செம்மரம் – ஒரு ரத்த சந்தனத்திண்டே கதா – திருமலை ராஜன்


சமீபத்தில் எனது தோட்டத்தில் உள்ள மரங்களின் பெயர்களை அடையாளம் காண முயற்சித்த பொழுதுதான் பல மரங்களின் பெயர்களே எனக்குத் தெரியவில்லை என்பது எனக்கு உறைத்தது. ஒரு பத்து பதினைந்து அடி வளர்ந்திருந்து பாளம் பாளமான பட்டைகளுடன் இருந்த ஒரு மரத்தைதான் செம்மரம் என்னும் செஞ்சந்தனம் என்று மரங்கள் நிபுணர் ராமநாதன் எனக்கு அடையாளம் காட்டினார். அந்த வறண்ட செம்மண் பிரதேசத்தில் அந்த மரம் அந்த அளவுக்கு வளர்ந்திருந்தது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. ஒரு காலத்தில் தமிழ் நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே வளரும் என்று நினைத்திருந்த அந்த மரத்தை இப்பொழுது பலரும் சமதளங்களிலும் வறட்சி பிரதேசங்களிலும் கூட வளர்த்து வருகிறார்கள். அந்த ஒரு மரத்தின் வளர்ச்சியைக் கண்ட பின்னால் நானும் சில நூறு கன்றுகளை நட்டேன். செம்மரத்திற்கு இன்று இருக்கும் அபரிதமான டிமாண்டும் பேப்பர்களில் தினமும் பல கோடி மதிப்புள்ள செம்மரங்கள் பிடிபட்டன போன்ற செய்திகளும் இன்று பலரையும் இந்த மரத்தை வளர்க்கத் தூண்டியுள்ளது. பல ஆண்டுகள் வளர்ந்த நல்ல உறுதியான செம்மரங்கள் மட்டுமே அவ்வளவு விலை போகக் கூடியவை. அவை போன்ற உறுதியான மரங்கள் தமிழ்நாட்டின் வேலூர் திருவண்ணாமலைக் காடுகளில் இருந்து அனேகமாக அழிக்கப் பட்டு விட்டன. அங்கிருந்த சந்தன மரங்களும் அது போலவே அழிக்கப்பட்டன. இப்பொழுது தமிழ் நாட்டில் இருந்த அனைத்து செம்மரங்களையும் அழித்த பின்னர் விற்றுத் தீர்த்த பின்னர் அந்தத் தொழிலில் 20 ஆண்டுகள் அனுபவமுள்ள பல மரம் வெட்டிகளும் ஆந்திராவின் மர மாஃபியாக்களுக்காக ஆந்திரக் காடுகளில் மரம் வெட்டக் கிளம்பி அங்கே மாட்டிக் கொண்டு உயிர் இழந்தும் சிறைப்பட்டும் வருகிறார்கள். கிட்டத்தட்ட 3500 பேர்கள் ஆந்திரச் சிறைகளில் இருக்கிறார்கள்.

கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் தமிழ் நாட்டு அளவுக்கு இயற்கை வளங்கள் அழிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஓரளவுக்கு வனக் காடுகளையாவது அவர்கள் பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். நதிகளை சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் இயற்கை வளங்களும் சரி தொன்மையான பாரம்பரியச் சின்னங்களும் கோவில்களும் சரி மிக வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழ் நாட்டில் இருந்த சந்தன, செம்மரங்களை அழித்த பிறகு மரத் தமிழர்கள் இப்பொழுது ஆந்திராவில் மரம் வெட்டக் கிளம்பியிருக்கிறார்கள். மாட்டிக் கொண்டால் அனுபவிக்க வேண்டியதுதன். இதில் ஆதரவு தெரிவிக்கவோ அனுதாபம் காட்டவோ அவசியம் ஏதுமில்லை.

