அம்மாவுடன் ஒரு சம்பாஷணை – திருமலை ராஜன்


Note from BalHanuman:

நண்பர் திருமலை ராஜன் வசிப்பது இங்கே கலிஃபோர்னியாவில்… அவர் அம்மா இருப்பதோ நவ திருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரையில்…

ஓவர் டு திருமலை ராஜன்…

சாம்பல் நிறமொரு குட்டி கருஞ்
சாந்தின் நிறமொரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி
————————————————————-

தினமும் காலையில் என் அம்மாவை அழைத்து விசாரிக்கும் பொழுது சம்பாஷணை இப்படியாகப் போகும்…

நான்: என்னம்மா இன்னிக்கு விசேஷம்?

அம்மா: இப்பத்தான் விடிஞ்சிருக்கு அதுக்குள்ள என்ன விசேஷம்?

நான்: நேற்று ஏதாவது மழை தூறல்? ம்ம். தோட்டத்தில் தண்ணீர் காட்டீனார்களா?

அம்மா: மதுரைல என்னைக்கு மழை பெஞ்சுது ஒரு மேகத் துண்டைக் கூடக் காணோம். வெயிலான்னா மண்டையைப் பெளக்கிறது. தினம் தினம் பேப்பரில் இன்று மழை பெய்யும்னு போடறான் ஆனால் ஒரு பொட்டு கூட இந்தப் பக்கம் காணும் எல்லாம் ஊட்டியிலும் கன்யாகுமரியிலும் தான் கொட்டுகிறது போ. தண்ணீர் விட்டதாகச் சொன்னாள். பெத்தம்மா வந்த பொழுது கொஞ்சம் கத்திரிக்காயும் வெண்டைக்காயும் பறித்துக் கொண்டு வந்தாள். வாழைத் தார் ரெண்டு தொங்கிறது. பலா இன்னும் பழுக்கவில்லை

நான்: அப்புறம் என்ன சமையல் இன்னிக்கு?

அம்மா: இப்பத்தான் ரெண்டு கோதுமை தோசை. மத்தியானத்துக்கு மாடியில காய்ச்சுத் தொங்கும் அவரைக்காய் பறிச்சு வச்சிருக்கேன். தோட்டத்தில் வந்த கத்திரிக்காயும் இருக்கு.
———————————————————————–

அனேகமாக மேற்படியாகப் போகும் சம்பாஷணையில் இன்று ஒரு ட்விஸ்ட்…

நான்: என்ன நடக்குது?

அம்மா: அசுவாரசியமாக ஒண்ணும் நடக்கலை

நான்: மழை?

அம்மா: மழையை விடு, நேத்தி என்ன நடந்தது தெரியுமா?

நான்: நீதான் ஒண்ணும் நடக்கலைன்னு சொன்னியே?

அம்மா: போன வாரம் பூரா மொட்ட மாடியில போய் கருவேப்பிலை, அவரைக்காய், புடலைங்காய் எதையும் பறிக்கவே முடியல. அங்கே ஒரு நாய் படுத்துக் கொண்டு என்னைக் கண்டால் வள் வள் என்று துரத்திக் கொண்டிருந்தது

நான்: அடப் பாவமே அப்புறம்?

அம்மா: நேத்து நாய் கீழே இறங்கி வெளியே போன நேரத்தில நைசா மாடியில ஏறி அவரக்கா பறிக்கிறேன், அங்கே ஷேடுக்குக் கீழே மறைவாய் மொத்து மொத்துன்னு மொத்தம் ஏழு குட்டிகள் போ…

நான்: அட்ரா சக்க. அப்புறம் ?

அம்மா: பதறிப் போய்ட்டேன். உடனே கீழேயிறங்கி வந்து பால், பால் சாதம் எல்லாம் எடுத்துண்டு போய் அத்தனைக்கும் கொடுத்தேன்

நான்: அம்மா நாய் கடிக்க வரலையா?

அம்மா: இல்லை இப்பொழுது அதற்கும் புரிஞ்சு போச்சு. இவ நம்ம குட்டிகளுக்கு சாப்பாடு கொண்டு வரான்னு. வால ஆட்டிண்டு அதுவும் குழைகிறது இப்போ

நான்: அப்புறம் குட்டிகளுக்கு எல்லாம் சாப்பாடு தடபுடலா?

அம்மா: பால் நிறையக் கொண்டு கொடுக்கிறேன். மாடிக்கும் கீழேயும் அடிக்கடி போய் வர வேண்டியிருக்கு நல்ல எக்சர்சைஸ்…

நான்: குட்டிகள் எல்லாம் என்ன கலர் ?

அம்மா: வெள்ளை, கருப்பு வெள்ளையும் கருப்பும் கருப்பும் வெள்ளையும். அத்தனையும் கொள்ளை அழகு. ஒண்ணு மேல ஒண்ணு படுத்துண்டு கொஞ்சிக் கிடக்குது எல்லாம். அக்கம் பக்கத்துக்காரா எல்லாரும் வந்து ஆச்சரியமா பார்த்து விட்டுப் போறா. கேபிள் காரன் ஒண்ணு, காய்கறிக்காரன் ஒண்ணுன்னு ஆளாளுக்கு ஒரு குட்டி கேட்டிருக்கா.

நான்: ஒரு முறை குட்டிகளை வாங்கிக் கொண்டு போய் வாழைக் கன்றுகளுக்கு உயிரோடு புதைத்து விட்டார்களே?

அம்மா: ஆம் இந்த முறை தெரியாதவன் எவனுக்கும் நான் கொடுக்க மாட்டேன். நல்லதா அதை கவனிச்சிக்கிறவாளுக்கு மட்டும்தான். மீதமெல்லாம் இங்கேயே இருந்துட்டுப் போறது நான் சாப்பாடு போட்டுக்கெறேன்.

நான்: சிக்கனம் பார்க்காமல் பால் கொடும்மா…

அம்மா: அதெல்லாம் நான் நிறையவே கொடுக்கிறேன். கூடுதலா பாலுக்குச் சொல்லியிருக்கிறேன். எனக்குக் கீழே வரவே மனமில்லை. அப்படி ஒரு அழகு. அத்தனை குட்டிகள். போன மாதம்தான் இதே இடத்தில் ஒரு பூனை நாலைந்து குட்டிகள் போட்டது இப்ப இந்த நாய். எல்லாம் என்னையே தேடி வரதுகள் என்ன செய்வது?

நான்: அது சரி ஊரில் உள்ள நாய்கள் பூனைகள் எல்லோருக்கும் உன்னைப் பற்றி தகவல் போயிருந்திருக்கும். சரி சரி பிஸியா இருப்ப போய் பால் மம்மம் ஊட்டு போ…

அம்மா: பருந்து கிருந்து தூக்கிண்டு போயிடாம அதை பத்திரமா பாதுகாத்து கேட்டவாளிடம் சேர்க்கணுமேன்னு ஒரே கவலையா இருக்கு. பெருமாளா பாத்து என் கிட்டே அனுப்பி வைச்சிருக்கார்.

—————————————————————–

நாய் குட்டி வேண்டுபவர்கள் அதை பராமரிக்கக் கூடியவர்கள் முந்துங்கள் முந்துங்கள்…

Advertisements

One thought on “அம்மாவுடன் ஒரு சம்பாஷணை – திருமலை ராஜன்

  1. yarlpavanan March 14, 2015 at 5:26 AM Reply

    இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s