வாழும் கலை – ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கருடன் ஒரு உரையாடல் – பத்ரி சேஷாத்ரி


நண்பர் அரவிந்த் சுவாமிநாதன் கூறுகிறார்…

Arvind Swaminathan

வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கரை நம் எல்லோருக்கும் தெரியும். ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் பல பொது நல பிரச்னைகளுக்காகவும் குரல் கொடுத்து வருபவர். வன்முறை இல்லாத, தீவிரவாதம் இல்லாத உலகம் மலர வேண்டும் என்று சிந்திப்பவர். அதற்காக பல பிரபலங்களைச் சந்தித்து வலியுறுத்தி வருபவர்.

அவர் முற்பிறவியில் யார் என்று தெரியுமா?

ஸ்ரீ குரு பாபாஜி என அழைக்கப்படும் மகா அவதார் பாபாஜியின் முதன்மைச் சீடரும், ஸ்ரீ யுக்தேஸ்வர் மஹாராஜின் குருவும், ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் பரம குருவும், காசி வாசி ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகளின் சமகாலத்தவரும், காசி பாபா என்ற மற்றொரு பெயரும் கொண்டவருமான ஸ்ரீ லஹரி மஹா சாயர்தான் இப்போது ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கராக மறுபிறவி எடுத்திருக்கிறாராம்!

ஐயா.. இதை நான் சொல்லவில்லை; அதுன் ரே என்னும் 3000 வருடங்களாக மறுபிறவி எடுக்காத எகிப்திய மத குருவின் ஆவி சொன்னதாக டாக்டர் வால்டர் சொல்கிறார். வால்டர் ஒரு மெடிகல் டாக்டரும் கூட. சிகாகோவின் புகழ்பெற்ற இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கும் வால்டர், தொடர்ந்து டென்வரில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றினார். அப்போது இது போன்ற சம்பவங்கள் பற்றி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். 1996ல் இருந்தே இது போன்ற முற்பிறவி-மறுபிறவி பற்றிய ஆய்வுகளில் தனித்து ஈடுபட்டு வந்த இவருக்கு, பின்னர் ”கெவின் ரியர்ஸன்” என்ற புகழ்பெற்ற மீடியமுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் மூலம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் தலைமை மருத்துவராக வாழ்ந்த ’அதுன் ரே’ என்ற மதகுருவின் ஆவியுடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை மறுபிறவி எடுக்காத அந்த ’மகா ஆவி’ யையே தனது வழிகாட்டும் ஆவியாகக் கொண்டு, பல்வேறு சிக்கல்களுக்கு விடை கண்டறிந்து வருகிறார் டாக்டர் வால்டர்.

டாக்டர் வால்டர் பற்றியும் அவர் முற்பிறவியில் யார் என்பது பற்றியும் இந்தச் சுட்டியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

http://www.iisis.net/index.php…

லஹரி மஹாசாயரைப் பற்றிய விவரங்களை இங்கே (http://en.wikipedia.org/wiki/Lahiri_Mahasaya) பாருங்கள்.

லஹரி மஹா சாயர் தான் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் என்பதற்கான ஆதாரங்களை கீழே உள்ள சுட்டியில் பார்க்கலாம்.

http://www.iisis.net/index.php…

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்(கு)
எழுமையும் ஏமாப் புடைத்து.

ஒரு பிறப்பில் கல்வி கற்றால் அது ஏழு பிறப்பிலும் உதவும். (திருக்குறள் புதிய உரை – சுஜாதா)

Arvind Swaminathan

பத்ரி சேஷாத்ரி அவர்கள் தந்தி டி.விக்காகச் செய்திருக்கும் ஸ்ரீ ஸ்ரீயின் இந்த நேர்காணல் மிக மிகச் சிறப்பானது.

Badri Seshadri

பத்ரி எடுத்த அத்தனை நேர்காணல்களிலும் நான் இதற்குத் தான் முதலிடம் கொடுப்பேன். நன்றி பத்ரி சார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s