5-படித்தவன் சூது செய்தால்… திருமலை ராஜன்


இதன் முந்தைய பகுதி…

எந்தவொரு அரசுத் துறையிலும் சரி, பல்கலைக்கழகத்திலும் சரி எந்தவொரு வேலைக்கு ஆள் எடுப்பதாக இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு மினிமம் ஃபார்மாலிட்டியை பின்பற்றுவார்கள். தமிழ் நாட்டில் இன்று வி சி பதவிகள் சீட் ஒன்றுக்கு 4 சி முதல் 8 சி வரை ஏலம் விடப் படுகிறது. பல்கலைக்கழகங்களில் லெக்சரர் வேலைக்கு 35 எல் முதல் 1.2 சி வரை ரேட் நிலவுகிறது. ப்யூன் வேலைக்கு    1 எல் முதல் 5 எல் வரை கொடுக்க வேண்டும். இருந்தாலும் காசு வாங்கிக் கொண்டாலும் கூட அதற்காக ஒரு அறிவிப்பை வெளியிட்டு அப்ளிக்கேஷன் வாங்கி அதை உளூஉளுவாக்காட்டிக்கும் ஒரு இண்ட்டர்வியூ நடத்தி காசு கொடுத்த ஆட்களுக்கு பதவி கொடுக்கிறார்கள். ஆக ஏதோ ஒரு குறைந்த பட்ச நடைமுறையை பின்பற்றுவது போல பாவலாவாவது செய்கிறார்கள்.

தமிழ் நாட்டில் வி சி பதவிக்கு என்னதான் 4 சி 6 சி வாங்கினாலும் கூட அதற்கென்று ஒரு முறைமை வைத்து அப்ளை செய்யச் சொல்லி தேர்வு கமிட்டி அமைத்து கவர்னருக்கு லிஸ்ட்டை அனுப்பி அவர் மக்கள் முதல்வர் சொல்லும் பெயரை செலக்ட் செய்வதாக ஒரு ஐதீகம் நிலவுகிறது. கடைசியில் அதிக ஏலம் எடுத்தவனே வி சி என்றாலும் கூட அதற்கும் ஒரு நடை முறை வைத்திருக்கிறார்கள். அப்ளிக்கேஷனே போடாமல் 6 சி கொடுத்தாலும் வி சி ஆக முடியாது.

ஒரு 70,000 ரூபாய் சம்பளம் கொடுக்கப் போகும் லெக்சரர் வேலைக்கே இத்தனை பம்மாத்து செய்து ஆள் எடுக்கிறார்கள் என்னும் பொழுது ஒரு 5 லட்சம் சம்பளம் தரப் போகும் வி சி வேலைக்கு அதுவும் உலகத்திலேயே இல்லாத எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான இண்ட்டர்நேஷனல் ஃப்ராட் யுனிவர்சிட்டியின் வி சி பதவிக்கு 5 லட்சம் சம்பளம் அளிக்கப் படப் போகும் பதவிக்கு பாரம்பரியமிக்க நாலந்தா பல்கலைக் கழகத்தின் வி சி க்கு எவ்வளவு தேடல் நடத்தியிருந்திருக்க வேண்டும்? உலக அளவில் அல்லவா இந்தப் பதவிக்கு தேடுதல் நடத்தப்பட்டு உலகத்தில் சிறந்ததொரு கல்வி அறிஞரும் நிர்வாகியும் அல்லவா தேர்ந்தெடுக்கப்பட்டிருந்திருக்க வேண்டும்?

இந்த வி சி பதவிக்கு எப்படி ஆள் எடுத்திருக்கிறார்கள் தெரியுமா? நான் சொல்லப் போவதைக் கேட்டுச் சிரிக்காதீர்கள். இந்த சென் 420 ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் பழைய நோபல் பரிசு வாங்கிய பெருங்காய டப்பா தோரணையில் பேராசிரியராக இருக்கிறார். அங்கிருந்து தனது லெட்டர் பேடில் இந்தியாவின் வெளியுறவு மந்திரிக்கு ஒரு கால் கடுதாசு எழுதி அனுப்புகிறார். ஐயா அமைச்சரே இந்த பல்கலையின் வி சி வேலைக்கு எல்லாம் என்னால் போய் ஆள் தேடிக் கொண்டிருக்க முடியாது. பீஹாரில் வேலை செய்ய விருப்பம் இருந்தால் போதுமானது தகுதி எல்லாம் நாம் அதிகம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஆகவே நான் சிபாரிசு செய்யும் இந்த மூன்று பேர்களில் ஒருவரை நீங்கள் அப்பாயிண்ட்மெண்ட் செய்து விடுங்கள். அந்த மூன்று பேர்கள் யார்?

1.ஸ்ரீராம் கல்லூரி லெக்சரர் கோபா சபர்வால்
2. வரலாற்றாளர் ராமச்சந்திர குஹா (இவர் ஹிஸ் ஸ்டோரிகளை ஹிஸ்டரியாக எழுதுபவர்)
3. பானு பிரதாப் மேத்தா (டுமீல் குண்டு போன்ற பத்திரிகைகளில் இந்துக்களையும்,       பா ஜ க வையும் வசை பாடி கட்டுரை எழுதுவதே இவரது ஒரே தகுதி)

அவ்வளவுதான் அவ்வளவுதான். ஐயா. சிம்ப்பிள். ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகத்தின் வி சி பதவிக்கு ஏதோ லாண்டரி லிஸ்ட் மாதிரி பலசரக்கு லிஸ்ட் மாதிரி எழுதி அனுப்புகிறார். அவர் அனுப்பிய லிஸ்ட்டில் முதல் பெயரை மன்மோகன் அரசு நியமிக்கிறது. நம்ப முடிகிறதா? இதை விட ஒரு ஃப்ராடுத்தனம் கிரிமினல் கேடித்தனம் என்னவாக இருக்க முடியும். இந்தப் படித்தவன் செய்த சூதுக்கு நம் முற்போக்காளர்கள் வக்காலத்து வாங்குகிறார்கள். என்ன மாதிரியான சமூகம் இது?

http://www.bihartimes.in/Newsbih…/…/Jan/newsbihar15Jan6.html

–நிறைவடைந்தது (பொறுமையுடன் பின்தொடர்ந்த அனைவருக்கும் நன்றி)

Advertisements

One thought on “5-படித்தவன் சூது செய்தால்… திருமலை ராஜன்

 1. நந்திதா March 4, 2015 at 11:18 AM Reply

  பெருமதிப்புக்குரியீர்
  வணக்கம்
  பல அரிய விஷயங்களைத் தொகுத்துப் பொக்கிஷமாக அளித்தமைக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s