சுஜாதாவை ஊக்குவித்த குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.


பெங்களூரிலிருந்து ஓர் இளைஞர், குமுதம் பத்திரிகைக்கு ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருந்தார்.

அப்போதைய குமுதம் ஆசிரியர், எஸ்.ஏ.பி.க்கு இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக அதனை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்தார் அவர்.

அதோடு நிறுத்தவில்லை. வெளியான கதைக்குச் சன்மானம் அனுப்பும்போது, ‘உங்கள் கதை நன்றாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்’ என்று இரண்டு வரிக் குறிப்பும் எழுதி அனுப்பினார் எஸ்.ஏ. பி.

பெங்களூரைச் சேர்ந்த அந்தப் புது எழுத்தாளருக்கு இந்தப் பாராட்டு மிகப் பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த உற்சாகத்திலேயே, அவர் தொடர்ந்து பல கதைகள், நாவல்கள், கட்டுரைத் தொடர்கள் எழுதிப் புகழ் பெற்றார்.

அந்த இளைஞர் இன்றுவரை, தமிழின் உன்னத எழுத்தாளர்களில் ஒருவராக மதிக்கப்படும் சுஜாதா!

யோசித்துப் பாருங்கள், குமுதம் ஆசிரியர், பெயர் தெரியாத ஓர் இளைஞரின் கதையை வெளியிட்டதே பெரிய விஷயம், அதன்பிறகு, அவருக்கு இரண்டு வரிப் பாராட்டுக் குறிப்பு எழுதவேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம்?

இங்கேதான், மற்ற ஆசிரியர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார் எஸ்.ஏ.பி. தன்னுடைய கடமை, இதழை வெளியிடுவது மட்டுமல்ல, அதில் எழுதும் நல்ல திறமைசாலிகளை ஊக்குவிப்பதும்தான் என்று அவர் நினைத்திருக்கிறார். அந்த எண்ணம்தான், சுஜாதா என்கிற அற்புதமான எழுத்தாளர் வளர்வதற்கு உற்சாக விதையாக அமைந்திருக்கிறது.

SAP-Autograph

–அடுத்தவர்களை ஊக்குவிக்கும் திறமை (Motivational Skills) பற்றி என். சொக்கன்

என். சொக்கன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s