5-உங்களுக்கு டயபடிஸா…? – சுஜாதா


எனக்குத் தெரிந்த ஒருவர் டயபடிஸ் நோயால் பலகாலம் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். தினம் இன்சுலின் போட்டுக் கொள்வது தொந்தரவாக இருந்தது. ‘பம்பாயில் ஒரு பவுடர் கொடுக்கிறார்கள். அதை முயன்று பாருங்களேன்‘ என்று சொன்னபோது, அதை வரவழைத்து சாப்பிட்டுப் பார்த்திருக்கிறார். நல்ல பலன் ஏற்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரணமாக அவருக்கு முந்நூறுக்கு அருகே உலவும். சட்டென்று தொண்ணூறுக்கு இறங்கி விட்டது. தினம் மூன்று வேளை சூரணம் சாப்பிட்டுக்கொண்டு, அவ்வப்போது ரத்த சர்க்கரை அளவையும், க்ளூக்கா மீட்டரில் பரிசோதித்து  வந்திருக்கிறார். எப்போதும் நூறு, நூற்றைம்பது என்றே இருந்திருக்கிறது. ஊசிகளையும், இன்சுலினையும், பஞ்சுகளையும் தூக்கி எறிந்து விட்டு உணவுக் கட்டுப்பாட்டையும் தளர்த்தி கொஞ்சநாள் சந்தோஷமாக இருந்தார்.

சட்டென்று ஒரு நாள் அவர் சிறுநீரகம் பழுதடைந்ததற்கான அடையாளங்கள் அனைத்தும் தோன்றின. (கால்வீக்கம், சிறுநீர் கழிப்பது நின்று போவது இத்யாதி) ஆஸ்பத்திரிக்கு சென்று காட்டியதில் உடனே அட்மிட் செய்யச் சொன்னார்கள். லாசிக்ஸ் போன்றவை பயன் தரவில்லை. டயலிசிஸ், மாற்றுச் சிறுநீரகம் ஏதும் கொடுக்க முடியாதபடி இதயம் சோர்வாக இருந்தது. பதினைந்து தினங்களில் இறந்து விட்டார்.

இதுபற்றி முப்பது வருஷம் டயபடிஸ் சிகிச்சையில் அனுபவமுள்ள டாக்டர் சி.வி.கிருஷ்ண சுவாமி அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன விளக்கம் அதிர்ச்சியளித்தது…

25-10-1998

? டயபடிஸ் செக்ஸைப் பாதிக்குமா ?

! பாதிக்கும். ரெட்டினோபதி (கண்), நெஃப்ரோபதி (சிறுநீரகம்), மைக்ரோ ஆன்ஜியோபதி (இதயத்தில் சிறு குழாய்கள்) என்று ‘பதிதேவர்’கள் பலர் உள்ளனர். கால் எரிச்சலை நியூரைட்டிஸ் என்பார்கள்.

? டயபடிஸ் என்பதற்கு என்ன அர்த்தம் ?

முழுப்பெயர் டயபடிஸ் மெலிட்டஸ் (diabetes mellitus). டயபடிஸ் என்பது ஒரு கிரேக்க வார்த்தை. வடிகால், நீர் நீக்கி – உடலில் நீரை சைபன் போல் வடித்து விடுகிறதே… அதனால்!

? மெலிட்டஸ் என்றால்?

!தேன்! மொரார்ஜி தேசாய்க்கு முன்பேயே, 1684-லேயே வில்லிஸ் என்கிற இங்கிலீஷ்காரர் டயபடிஸ்காரரின் மூத்திரத்தை நாக்கில் தொட்டுப் பார்த்துத் தேனாக இனிப்பதைக் கண்டுபிடித்து எழுதியிருக்கிறார். ‘மூத்திரப் பேய்‘ என்கிற பெயரும் இட்டார் – இது வந்தவர் நிறைய மூத்திரம் போவதால்.

(ஜூனியர் விகடன் 2003)

டயபடிஸ் புராணம் தொடரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s