தமிழ் மீடியாக்களில் செம்மரம் என்று அழைக்கப் படும் இந்த செஞ்சந்தனம் Ptercarpus Santalinus L. தெலுங்கில் ரத்தசந்தனம் என்று அழைக்கப் படுகிறது. இப்பொழுது அந்த மரம் அந்தப் பெயருக்கு நியாயம் செய்து விட்டது.

இந்த மரம் நன்கு விளைந்து அதன் நடுப்பகுதியில் செந்நிற சாகு உருவாகும் பொழுது நல்ல விலைக்குப் போகிறது. உள்ளூர் மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ சாகு 5000/10000 ரூபாய் வரையிலும் வெளிநாட்டு சந்தையில் ஒரு டன் செம்மரம் பல லட்சங்களில் இருந்து ஒரு கோடி வரையிலும் விற்பனையாகின்றன. அதில் இருந்துச் மதிப்புக் கூட்டப்பட்டுச் செய்யப்படும் பொருட்கள் பல கோடி வரை விலை போகின்றன. மரப்பாச்சி பொம்பைகள், விளையாட்டுப் பொருட்கள், விலையுயர்ந்த ஃபர்னிச்சர்கள் ஆகியவற்றிலும் மருந்து வகைகளிலும் இந்த மரம் பயன் படுத்தப் படுகிறது

இது கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தியுள்ளது என்றும் அணு உலை போன்ற இடங்களிலும் எக்ஸ்ரே, ஸ்கேனர் போன்ற சாமான்களின் பெட்டிகளாகவும் பயன் படுத்தப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆனால் உலக மார்க்கெட்டில் குறிப்பாக சீன மார்க்கெட்டில் இது அதிகம் விலை போகும் காரணம் இது வாலிப வயோதிக அன்பர்களின் வீரிய சக்தியை கூட்டும் ஒரு மருந்தாகக் கருதப்படுவதுதான். செம்மரப் பட்டையில் இருந்து செய்யப் படும் ஒரு வகை சூரணம் சக்தி வாய்ந்த எழுச்சி மருந்தாக கருதப்படுகிறது. அதன் காரணமாகவே இதன் மதிப்பு சீனச் சந்தையில் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளை இந்த உலகத்தில் இருந்து அழிக்க ஒரே வழி அவர்கள் ஆண்மை விருத்திக்கு நல்ல மருந்து என்று அறிவிப்பதே என்று ஒரு ஜோக் உள்ளது. அப்படி ஜிஹாதிகளை ஒரு வீரியமிக்க மருத்துவக் குணம் உள்ளவர்கள் என்று வதந்தியைப் பரப்பி விட்டால் உடனேயே சீனர்கள் அவர்களை எப்படியாவது தேடிப் பிடித்துக் கடத்திக் கொண்டு வந்து கஷாயம் வைத்துக் குடித்து விடுவார்கள், கொன்று தின்று விடுவார்கள்  🙂 ஆகவே ஜிஹாதிகளை ஒழிக்க இதுவே சிறந்த வழி 🙂

சீனர்களுக்கு இந்த வகையான சிட்டுக்குருவி லேகியங்கள், கருங்குரங்கு லேகியங்கள், பச்சைப்புறா லேகியங்கள்,அஸ்வகந்தி லேகியம் போன்ற வீரிய லேகியங்களில் அபாரமான ஈர்ப்பு ஏற்படுவதின் காரணங்களைத் தனியாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்

