2.4 நம் வாழ்க்கையில் வீர்யம் – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்


FullSizeRender (50)

நாம் ராமனைப்போல் போர்க்களம் சென்று வீரம் காட்ட வாய்ப்புகள் குறைவு; ஆனால் நம் அன்றாட வாழ்க்கையில் வாய்ப்புகள் வரும். பொழுது விடிந்தால் பட்டாபிஷேகம். ஆனால் கைகேயி அதனைத் தடுத்து ராமன் காடு போக வரம் பெற்றாள்.  அதனைச் சொல்ல ராமனை அந்தப்புரத்துக்கு அழைத்தாள். செய்தி தெரியாத ராமன் உள்ளே சென்றான்; இடி போன்ற சொற்களைக் கேட்டான்; ஆனாலும் இடிந்து போகவில்லை; ஒரு சிங்கம் நடப்பது போல் முன்னிலும் மகிழ்ச்சியோடு வெளியேறினான். உள்ளே சென்றபோது ராமனின் முகம் தாமரை போல் இருந்தது; கைகேயின் கொடிய உரை கேட்டு வெளியேறும்போதோ அப்பொழுதே மலர்ந்து கொண்டிருந்த தாமரையை அவன் முகம் வென்றது – என்று கம்பர் வியந்து கூறுகிறார்.

இன்பம்-துன்பம், லாபம்-நஷ்டம், வெற்றி-தோல்வி ஆகிய இரட்டைகளை சமமாகப் பார்ப்பதே உண்மையான வீர்யம்.

கருத்து: ஆபத்துக்களைக் கண்டு அஞ்சமாட்டோம்; இன்னல்கள் நேரிடினும் எதிர்கொண்டு அவற்றைத் தூள் தூளாக்குவோம்!  வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போதும் கலங்க மாட்டோம்! ஸ்ரீராமபிரானின் பேரருளால் நாமும் நல்ல வீரர்களே! 

Advertisements

One thought on “2.4 நம் வாழ்க்கையில் வீர்யம் – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

  1. visujjm March 29, 2015 at 3:58 PM Reply

    ஓம் நமசிவாய நம

    ராம் ராம் ராம்

    ராம ராம ராம

    ஓம் நமசிவாய நம…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s