ஸ்ரீ லிங்காஷ்டகம்!


பகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும், உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும், எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த லிங்காஷ்டகம் எனும் ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது. இந்த மந்திரத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.

(1)
ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்
(நான்முகப் பிரம்மனாலும், முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும், எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்)

நிர்மல பாஸித சோபித லிங்கம்
(குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்)

ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
(பிறப்பு – இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்)

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
(அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்)

(2)
தேவ முனி ப்ரவரார்ச்சித லிங்கம்
(தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்)

காம தஹன கருணாகர லிங்கம்
(மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து, பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்)

ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
(இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்)

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
(அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்)

(3)
ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம்
(எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்)

புத்தி விவர்த்தன காரண லிங்கம்
(உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்)

ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
(சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்)

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
(அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்)

(4)
கனக மஹாமணி பூஷித லிங்கம்
(மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்)

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்

(நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்)

தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
(தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம்)

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
(அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்)

Brahadeeswar

(5)
குங்கும சந்தன லேபித லிங்கம்
(குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்)

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
(தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்)

ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
(பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்)

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
(அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்)

(6)
தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
(தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்)

பாவைர் பக்தி ப்ரவேச லிங்கம்
(உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்)

தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
(கோடி சூரியன்களின் ஒளியினைக் கொண்டிருக்கும் லிங்கம்)

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
(அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்)

(7)
அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
(எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம்)

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
(எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்)

அஷ்ட தரித்ர விநாசக லிங்கம்
(எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்)

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
(அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்)

(8)
ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
(தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்)

ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்
(தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்)

பராத்பரம் பரமாத்மக லிங்கம்
(பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம்)

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்
(அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்)

பலஸ்துதி

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
(இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது)

ய படேத் சிவ சன்னிதௌ
(இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால்)

சிவலோக மவாப்நோதி
(சிவலோகம் கிடைக்கும்)

சிவேந ஸஹமோததே
(சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்)

Advertisements

6 thoughts on “ஸ்ரீ லிங்காஷ்டகம்!

 1. visujjm July 16, 2015 at 3:01 AM Reply

  ஓம் நமசிவாய : ஓம் தத் சத் ஓம் : ஓம்ஙாகரம் நமஹ…

 2. visujjm July 16, 2015 at 3:13 AM Reply

  பரமபதம் பரமாத்மக லிங்கம் …

 3. visujjm July 16, 2015 at 3:14 AM Reply

  சிவம் ~ தவம் ~ சதாசிவம் …

 4. vidya (@kalkirasikai) March 8, 2016 at 3:44 AM Reply

  முதல் ஸ்லோகத்தில் நிர்மல பாஷித என்பது ‘பாஸித’ என்று இருக்க வேண்டும்.

  • BaalHanuman March 8, 2016 at 5:09 AM Reply

   நன்றி. இப்போது நீங்கள் கூறியது போல் மாற்றி விட்டேன்.

 5. vidya (@kalkirasikai) March 8, 2016 at 8:35 AM Reply

  நன்றி பால்ஹனுமான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s