சீன ஜப்பானிய சப்பை மூக்கர்களது தீராத வீரிய லேகிய நாட்டங்களினால் உலகெங்கிலும், பெரும் அழிவினை ஏற்படுத்துகிறார்கள். காண்டாமிருகத்தின் கொம்பு ஆண்மை விருத்திக்கு உதவும் என்றார்கள் அவ்வளவுதான் உலகத்தின் அனைத்து காண்டாமிருகங்களும் கொல்லப் பட்டன. திமிங்கிலத்தின் திமில், டால்ஃபினின் வால், கருங்குரங்கின் மூளை, பாம்பின் விஷம் என்று அவர்கள் எதையும் விட்டு வைக்கவில்லை. கொத்துக் கொத்தாக அந்த இனங்களே அழியும் வரை கொன்று அழித்தார்கள். இன்றும் வரவில்லை அவர்களுக்கு எழுச்சி. எத்தைத் தின்றால் காமம் வளரும் என்று பேயாய் அலைகிறார்கள். அவர்களின் பேராசை பிடித்த விபரீதமான எழுச்சி வேட்கைக்கு இப்பொழுது விரைவாகப் பலியாகி வருவது இந்தியாவில் குறிப்பாக ஆந்திராவின் கடப்பா, திருப்பதி காடுகளில் வளர்ந்து நிற்கும் செஞ்சந்தன மரங்களே. இவை நூற்றாண்டுகள் வளர்ந்து நல்ல சாகு தரும் சிறப்பான செஞ்சந்தன மரங்கள். ஆகவே இவற்றின் மதிப்பும் அதிகம். வீரியமும் கூட. ஆகவே அதை வெட்டி அழிக்கிறார்கள். நாளைக்கே இந்தியாவில் உள்ள வன்னியர்களின் எலும்பு சூப்பில் தான் விந்து விருத்திக்கான வீரியம் அதிகம் இருக்கிறது என்று கேள்விப்பட்டு விட்டால் அதன் பிறகு ஆனானப்பட்ட காடுவெட்டி குருவேயானாலும் சூப் செய்து சாப்பிட்டு விடுவார்கள். வன்னியர்களைக் கடத்திக் கொன்று விற்கவென ஒரு மாஃபியா உடனே உருவாகி விடும். அந்த அளவுக்கு இந்த ஆண்மை விருத்தி மருந்துகளுக்கான மார்க்கெட் சீன, ஜப்பானிய, தைவானிய சிற்றுறுப்பு ஆசியர்களினால் உருவாக்கப் பட்டுள்ளது

அதன் விளைவாக இப்பொழுது 20 பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு முன்பாக 15 பேர்கள் செத்தார்கள் அதற்கு முன்பாக நான்கு வனத்துறை காவலர்கள் கொல்லப்பட்டார்கள். ஆக இத்துடன் இது நிற்கப் போவதில்லை. அரசாங்கம் இந்த செஞ்சன மரத்தை கடத்தும் அனைத்து வழிகளையும் அடைத்து அதற்கான விலை மதிப்பு இல்லாமல் செய்யும் வரை அல்லது ஆந்திராவில் உள்ள அத்தனை செஞ்சந்தன மரங்களும் வெட்டப்பட்டுக் கடத்தப்படும் வரை இந்த மரம் வெட்டுவதும் அது தொடர்பான கொலைகளும் தொடரவே போகின்றன. இதற்கான தீர்வுகளில் ஒன்று மட்டுமே துப்பாக்கி சூடு என்னும் கடுமையான தடுப்பு முறை. இது மட்டும் போதாது.

சமீபத்தில் சீனர்கள் பெங்களூரு நகரத்திலேயே இந்த செஞ்சந்தன மரங்களை பொம்மைகளாக மாற்றும் ஒரு சிறிய தொழிற்கூடமே வைத்துக் கொண்டு பொம்மைகள் என்ற பெயரில் கடத்திக் கொண்டிருந்தார்கள். இது பல நூறு கோடி மதிப்புள்ள ஒரு வியாபாரம் ஆகவே இதில் ஈடுபட்டிருக்கும் கொள்ளையர்களும் பெரிய ஆட்களே. தில்லான மோகனாம்பாள் எல்லாம் வெட்டுவதற்கு ஆள் பிடித்துத் தரும் ஏஜெண்டுகள் மட்டுமே.

