:20 PM Reply

  அறுபது வயசுக்கு மெலஓய்வு பெற்ற கிழடுகட்டைகள் மூணுமணீக்கு கிளம்பிரும்.நாக்கு செத்து போன வங்களுக்குகார சாரமா வீட்ல செஞ்சா தரவாங்க கோபி ஐயங்கார் சட்னிக்கு நாக்க தொங்க போட்டுக்கிட்டு வருவாங்க. சட்னி வாயில மட்டுமல்ல கீழ்வாயிலயும் உரைக்கும். அதை தின்னுப்போட்டு காபிய குடிச்சிப்போட்டு மேல் துண்டால தொடைச்சிக்கிட்டு கிழடுகள் வர அழகே தனீ.. வயத்த கலக்கினாலும் சொல்ல மாட்டாங்க. சொன்னா பாட்டி மட்டுமல்ல பேரன் பேத்தி நு அடிப்பாங்க ! ஒண்ணம் நம்பர் சந்துல தான் “தீக்கதிர்” ஆபிஸ் இருந்தது. கோபி ஐயங்கார் கடைக்கு பக்கத்துல தான் காங்கிரஸ் கமிட்டி ஆபிசும் இருந்தது.மாநில தலவர்கள் கோபி ஐயங்கார் கடை பலகாரம் சாப்பிடாம மதுரையை விட்டு நகரமாட்டாங்க .தகவலுக்காக —காஸ்யபன்.

 5. N.Rathna Vel November 29, 2015 at 4:08 PM Reply

  மதுரை கோபி ஐயங்கார் கடை வெள்ளையப்பம், கார சட்னி! = ரசனையான ருசியான பதிவு. நன்றி சார்.

 6. sugadev November 29, 2015 at 5:20 PM Reply

  This hotel is at mela hanmandarayan street on Dindugal Road ( Nethaji Salai) . Is it correct? This street is near Thangamayil jewellers/opposite to Modern Restaraurent..

 7. S.RAJA RAJESWERI November 30, 2015 at 6:58 AM Reply

  Intha kadai vellaiappam and Kaarachatni with nagapattinatthan kadai alwa than anakku romba pidikum,Now iam in Chennai.but twenty years before enga thatha anakku two times once eveningla ethuthan ennoda pottlum(now ..Snacks) Raja bakery biscuits also I like.
  now Iam 44 years old.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s