சுஜாதாவின் ‘மாமா விஜயம்’ – பாம்பே கண்ணன்


எனக்கு நீண்ட நாளாக சுஜாதாவின் கதைகளில் ஒன்றை TELEFILM ஆக்க வேண்டுமென்ற ஆசை இருந்ததால் அவரை சந்திக்க முடிவு செய்து சென்று பார்த்தேன்

என்ன கதை என்று முடிவு செய்யவில்லை… நாலைந்து கதைகளை குறிப்பிட்டேன்… ஒரு வாரம் கழித்து பேசுவதாக சொல்லிவிட்டு அனுப்பிவிட்டார்!! ஒரு வாரம் கழித்து மறுபடியும் அவரை சந்தித்தபோது இந்த DVD/VCD மார்க்கெட் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசி எனக்கு என்ன நஷ்டம் வரலாம் என்றும் எத்தனை பேர் வாங்கலாம் என்றும் மொத்த statistics கொடுத்து என் ஆர்வத்திற்காக அனுமதி வழங்கினார்

ஒரு வாரத்திற்குள் என்ன home work!!! என்று ஆச்சரியமும் ஆனந்தமும் பட்டுக்கொண்டே வீடு திரும்பினேன்… நாங்கள் தேர்ந்தெடுத்த கதை அவருடைய சிறுகதை “வாசல்“…. “மாமா விஜயம்” என்ற தலைப்பில் டெல்லி கணேஷ் நடிக்க வெளிவந்தது.
… அதான் சுஜாதா

இது வெளிவந்தபோது முதன் முறையாக DVD/VCDல் விளம்பரங்கள் இணைத்து வெளியிட்டேன் இது ஒரு பரிச்சார்த்த முயற்சியாக இருந்ததே தவிர விளம்பரங்களுக்கு உறுதி அளித்தவர் காணாமல் போனார்.

sujatha33

நேரிடையாக விளம்பரதாரர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலைமை. விளம்பரங்கள் இருந்ததாலேயே வங்கிகள் மற்றும் CORPORATE கம்பெனிகள் வாங்க யோசித்தன. DVD/VCD மார்க்கெட்டும், ஒரு மிகப்பெரிய கம்பெனி பிரபலமான திரைப்படங்களையே குறைந்த விலைக்கு கொடுத்ததால் சரிந்தது.

சுஜாதாவின் அருமையான கதை ஒன்று TELEFILM ஆக நிறைய பேர்களை சென்று அடையவில்லை.

சுஜாதாவின் ‘கொலையுதிர் காலம்‘ தொலைக்காட்சித் தொடரில் குமார வியாசன் பாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாது. இன்றைக்கும் அதை வைத்து என்னை நினைவு கூர்பவர்கள் இருக்கிறார்கள்.

Bombay Kannan Kannan

பாம்பே கண்ணன் பற்றி…

நடிகர், நாடக ஆசிரியர், இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என்று கலையுலகில் நீண்ட அனுபவம் கொண்டவர் பாம்பே கண்ணன். ஒய்.ஜி.பார்த்தசாரதியின் UAA குழுவின் மூலம் தனது கலையுலக வாழ்க்கையைத் துவக்கிய கண்ணன், இதுவரை 3000 தடவைக்கு மேல் மேடையேறியிருக்கிறார். ‘நாடகக்காரன்’ என்ற தனது குழுவின் மூலம் நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். சென்னை மட்டுமல்லாமல் ரெய்ப்பூர், பாம்பே, அகமதாபாத், ஹைதராபாத், போபால், ஜாம்ஷெட்பூர், பெங்களூர் என்று பல இடங்களில் நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார். ‘இரு வீடு ஒரு வாசல்’, ‘ஷெர்லாக் ஷர்மா’, ‘ஒரு வினாடி பொறு’ போன்ற இவரது நாடகங்களைப் புத்தகமாக அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. பல நாடகப் போட்டிகளில் நடுவராகச் செயல்பட்டு வரும் இவர், வானொலி, தொலைக்காட்சி, நாடகம், திரைப்படம், டெலிஃபிலிம், குறும்படம், டிவிடி, ஒலிப்புத்தகம் என ஒரு ஊடகத்தையும் விடவில்லை. சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த நகைச்சுவை நாடக வசனகர்த்தா என பல விருதுகளைப் பெற்றிருக்கும் இவரது சமீபத்திய சாதனை, கல்கியின் பொன்னியின் செல்வனை ஆடியோ சிடியாகத் தயாரித்திருப்பது.

Advertisements

One thought on “சுஜாதாவின் ‘மாமா விஜயம்’ – பாம்பே கண்ணன்

  1. yarlpavanan March 8, 2015 at 5:55 AM Reply

    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s