வனக் காவலர்களுக்கு தகுந்த ஆயுதங்களும் பாதுகாப்பு உபகரணங்களும் இன்னும் நிறைய வழங்கப் பட வேண்டும். அவர்களின் ஊழல்கள் ஒழிக்கப் பட வேண்டும். நைட் விஷன் க்ளாஸஸ் அளிக்கப் பட வேண்டும். எந்தவொரு வனத்திலும் எந்தவொரு மரத்தையோ எந்தவொரு மிருகத்தையோ பறவையையோ கொல்லும் எந்தவொரு ஆட்களையும் அவர்களது ஜாதி, மதம்,மாநிலம், மொழி, நிறம் பாராமல் கண்டவுடன் சுட உத்தரவு அனுமதி காவலர்களுக்கு அளிக்கப் பட வேண்டும்.

இந்த 20 பேர்கள் சுட்டுக் கொல்லப் பட்டது முற்றிலும் நியாயமான ஒரு செயலே. இதில் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள் என்று சொல்லி அவர்கள் சுடப் படுவதைக் கண்டிக்கும் அனைவரும் இந்தியாவின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பவர்களை ஆதரிப்பவர்களாகின்றார்கள். மொழியின் பெயரால் இன உணர்வைத் தூண்டி விடுபவர்களே. முஸ்லீம் பயங்கரவாதிகள் குண்டு வைக்கும் பொழுது அவர்களைப் போலீஸ் சுட்டால் உடனே கண்டிக்கும் முஸ்லீம்களும் முற்போக்குகளும் அவர்கள் முஸ்லீம் என்பதினால் கொல்லப்படுகிறார்கள் என்கிறார்கள். அது போலவே இப்பொழுது தமிழர் என்பதற்காகக் கொல்லப்பட்டார்கள் என்று சொல்பவர்களுக்கும் அந்த ஜிஹாதி ஆதரவாளர்களுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. மரத்தை வெட்டியவர்கள் எல்லாம் செம்மொழியாம் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக செம்மரத்தை வெட்டவில்லை. ஆகவே அவர்களைத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி இனவெறியைத் தூண்டுவதும், பிரிவினையைத் தூண்டுவதும், மாநிலங்களிடையே பகைமையைத் தூண்டுவதும் பிரிவினைவாதச் செயலாகவே கருதப்பட வேண்டும்.

அப்பகுதி மக்கள் அனைவருக்கும் அத்து மீறிக் காட்டுக்குள் நுழைந்து மரம் வெட்டினால் கண்டதும் சுடப்படுவார்கள் என்பது நன்கு தெரியும். மிகவும் தெளிவாகவே காடுகளுக்கு அருகே எச்சரிக்கைகள் வைக்கப் பட்டுள்ளன. பல முறை அந்தப் பகுதியின் ஐ ஜி காந்தாராவ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்டதும் சுட உத்தரவு உள்ள ஒரு இடத்திற்குள் கள்ளத்தனமாக நுழைந்தால் சுடவே படுவார்கள். அதற்காகத்தான் காவலர்களுக்குத் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது முதுகு சொறிய அல்ல. கண்டதும் சுட உத்தரவு நிலவும் ஒரு எல்லைக்குள் நுழைந்தால் சுடப்படுவோம் என்று தெரிந்தேதான் போனார்கள். அதற்கான விளைவை அவர்கள் எதிர்கொண்டேயாக வேண்டும். இதில் மரம் வெட்டச் சென்றவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதோ, பிரிவினையைத் தூண்டி போராடத் தூண்டுவதோ ஒடுக்கப்பட வேண்டிய, கண்டிக்கப்பட வேண்டிய அயோக்கியத்தனம் மட்டுமே.

