ஆன்மீக ராமானுஜரை அரசியல் ராமானுஜராக சித்தரிக்க வேண்டாம்! – ஏ.எம்.ஆர்


பகவானைப் பற்றியோ அல்லது மகான்கள், சாதுக்கள், அவதார புருஷர்கள், மகாத்மாக்கள், சித்த புருஷர்கள் ஆகியோரைப் பற்றியோ அல்லது அவர்களது திவ்ய சரித்திரத்தைப் பற்றியோ எழுத வேண்டும் என்றால், அதற்கான குறைந்தபட்ச அடிப்படைத் தகுதிகள் வேண்டும். 

அத்தகைய தகுதிகள் என்ன என்பதைப் பற்றி நம் ஆன்றோர்களும், சான்றோர்களும் அருளியுள்ளனர். தெய்வபக்தி, நமது கலாசாரம், பண்பு, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றில் நம்பிக்கை, நமது பாரதப் புண்ணிய பூமியின் சென்ற கால தெய்வீகச் சரித்திரம், நமது தர்ம நெறிமுறையை காப்பாற்றுவதற்காக ஏராளமான மகான்களும், மன்னர்களும், வீரர்களும் புரிந்துள்ள தியாகங்கள் ஆகியவற்றை நன்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

ஸ்ரீமத் மகாபாரதத்தையும், ஸ்ரீமத் பாகவதத்தையும் மகரிஷி வியாசரால்தான் எழுத முடியும். இதிகாச ரத்தினம் எனப் பூஜிக்கப்படும் ஸ்ரீமத் ராமாயணத்தை வால்மீகி மகரிஷியினால் மட்டும்தான் எழுத முடியும். திருக்குறளை வள்ளுவப் பெருமானால் மட்டும்தான் வடித்திருக்க முடியும். பிரபல அரசியல் தலைவர் ஒருவர் எழுதும் ஸ்ரீமத் ராமானுஜரின் சரித்திரம், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொடர் ஒளிபரப்பாக ஒளிபரப்பப்போவதாக விளம்பரம் செய்து வந்த போதிலிருந்தே, அது எப்படி இருக்கும் என்பதை ஊகித்துப் பார்க்க முடிந்தது.

இந்து மதத்தின் மீதும், ஸ்ரீ ராமபிரான் மீதும் காலம் காலமாக துவேஷத்தையே விஷமாகப் பரப்பி வருபவரும், தீவிர நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வருபவருமான இந்த அரசியல் தலைவர், ஏன் அவதார புருஷரும், வைணவ சம்பிரதாயத்தின் உயிர்மூச்சாக விளங்குபவருமான ஸ்ரீமத் ராமானுஜரைப் பற்றி எழுத முன்வந்திருக்கிறார் எனப் பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

நாத்திகம் என்ற விஷ விதையை புனிதமான தமிழ் மண்ணில் விதைத்து , காழ்ப்புணர்ச்சி என்னும் தண்ணீரைப் பாய்ச்சி அதனை விஷவிருட்சமாக வளர்த்து, அதன் மூலம் தன்னையும், தங்கள் குடும்பத்தையும் வளர்த்துக் கொண்டிருப்புவர்களுக்கு ஸ்ரீமத் ராமானுஜரைப் போன்ற அவதார புருஷர்களைப் பற்றி எழுதுவதற்கு என்ன தகுதியுள்ளது ?  மகாபுருஷரான ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவை உலகம் கொண்டாட இருக்கும் இத்தருணத்தில், இந்த அரசியல் தலைவர் தனது கொள்கைகளுக்கு முற்றிலும் மாறான ஒரு மகானைப்பற்றி எழுதி, அதனை தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்ப முன்வந்திருப்பதின் நோக்கத்தைப் புரிந்து கொள்வது அப்படி ஒன்றும் கடினமானது அல்ல.

ஸ்ரீமத் ராமானுஜரின் வாழ்க்கைச் சரித்திரத்தை தனது கொள்கைகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து, அதனைத் தனது கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி மூலம் பிரசாரப்படுத்துவதே இத்தொடர் ஒளிபரப்பின் நோக்கம் என்பது அனைவருக்கும் தெரியும்.

