சித்திரையில் தொடங்கும் புது வருடம் – திருமலை ராஜன்


thuglak_cartoon

இது விடுமுறை தினம் அல்ல. இது சித்திரைக் கொண்டாட்ட தினம் அல்ல. இது சித்திரை விழா அல்ல. இது தமிழ் புத்தாண்டு தினம். மன்மத வருட தமிழ் புத்தாண்டு தினம். தமிழ் வருஷப் பிறப்பு. பருவ காலங்களின் மாற்றங்களைத் துல்லியமாகக் கணித்து நம் முன்னோர்கள் வகுத்து விட்டுப் போனக் காலக் கணக்கின்படி புது வருடத்தை உற்சாகமாக வணங்கி வரவேற்கும் ஒரு பண்டிகை தினம். அனைவரும் இதைத் தமிழ் வருடப் பிறப்பு என்று தெளிவாகச் சொல்லி வரவேற்றுக் கொண்டாடுவோம்

இந்தியாவின் பல மாநிலங்களும் உலகில் இன்றும் பாகன் வழிபாடுகளைப் பின்பற்றும் பல நாடுகளும் இன்றைய தினத்தை புத்தாண்டு தினமாகவும் புதிய காலத்தின் துவக்கமாகவும் பல நூறு வருடங்களாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே இவை போன்ற பண்டிகை தினங்களை வெறுக்கும் ஒரு கும்பல் இயங்கி வருகிறது. இந்த தினத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அமைதியாகக் கொண்டாடாமல் போகலாம் ஆனால் விடுமுறை தினம் என்ற பெயரிலும் சித்திரைக் கொண்டாட்டம் என்ற பெயரிலும் சித்திரைத் திருநாள் என்ற பெயரிலும் கிண்டலடிப்பது மோசடி வேலை வெறுப்பு அரசியல் மட்டுமே. தமிழ் நாட்டின் இன விரோத திராவிடக் கட்சிகளின் அரசியலை அமெரிக்க தமிழ்ச் சங்கங்களும் தங்களுடன் எடுத்துச் சென்று இந்த புத்தாண்டு தினத்தைப் புறக்கணித்து வெறுப்பு அரசியலை பரப்பி வருகின்றன.
—————————————

அனைத்தையும் மீறி நமது முன்னோர்கள் நமக்கு அளித்த அறிவுச் செல்வத்தை மதித்து இன்றைய தினத்தில் தமிழ் புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடும் அனைவருக்கும் இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து போற்றி வழிபடும் அனைத்து மக்களுக்கும் இந்த வருடம் அனைத்து நன்மைகளையும் கொணரட்டும். இந்த மன்மத ஆண்டில் வறண்டு கிடக்கும் பூமிகள் முக்கியமாக கலிஃபோர்னியா மாநிலத்தில் மழை பொழியட்டும். எல்லா இடங்களிலும் செல்வமும் அமைதியும் வளமும் பெருகட்டும். விவசாயம் செழிக்கட்டும். இருள் அகன்று ஒளி பெருகட்டும்.

மன்மத ஆண்டு அனைவருக்கும் அனைத்து நன்மைகளையும் அளிக்கட்டும். அனைவருக்கும் இந்த ஆண்டு மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்!

Advertisements

One thought on “சித்திரையில் தொடங்கும் புது வருடம் – திருமலை ராஜன்

  1. yarlpavanan April 15, 2015 at 5:02 PM Reply

    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s