1.1 ஸ்ரீராம அவதாரம் – வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் (ராமநவமி: 28.03.2015)


SriRamaninPaathaiyil_1

ராவணன் எனும் அரக்கர் தலைவனின் தொல்லை தாளாமல் தேவர்கள் திருமாலிடம் சென்று தங்களைக் காக்குமாறு வேண்டினர். இருந்த இடத்திலிருந்தே ராவணனைக் கொல்லும் வல்லமை படைத்த திருமால், அப்படிச் செய்யாமல், மனித உருவத்தில் அயோத்தியில் தசரத மன்னனுக்கு மகனாக த்ரேதா யுகத்தில் பிறந்தார். அறுபதினாயிரம் ஆண்டுகள் புத்திரப்பேறு இல்லாமல் துன்புற்ற தசரதன், புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய, அதனால் ஸ்ரீராமன், பரதன், லக்ஷ் மணன், சத்ருக்னன் ஆகிய நால்வர் பிறந்தனர். துன்பமே அண்டாத இன்பமயமான வைகுந்தத்தில் ஆனந்தமாக வசிக்கும் பெருமான், துயரம் நிறைந்த இந்த பூவுலகத்தில் பிறந்து, பண்புகளால் தாழ்ந்த நம்மிடையே இரண்டறக் கலந்து 11,000 ஆண்டுகள் வாழ்ந்தார்; நம்மையும் உயர்த்தினார்.

நாம் யாராவது நம் நிலையிலிருந்து சற்றுக் குறைந்தவர்களோடு சமமாகப் பழகுவோமா? இனியாவது செய்வோம். அதுவே உண்மையான உயர்வு!

நற்குணங்களில் தலைசிறந்த சௌசீல்யம், அதாவது உயர்வு தாழ்வு கருதாமல் எளிமையாகப் பழகுதல், எனும் நற்பண்பை உடையவன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s