இன்று மரம் வெட்டியவர்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கும் மனித உரிமைப் போராளிகள் எவரும் சில மாதங்களுக்கு முன்பாக நான்கு வனக் காவலர்களை கொடூரமான முறையில் இதே மரம் வெட்டிகள் அடித்துக் கொன்ற பொழுதும் சுட்டுக் கொன்ற பொழுதும் என்ன செய்து  கொண்டிருதார்கள்?  வனக்காவலன் செத்தால் அவனுக்கு மட்டும் உயிர் கிடையாதா? அவனுக்கு பிள்ளை குட்டிகள் கிடையாதா? அப்பொழுது எங்கே போயிற்று இந்த மனிதாபிமானக் காவலர்களின் மனிதாபிமானம்? எப்படி இவர்களது மனித உரிமை எல்லாம் செலக்டிவாக திருடர்களுக்கும், கொலைகாரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் மட்டும் ஆதரவாக மட்டுமே எப்பொழுதும் எழுகிறது? அவர்கள் கொல்லப்படும்பொழுது மட்டும் இவர்களுக்கு செஞ்சந்தன சூரணம் லேகியம் சாப்பிட்ட எழுச்சி கட்டுக்கடங்காமல் வரும் ரகசியம் தான் என்ன?

ஆந்திர வனத்துறையினர் தவறு செய்து விட்டார்கள். அவர்கள் முதலில் சுட்டுக் கொன்றிருக்க வேண்டியது இந்த மனித உரிமைப் போராளிகளையே அன்றி மரம் வெட்ட வந்தவர்களையல்ல. இவர்கள் ஒழிந்தால் அவர்களுக்கு ஆதரவு இருக்காது இப்படி சட்ட விரோதமாக மரம் வெட்டத் துணிந்திருக்க மாட்டார்கள்

இந்த மரம் வெட்டிகளை சாதாரணக் கூலித் தொழிலாளிகள் என்கிறார்கள். அது தவறு. அவர்களுக்கு இது நாள் வரை மாட்டிக் கொண்டால் ஜாமீனில் எடுத்து வர ஆள் இருந்தது. அவர்களுக்கு வாரம் ஒரு லட்சம் வரை கூலி கிடைத்து வந்தது. ஆனால் இந்தத் துப்பாக்கிச் சூடு மூலம் இனிமேல் முன்பு போல கூட்டம் கூட்டமாக நூற்றுக்கணக்கானவர்கள் போய் வெட்ட மாட்டார்கள். ஆகவே இது தேவையான ஒரு எச்சரிக்கை நடவடிக்கையே. இதை முன்பே செய்திருந்தால் இன்று அழிந்து போன ஆயிரக்கணக்கான சந்தன, செஞ்சந்தன மரங்கள் காப்பாற்றப் பட்டிருந்திருக்கும். ஆந்திர வனத் துறை தனது காவலர்கள் கொடூரமாக இந்த மரம் வெட்டித் திருடர்களினால் கொல்லப்பட்ட பிறகே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தமிழ் நாட்டிற்கு வேண்டுமானால் தன் இயற்கை வளங்களின் மீது அக்கறையில்லாமல் இருக்கலாம். அக்கம் பக்கத்து மாநிலங்களுக்கு இருக்கிறது. அவர்கள் கடும் நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமான அவசரமான ஒரு தேவையே. நான் ஆந்திர வனக்காவலர்களின் இந்த நடவடிக்கையை முற்றிலும் ஆதரிக்கிறேன். அவர்கள் இத்துடன் நின்று விடாமல் ஒட்டு மொத்த மர மாஃபியாவையும் கண்டித்து இதே போல என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். அவர்கள் வெட்டிய ஒவ்வொரு மரமும் அதன் வயதினால் வெகு அபூர்வமான அரிய மரங்கள். அதை வெட்டுவது மனித உயிரை வெட்டுவதை விட மோசமான ஒரு செயல். அதைத் தடுக்கப்பட,  இனிமேலும் இதில் பலரும் ஈடுபடாமல் மரங்களைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட ஒரு தேவையான நடவடிக்கையே இந்த துப்பாக்கிச் சூடு.

