க்ளெரிஹ்யு (clerihew) – சுஜாதா


க்ளெரிஹ்யு (clerihew) என்றொரு குறுங்கவிதை வடிவம் இருக்கிறது.
.
நடிகர் கமலஹாசன்
சென்னை நகர வாசன்
பொழுதுபோக்கு: நடிப்பதும்
தேசிய விருது கிடைப்பதும்!
.
நரசிம்மராவ் வீட்டுத் தளிகை
நிறைய உண்டு மளிகை
அரிசி பயறு மிளகு பருப்பு
ஒன்று மட்டும் இல்லை: சிரிப்பு!
.
மிக எளிதான வடிவம். மொத்தம் நான்கே வரிகள். aa bb என்ற rhyming pattern.
பொதுவாக க்ளெரிஹ்யு கவிதைகள் ஹாஸ்ய ரசம் ததும்புவனவாக இருந்தாலும் சீரியஸ் விஷயங்களைக் கூட நச் எனச் சொல்லலாம்.

இது அஜ்னபி எழுதியது:
.
உள்வாங்கிய ஆழி
உயிர்வாங்கிய ஊழி
பூரணைநாள் சுனாமி
புவியதிர்வின் பினாமி!
.
இனி வருவன வெங்கடேஷ் ஆறுமுகம் அருளிய க்ளெரிஹ்யுகள்.
.
ஆர்.கே. நகர் என்னும் தொகுதி
சென்னையிலே ஒரு பகுதி
அங்கு நிற்கிறார் அம்மா
இந்தத் தேர்தலே சும்மா.
.
ஹெல்மெட் அணிவது கட்டாயம்
விபத்தில் தடுக்குமது நம் காயம்
காத்திடும் உனது தலை
அதற்கு பார்க்கலாமா விலை.
.
கேட்டரிங் சமையல் படிப்பு
வெளிநாட்டு வேலை வாய்ப்பு
விளம்பரத்தில் பெரும் நடிப்பு
பார்த்தாலே வருது கடுப்பு.
.
அஜீத் விஜய் ரசிகர்களின் சண்டை
டிவிட்டரில் பிய்ச்சுகிறாங்க சிண்டை
ஹேஷ்டேக் தான் டார்கெட்டு
அது வைரலான செம ஹிட்டு.

Advertisements

2 thoughts on “க்ளெரிஹ்யு (clerihew) – சுஜாதா

  1. Ramji June 30, 2015 at 8:37 AM Reply

    Something new unheard of

  2. தங்கள் சிறப்பான பதிவை எனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
    இணைப்பு:
    உங்களுக்கு மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) தெரியுமா?
    http://paapunaya.blogspot.com/2015/07/blog-post.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s