விஷம விலோசனன் – நரசிம்ம ஜயந்தி (03.05.2015)


பகவானின் எல்லா அவதாரங்களுமே பக்தர்களுக்கு அனுக்ரகம் செய்தவைதான். என்றாலும், நரசிம்மாவதாரத்துக்கு ஒரு தனி ஏற்றம் உண்டு. பக்த பராதீனன், பக்தவத்சலன்… என்கிற திருநாமங்களெல்லாம் அவனுக்கே பொருந்தும். ஏன்?

எங்கே இருக்கிறான் உன் ஹரி?’ என்ற ஹிரண்யனின் கேள்விக்கு, ‘எங்கும் இருக்கிறான்’ என்று பதில் சொல்லிவிட்டான் பாலகனான பிரகலாதன். அதையடுத்து கவலை வந்துவிட்டதாம் பகவானுக்கு. ஹிரண்யன் எதையாவது காட்டி, ‘இதில் உன் பகவான் இருக்கிறானா என்று கேட்பானோ?’ என்று. அதனால், சகல வஸ்துக்களுக்குள்ளும் தன்னை நிரப்பிக் கொண்டானாம். இதைத்தான், ‘பக்தனாலே பகவானுக்கு வந்த ஆபத்து’ என்று சொல்வார்கள் பெரியவர்கள்.

அவதார சூட்சுமத்தால் தன்னுடைய வியாபகத்தை உணர்த்திய பகவான், தன்னுடைய அபூர்வ குணாம்சத்தையும் வெளிப்படுத்துகிறான். அதைத்தான், ‘விஷம விலோசனன்’ என்று குறிப்பிடுகிறார் ஸ்வாமி தேசிகன். அதென்ன?

நம்முடைய கண்கள் இரண்டாக இருந்தாலும் ஒரு நேரத்தில் ஒரு பொருளைத்தான் அதனால் கவனிக்க முடியும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதிலும் இரண்டும் ஒரே தன்மையுடன்தான் செயல்படும். அழுகை, சிரிப்பு,கோபம், சந்தோஷம்…என்று உணர்ச்சியின் எந்த வடிவையும் ஒரே மாதிரித்தான் அவை வெளிப்படுத்தும். ஆனால், நரசிம்மபிரான் இதில் வேறுபடுகிறான். எப்படி?

ஸ்வாமி தேசிகன் சொல்கிறார்;

பந்து மகிலஸ்ய ஜந்தோ

பந்துர பர்யங்க பந்த ரமணீயம்

விஷம விலோசன மீடே

வேகவதீ புளிந கேளி நரசிம்மம்

காஞ்சிபுரத்தில், வேகவதி நதிக்கரையில் வேளுக்கை என்னுமிடத்தில் திருக்கோயில் கொண்டிருக்கிறான் சிங்கப்பிரான். வேள் இருக்கை என்பதே வேளுக்கை என்றானதாகக் கருதுவார்கள். அதாவது, எம்பிரானே விரும்பி அமர்ந்த இடம் என்று இதற்குப் பொருள்.

இந்த வேளுக்கையிலே ‘பர்யங்க பந்தம்’ என்கிற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறானாம் பகவான். இதை யோகாசன வகைகளில் ஒன்று என்று சொல்வார்கள். பகவானுக்கு ஏன் யோகமும், தியானமும்? எதற்காக அவன் இப்படி ஆசனம் கொண்டிருக்கிறான்? தம்முடைய அடியார்களைக் காத்தருள வேண்டும் என்பதற்காகத்தான் அந்த யோகாசனத்திலே அமர்ந்திருக்கிறான். அதுமட்டுமல்ல; அவன் கண்கள் இருக்கிறதே, அவை ‘விஷம விலோசனங்கள்’ என்கிறார் ஸ்வாமி தேசிகன்.

விஷம என்பதற்கு குறும்பு என்று மட்டும் பொருளல்ல; மாறுபட்ட என்றும் பொருள். ஏனென்றால், அவனுக்கு மூன்று திருக்கண்கள். சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூவரையும் தம் முக்கண்களாகக் கொண்டு துலங்குகிறான் பகவான். ஆனால், அந்தக் கண்கள் என்ன செய்கின்றன தெரியுமா? ஒரே நேரத்தில் இருவேறு தன்மைகளை வெளிப்படுத்துகின்றன. எப்படி?

ஹிரண்யனின் மீது வெம்மை மிக்க பார்வையை வலக்கண் வீசிக் கொண்டிருக்கும்போதே, பக்த பிரகலாதனிடம் குளிர்ந்து நோக்குகிறது இடக்கண். இப்படி மாறுபட்ட கண்களால் கடாட்சிக்கிற முக்கண் எம்மானை துதிக்கிறேன் என்கிறார் ஸ்வாமி தேசிகன். யோசிக்கும்போது, ஹிரண்யனின் வரமே பயனற்றுப் போகிற மாதிரியான அவதாரத்தை வெளிப்படுத்தியது பகவானின் விஷமம்தானே? அப்படியானால், அவன் கண்கள் விஷம விலோசனம் என்பதும் சரிதானே என்றும் சொல்லத் தோன்றுகிறது.

விதுரன் – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)

சிலருக்கு ஆதங்கம் இருக்கும்

என்ன பண்ணாலும் முயற்சி பலிப்பதில்லை ஒரே தடையா இருக்கு. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை.

கைவிட்டு போனதும் நடக்குமா என்ற கவலை இருந்தால் அவர்களுக்கு ஒரு அரிய ஸ்லோகம் 4 வரிகளில்.

ந்ருஸிம்ஹன் ஸ்லோகம் இதை வரும் ந்ருஸிம்ஹ ஜயந்தி அன்று 108 /28 தடவை சொல்ல அனைத்து முயற்சிகளும் பலிதமாகும்.

மேலும் மனதில் உள்ள கஷ்டங்கள் விலகி மன நிம்மதியை தரும்.

உத்தியோகம், தொழில், திருமணம், பிள்ளைப்பேறு வீடு வாகன யோகம் இப்படி அனைத்து பிரச்சனைகளுக்கும் மருந்து இந்த மந்திரம்

யஸ்யா‬பவத் பக்த ஜனார்த்தி ஹந்து:
பித்ருத்வ மன்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே வதாரஸ்த மனந்ய லப்யம்
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே !!

பொருள்:

பக்தியற்றவர்களால் அடையமுடியாதவனே !

தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகும் என்று தூணில் இருந்து உடன் வெளிவந்தவனே!

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹனே!

உன்னை சரணடைகிறேன் என்னை காப்பாற்றுவாயாக!

—-

நாளை என்பது இல்லை நம் நரசிம்மனிடத்தில்!

—-

Ravi Sarangan

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s