மரம் வெட்டிய பிறகு அதைக் கடத்திச் சென்று ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள தோல் கொடவுன்களில்தான் ஒளித்து வைக்கிறார்கள். அவர்கள்தான் அதை தோல்களின் அடியில் ஒளித்து வைத்து கப்பல்களில் வெளிநாடுகளுக்குக் கடத்துகிறார்கள். ஆகவே இங்கு சம்பந்தப்பட்டிருப்பது வெறும் ஜவ்வாது மலை மரம் வெட்டிகள் மட்டும் அல்ல. இதன் பின்னால் உள்ள பெரும் கடத்தல் மாஃபியாக்கள் அனைவரும் கண்டு பிடிக்கப்பட வேண்டும். செம்மர கள்ள விற்பனை மூலமாக வரும் பணம் இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் போகிறதா என்பதும் கண்டு பிடிக்கப்பட வேண்டும். அப்பொழுது இந்த உலகளாவிய கடத்தலில் ஈடுபட்ட இஸ்லாமிய ஜிஹாதி மாஃபியாக்கள் கண்டுபிடிக்கப்படும் பொழுதும் இப்பொழுது போலவே அவர்களுக்கு ஆதரவாகவும் மனித உரிமைப் போராளிகள் கிளம்பி வருவார்கள். அப்படிக் கிளம்பி வரும் அனைவரையுமே தேசத் துரோகிகளாகக் கருதி சுட்டுக் கொல்ல வேண்டும்.

மனித உயிர்களை விட பல மடங்கு மேலானவை மரங்கள். அவற்றைக் காப்பதற்காக அதை அழிக்கும் வெட்டும் மனிதர்கள் கொல்லப் படுவது முற்றிலும் நியாயமான ஒரு நடவடிக்கையே. இதை தமிழர்கள் படுகொலை என்றும் அப்பாவிக் கூலித் தொழிலாளர்களின் கொலை என்றும் திரிப்பவர்கள் பிரிவினைவாதத்தை வளர்ப்பவர்கள், இயற்கை வளங்களை அழிக்க நினைப்பவர்கள் மட்டுமே.

இப்பொழுது தமிழ் நாடு முழுவதுமே இந்த செஞ்சந்தனத்தை வறட்சியான நிலப் பகுதிகளிலும் கூட பயிர் செய்திருக்கிறார்கள். இவை எல்லாம் வளர்ந்து முற்றிய மரங்களாக வரும்பொழுது ஒரு வேளை இந்த மரங்களுக்கு மார்க்கெட் இல்லாமல் போகலாம். அப்பொழுது இதை வெட்டிக் கடத்தும் அளவுக்கு மதிப்பு இல்லாமல் போகலாம். அல்லது சீனர்களுக்கு “அது” வளர்ந்திருக்கலாம் அவர்களுக்கு செம்மரச் சூரணம் தேவையில்லாமல் போகலாம். ஆனால் அதெல்லாம் நடக்கும் வரையிலும் இதற்கான கள்ள மார்க்கெட் இருக்கும் வரையிலும் அரசாங்கம் இந்தத் துப்பாக்கிச் சூடு போன்ற கடுமையான அச்சமூட்டும் நடவடிக்கைகளை எடுக்காத வரை, இதன் பின்னால் உள்ள மாஃபியாக்களைப் பூண்டோடு அழிக்காதவரை இந்தக் கொலைகள் தொடரவே செய்யும். இது ஏதோ ஜவ்வாது மலைவாசிகளோடு நின்று விடும் விஷயம் அல்ல. இந்தக் கடத்தலை இஸ்லாமிய பயங்கரவாதிகள் அவர்களுக்கு நிதி திரட்டும் முகமாகவும் செய்து வரலாம் என்று நம்பப்படுகிறது. ஆகவே வெறும் ஆந்திரா அரசு மட்டுமின்றி மத்திய அரசும் தலையிட்டு இந்தக் கடத்தலை முழுமையாகத் தடை செய்ய அவசர ஏற்பாடுகளை உடனே செய்ய வேண்டும்.