30-06-2015 அன்றைய இரவு தொலைக்காட்சியில்…

நாத்திகக் கொள்கைகளிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்தவர்கள் எழுதினால் இத்தகைய புனிதமான புண்ணிய சரித்திரங்கள் எவ்விதம் மக்களிடையே திரித்துப் பிரசாரப்படுத்தப்படும் என்பதை தெரிந்து கொள்ள, 30-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று இரவு அந்த தனியார் தொலைக்காட்சியில் ஸ்ரீமத் ராமானுஜர் தொடர் ஒளிபரப்பில் காண்பிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி ஒன்றே போதும்,

நெற்றியில் ‘பளிச்’சென்று திருநாமம் இட்டுக்கொண்டுள்ள, குடுமி வைத்த ஒரு ஸ்ரீவைணவ இளைஞர், அழகான ஒரு இளம்பெண்ணை பார்த்து பல்லைக் காட்டுவதும், அவளைப் பின்தொடர்ந்து செல்வது போன்றும் அக்காட்சி காட்டப்பட்டது. அந்த இளம்பெண் சற்று தூரத்திற்கு சென்று விட்டார்.

ஆனால், அப்பெண் தனக்கு பக்கத்தில் இருப்பதாக நினைத்த அந்த வைணவ இளைஞர் தன் அருகில் இருந்த மூதாட்டி ஒருவரைக் கட்டி அணைத்து, கொஞ்சுவதாகக் காட்சி அமைந்திருந்தது. அதனால் வெகுண்ட அந்த மூதாட்டி அந்த வைணவ இளைஞரை நையப் புடைக்கிறார். அந்த மூதாட்டியுடன் அங்கு அருகிலிருந்த வேறு சில பெண்மணிகளும் சேர்ந்து கொண்டு அந்த வைணவ இளைஞரை செம்மையாக அடிப்பதாக அக்காட்சி அமைந்திருந்தது.

இதுபோன்றே, தாகத்தினால் வருந்திய திருக்கச்சி நம்பிகளுக்கு தாகம் தணிய தண்ணீர் கொடுக்க ஸ்ரீமத் ராமானுஜரின் தாயார் மறுப்பதுபோல் ஒரு காட்சியும் காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீமத் ராமானுஜர் எனும் ஒரு மகத்தான அவதாரபுருஷரைத் தன் வயிற்றில் சுமந்து பெற்ற ஓர் தெய்வீக அன்னை, இந்த அளவிற்கு நெஞ்சில் ஈரமற்றவராக இருந்திருக்க முடியாது. இது பிற்காலத்தில் தங்கள் சுயநலத்திற்காக சிலரால் சேர்க்கப்பட்ட கட்டுக்கதையாகத்தானிருக்க முடியும். அவதார புருஷர்கள் அன்பு, பக்தி ஆகியவற்றினால் உயர்ந்த உத்தம ஸ்திரீகளின் கர்ப்பத்தில்தான் அவதரிப்பார்கள். ஸ்ரீமத் ராமானுஜர் ஸ்ரீராமபிரானின் தம்பியான ஸ்ரீ லட்சுமண சுவாமியின் அவதாரமென கோடான கோடி மக்களால் பூஜிக்கப்படும் அவதார புருஷர். ஸ்ரீ ராமபிரானையே கேவலமாகத் தூற்றிய இந்த அரசியல் தலைவர் எழுதும் கதை வேறு எவ்விதம் இருக்க முடியும்?

13-07-2015 அன்று…!

இவை போன்றே, 13-07-2015 அன்றைய ஒளிபரப்பில், சிறுவன் ஸ்ரீமத் ராமானுஜருக்கு உபநயனம் (பூணூல் போடுவது) வைபவத்தை வைத்து, மக்களிடையே துவேஷத்தைத் தூண்டிவிடும், விஷமத்தனமான, முற்றிலும் ஆதாரமற்ற ஒரு காட்சி காட்டப்பட்டது. மற்ற குழந்தைகளுடன் சமமாக விளையாடுவதற்கு பூணூல் தடையாக இருப்பதாக சிறுவன் ஸ்ரீமத் ராமானுஜரே கூறுவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இது முற்றிலும் கற்பனையானதே!

