ராம நாம மகிமை! – ராமநவமி: 28.03.2015


Sri Rama Parivar

ஸ்ரீராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநனே!

– ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்

மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே

தென்இலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்

கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே

என்னுடைய இன்னமுதே! ராகவனே! தாலேலோ!

– குலசேகராழ்வார்

தர்மத்தை நிலை நிறுத்த மகா விஷ்ணு மேற்கொண்ட தசாவதாரங்களுள் ‘ராமாவதாரத்துக்கு’ தனி இடமுண்டு. ஒருவன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இறைவன் மானுட உருவம் தாங்கி மனிதனாக வாழ்ந்து காட்டிய வரலாறுதான் ‘ராமாவதாரம்’.

இராமபிரான் அவதரித்த நன்னாள் சைத்ர மாதத்து வளர்பிறை நவமி திதி நாள். புனர்பூச நட்சத்திரத்தில் கடக லக்னத்தில் நடந்தது ராம அவதாரம். மகாவிஷ்ணு, ராமர். பாம்பணையான ஆதிசேஷன், லட்சுமணன். அவரது கையில் உள்ள ‘பாஞ்சசன்யம்’ என்ற சங்கு, பரதன். சுதர்சனச் சக்கரம் சத்ருகனன் என அமைந்தது ராம அவதாரம்.

ஒருவர் ஒரு மணி நேரத்தில் பன்னிரெண்டாயிரம் முறை ஸ்ரீராமர் மந்திரம் சொல்ல இயலும். அப்படி பதிமூன்று கோடி முறை சொன்னால் சரீர வடிவில் அம்மந்திரத்தின் தேவதையாகிய ராமனைத் தரிசனம் செய்யலாம் என்று சுவாமி சிவானந்தர் கூறுகிறார்.

rama_sethu

* இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதா தேவியை மீட்டு வர, அனுமனின் தலைமையில் உள்ள வானரங்கள் கடலைக் கடந்து இலங்கையை அடைய அணை கட்டலாயின. அப்போது அனுமன் சில பாறைத் துண்டுகளில் ‘ராமா’ என்ற நாமத்தைச் செதுக்கி கடலில் எறிந்தார். அவை மிதந்து சென்றன. அதைக் கண்ட ராமபிரானும் ஒரு பாறையை எடுத்துக் கடலில் எறிய அது நீரில் அமிழ்ந்து விட்டது. இதனால் வியப்புற்ற ராமபிரான் அது பற்றி வினவ, ‘ராமனை விட ராம நாமம் உயர்வானது. மகிமை பொருந்தியது’ என்று அனுமன் எடுத்துரைத்தார்.

* ‘ரா’ ‘மா’ என்றால் யாருடைய நினைவில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகின்றதோ அவன் என்று பொருள். ‘ராமா’ என்ற சொல் பிரம்மத்தைக் குறிக்கின்றது.

* ராம என்ற நாமத்தை ஒரு முறை சொன்னால் அது சகஸ்ர நாமத்திற்கு ஒப்பானது என்று பார்வதிக்கு பரமேஸ்வரர் உபதேசித்தார்.

SriRama

* ஸ்ரீ தியாக பிரம்மம், கோடி ராம நாம ஜபம் செய்த பிறகுதான் ராமர் ஒரு கணம் அவருக்குக் காட்சி அளித்தாராம்.

* காசியில் இறப்பவர்களின் இடது காதில் பரமேஸ்வரன் ராம நாம மந்திரத்தை ஓதி கரையேற்றுவாராம்.

‘ஓம் நமசிவாய’ என்பது திருவைந்தெழுத்து. இது சிவனுக்குரிய மந்திரம்.

‘ஓம் நமோ நாராயணாய’ என்பது அஷ்டாட்சரம் எனும் எட்டெழுத்து மந்திரம். இது விஷ்ணுவிற்குரியது.

எட்டெழுத்தில் உள்ள ‘ரா’வும் ஐந்தெழுத்தில் உள்ள ‘’வும் இணைந்து உருவானது ‘ராம நாமம்’. இது தாரக மந்திரம்.

மற்ற மந்திரங்களைச் ஜெபிக்கும்போது ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்துடன் சேர்த்துத்தான் ஜெபிக்க வேண்டும். ‘ராம’ நாமத்துக்கு ஓம் சேர்க்க வேண்டாம். ‘ராம ராம’ என்றாலே போதும்.

வேள்விகள் புரிதல், கடும் தவம் செய்தல் ஆகியவற்றால் அடையும் புண்ணியத்தைப் பெற மிகச் சுலபமான வழி ஒன்று உள்ளது. அது ராம ஜெபம், நாம சித்தாந்தம். இந்த உண்மையை உரைத்தவர் காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த அருளாளர்களில் ஒருவரான ‘பகவந்நாம போதேந்திரர்’.

‘ராம ராம’ என ராமநவமி நாளில் இடைவிடாமல் ஜெபம் செய்தாலே போதுமானது. அதுவே எல்லாம் தரும்.

‘முன்மை சால் உலகுக்கெல்லாம் மூல மந்திரம் இது’ என்பார் கம்பர்.

‘நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே ராம என்றிரண்டு எழுத்தினால்’

என்றெல்லாம் ராம நாமத்தின் மகிமை பேசப்பட்டுள்ளது.

ராமநவமி நன்னாளில் ராமர் திருநாமத்தை ஜெபித்து இறையருள் பெறுவோமாக.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s