6 thoughts on “செம்மரம் – ஒரு ரத்த சந்தனத்திண்டே கதா – திருமலை ராஜன்

 1. Rajan Satagopan April 8, 2015 at 5:29 AM Reply

  சற்று நேரம் தமிழ் நாட்டு டி விக்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அனைத்து டி விக்களும் சொல்லி வைத்தாற் போல மரம் வெட்டிய மரத் திருடர்களை மரம் வெட்டச் சென்ற தொழிலாளர்கள் என்றே சொல்கிறார்கள். இந்த தறுதலை டி விக்களின் பாஷையில் திருடர்கள் எல்லோரும் தொழிலாளர்களா? இவனுங்க வீட்டுல பூட்டை உடைத்துத் திருடினால் போலீஸில் போய் இந்த வீணாய்ப் போனவர்கள் எப்படி புகார் கொடுப்பார்கள்? “ஐயா எங்கள் வீட்டில் நேற்று இரவு பூட்டுத் தொழிலாளர்கள் வந்து பூட்டை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள். ஆகவே எங்கள் பொருட்களை பூட்டு மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கே வழங்கி விடுங்கள்” என்றா? அடக் கூறு கெட்டவர்களா? இவனுங்க எல்லாம் நியூஸ் போட்டு நாடு வெளங்கிடும். நாளைக்கு இதே ரீதியில் இவர்கள் வங்கிக் கொள்ளையர்களை வங்கிக்குப் பணம் எடுக்கச் சென்ற பணத் தொழிலாளர்கள் என்றும் குண்டு வைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளை வெடிகுண்டு தொழில் நுட்ப வல்லுனர்கள் என்றும் ரேப்பிஸ்டுகளைப் பெண் கலவித் தொழிலாளர்கள் என்றும் அழைப்பார்களா? இவர்கள் அகராதியில் பின் திருடர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் என்னதான் அர்த்தம்? இன்னும் சில நொடிகள் பார்த்திருந்தால் எனது டி வி யை ஆத்திரத்தில் உடைத்திருப்பேன் என்பதினால் அங்கிருந்து அகன்று விட்டேன். தமிழ் நாடு உருப்பட வேண்டும் என்றால் இந்த டி வி கம்பெனிகளை எல்லாம் பூண்டோடு அழிக்கப் பட வேண்டும்

 2. vsmanian April 8, 2015 at 9:43 AM Reply

  It is true. The so called ‘5 Star Activists’ do not condemn killing of police or forest officials. But when smugglers get killed, they make a big noise. Even it happens with rowdy’s. I do not know whether human rights are applicable only to criminals and not to others.

 3. rjagan49 April 9, 2015 at 5:25 AM Reply

  This is an excellent and honest article on the issue. I agree with every word in it. It is strange that every party in TN took sides with the dead when it was not even publicly disclosed that the majority of the dead were from TN. An enquiry may be required if the encounter was the only option and whether the coolies could have been arrested. This is to comply with law. There should be no political interference. This article shall reach out to all the magazine editors in TN and the party leaders. – R. J.

 4. Pattukkottai Prabakar April 9, 2015 at 2:12 PM Reply

  செம்மரக் கடத்தல் சட்டப்படி குற்றமே. ஒரு பெரிய நெட் வொர்க் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சில வனத் துறை அதிகாரிகள், சில காவல்துறை அதிகாரிகள், சில அரசியல்வாதிகள் துணையோடுதான் இவை நடந்து வந்திருக்கின்றன. அந்த அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இதுபோல சுட்டிருக்கிறார்களா என்பதே கேள்வி.

 5. laksmi vasudevan April 10, 2015 at 1:57 AM Reply

  I really appreciate your courage in condemning the act. Keep it up

 6. Giri Kumar April 13, 2015 at 1:29 AM Reply

  Sir

  This is the right mesage sent by Andhra to tamil Nadu wood cutters. I do agree with the author but i would also like to state that the forest officials of all states are also culprits and also we are not adopting modern practices to prevent poaching of animals & forest wealth.

  We are yet to supply the forest department with hitech equipments to prevent illegal activities and also turn a blind eye unleashed by these miscreants and this includes sand mafia too.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s