இதன் நோக்கம் என்ன என்பதை மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். இந்து சமுதாயத்தை கேவலப்படுத்துவதும், விரசமான காட்சிகளை பரம பவித்ரமான ஸ்ரீமத் ராமானுஜரின் திவ்ய சரித்திரத்தில் காண்பிப்பதும், எத்தகைய கேவலமான செயல் என்பதை, இந்த வயோதிக காலத்திலும் கூட இந்த அரசியல் தலைவர் புரிந்து கொள்ளவில்லையே!  நல்ல திறமையும், தமிழ்மொழியில் பாண்டித்யமும் பெற்ற இவர், நம் நாட்டிருக்கும், குறிப்பாக தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் நன்மை செய்வதற்காகத் தனது திறமைகளை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். திறமைகள் இருப்பினும், மனம் நல்ல வழியில் செல்வதற்கு இறைவனின் கருணை வேண்டும் அல்லவா? அந்தக் கருணையைப் பெறுவதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

சினிமா கதையல்ல ஸ்ரீமத் ராமானுஜரின் புண்ணிய சரித்திரம். மகாத்மாவும், தன் வாழ்க்கை முழுவதையும் வைணவத்திற்காகவே அர்ப்பணித்தவரும், தியாகசீலருமான ஸ்ரீமத் ராமானுஜரின் திவ்ய சரித்திரத்தில் தனது சொந்தக் கருத்துக்களையும், அரசியல் கொள்கைகளையும் புகுத்துவது மன்னிக்கமுடியாத குற்றமாகும். நீதிமன்றங்களாவது, சமூகத்தின் நன்மை கருதி இது விஷயத்தில் தலையிடுமா?

எதிர்பார்ப்புடன்,
என்றும் உங்கள் ஏ.எம்.ஆர்.

–நன்றி குமுதம் ஜோதிடம்

Advertisements

7 thoughts on “ஆன்மீக ராமானுஜரை அரசியல் ராமானுஜராக சித்தரிக்க வேண்டாம்! – ஏ.எம்.ஆர்

 1. Sundararaman KN July 29, 2015 at 6:16 PM Reply

  It is our fate. I do not know why Hindus and believers of Almighty are keeping quiet. May be they know Kalaingnar Karunanidhi cannot do any damage to their faith and God will take care of Kalaignar Karunanidhi. I do not watch Kalaignar TV at all and I will not in the future also.

  • Badri July 30, 2015 at 4:17 AM Reply

   Bad baseless article. In spite of the person writing it, the serial is well researched and a good product. Ramanujar was as much a social icon as he is a religious icon. It’s a pity the vaishnavas forgot his central teachings and hijacked only the teachings that suited them religion wise. ‘Naathigam’ is also a valid way in Hinduism as per samkhya, mimamsa etc. Just because kalaignar is atheist it does not debar him from writing on ramanujar. He could have political motives, but they are not any different than those who use ramanujar for religious motives. It’s all even. Enjoy the serial which ppl like AMR had no thoughts of making!!!

 2. சரவணன் July 30, 2015 at 5:33 AM Reply

  சினிமாக் கதை என்றால் கேவலம் இல்லை. சினிமாவில் காந்தி, ஏசு நாதர் கதைகளெல்லாம் காட்டப்பட்டிருக்கிறது. இது அவர் பார்வையில் ராமானுஜர் வரலாறு. வேண்டுமானால் மாற்றுப் பார்வையில் நீங்கள் வேறு தொடர் எடுங்களேன்.

  • Srinivasan August 1, 2015 at 4:36 AM Reply

   நபிகள் நாயகம் பற்றி என் மனம் போன போக்கில் ஒரு வரலாற்று சீரியல் எடுக்கட்டுமா?

 3. kahanam July 30, 2015 at 9:30 PM Reply

  Karunanidhi has personal reasons to insult Brahmins. He will never reform. Why waste time attending to his serial? Veru Velaiyaip PaarungaL!

 4. Chandramouli Swaminathan July 31, 2015 at 9:15 AM Reply

  Karunaniidhi wants to make fun of Hinduism and Srimad Ramanujar. He is totally unfit for
  writing about Srimad Ramanujar.

 5. Sakuntala August 3, 2015 at 6:41 AM Reply

  Karunanidhi, a home wrecker, found another method, by writing a serial about Sri Sri Sri Ramanujachariyar, to spread his hatred about Hinduism, and his hatred for Brahmins and earn money out of this new method. This man will go to any extent to earn money. What made him to choose Saint Ramanujar, why not Mohemmad, the Prophet to write a serial.
  Sakuntala

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s