3-படித்தவன் சூது செய்தால்… திருமலை ராஜன்


இதன் முந்தைய பகுதி…

நீளத்திற்கு மன்னிக்கவும். தினத்தந்தியின் சிந்துபாத் கதை கூட முடிந்து விடும் ஆனால் இந்த சென் 420 ஊழல் அவ்வளவு சீக்கிரம் சொல்லி முடியாது போலிருக்கிறது.

இந்த உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகத்தின் சில அம்சங்களைப் பார்க்கலாம்

1. 3000 கோடி ஒதுக்கப் பட்டு ஒரிஜினல் நாலந்தா பல்கலைக் கழகம் இஸ்லாமிய காட்டுமிராண்டி படையெடுப்பளர்களினால் அழிக்கப்பட்டு 800 ஆண்டுகள் கழித்து மீண்டும் துவக்கப் பட்ட பொழுது அதன் தலைவரும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞருமான அம்ரத்யா சென் அதில் கலந்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் பல லட்சம் சம்பளமும் ஏராளமான வசதிகளும் பெற்றுக் கொண்ட பின்னரும் திறப்பு விழாவுக்கு அவர் வரவில்லை.

2. இத்தனை கோடிகள் கொட்டி இவர்கள் கட்டிய பல்கலைக் கழகக் கட்டிடம் ஒரு சாதாரண பஞ்சாயத்து போர்டு எலிமெண்டரி ஸ்கூல் பில்டிங்கை விட மோசமானதாக சிறிய கட்டிடமாக உள்ளது.

3. உலகத் தரம் வாய்ந்த உலகத்தின் ஆகச் சிறந்த பல்கலைக் கழகங்களையெல்லாம் விடச் சிறப்பானதாக நோபல் அறிஞரின் மேதகு தலைமையின் கீழாகத் துவக்கப் பட்டுள்ள இந்தப் பல்கலைக் கழத்தின் மொத்த படிப்புக்கள் ஹிஸ்டரி, என்விராண்மெண்ட்டல் ஸ்டடிஸ் மட்டுமே. அதிலும் சேர்ந்த மொத்த மாணவர்கள் 15 பேர்கள் மட்டுமே. இந்த 15 பேர்களுக்கு வரலாறு பாடம் அதுவும் இடதுசாரிகளினால் எழுதப் படும் வரலாற்றுப் பாடங்களைப் போதிக்கத்தான் ஒரு கெட்ட பழக்க வேந்தருக்கு (வைஸ் சான்ஸலர்) 5 லட்சம் ரூபாயில் சம்பளம் நோபல் பரிசு பெற்ற சான்சலர் எல்லாமே

4. இந்தப் பல்கலைக் கழகம் யூ ஜி சி யின் கீழ் வராது. இதில் பல நாடுகளும் கலந்து கொள்வதாகச் சொல்லப்பட்டபடியால் (அப்படி எந்த நாடும் இது வரை ஒரு பைசாவைக் கூடக் கொடுக்கவில்லை) இது எது மாதிரியும் இல்லாத புது மாதிரியாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மேற்பார்வையில் வருகிறது. அப்படியே வெளியுறவுத் துறை மேற்பார்வை செய்தாலும் கூட இதற்காக ஒதுக்கப்பட்ட 3000 கோடி ரூபாய்களை ஆடிட் செய்ய எந்தவொரு இந்திய பொருளாதார நிதி அமைப்புகளுக்கும் அதிகாரம் கிடையாது. ஏனென்றால் இது நோபல் அறிஞரின் பாட்டன் வீட்டுச் சொத்து இண்ட்டர்நேஷனல் யுனிவர்சிடி. வெளக்குமாறு.

5. இந்தப் பல்கலைக் கழகத்தை எப்படி துவக்குவது என்பதை திட்டமிடுவதற்காக இது வரை சிங்கப்பூர், நியூயார்க், டோக்கியோ, டெல்லி போனால் போகிறது என்று ஒரு முறை கயாவில் கூட்டங்கள் நடந்துள்ளது. அதற்கான போக்கு வரத்து, டி ஏ , டி ஏ, ஹோட்டல் செலவு எல்லாமே ஸ்ரீமான் இந்தியக் குடிமகனது வரிப் பணம் மட்டுமே. இதன் தலைவராகிய மேதகு நோபல் சென் உலகம் முழுவதும் எந்த நேரத்திலும் எந்த நாட்டிற்கும் இந்தியன் ஏர்வேஸ் விமானத்தில் பிஸினெஸ் க்ளாஸில் இலவசமாகச் சென்று வரும் சலுகை வழங்கப் பட்டுள்ளது. அப்படி அவர் எந்த நாட்டுக்கு எதற்காகப் போனாலும் நாலந்தாவுக்காகத்தான் சென்றேன் என்று சொல்லி விடலாம் ஏனென்றால் அவர் எங்கு போனார் எதற்காகப் போனார் என்பதையெல்லாம் யாரும் எவரும் கேள்வி கேட்டு விட முடியாது ஏனென்றால் இது உலகப் பல்கலைக் கழகம். ப்ளடி இண்டியன்ஸ் கேனாட் கொஸ்ட்டின் யு நோ.

6. டெல்லியில் ஸ்ரீராம் கல்லூரி என்னும் ஆர்ட்ஸ் காலேஜில் சாதாரண லெக்சரர் வேலை பார்த்துக் கொண்டிருந்த கோபா சபர்வால் என்ற அம்மணி இந்தப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப் படுகிறார். யார் நியமிக்கிறார்கள்? யூ ஜி சி யா? கவர்னரா? ஜனாதிபதியா? கல்வி அமைச்சரா? அல்லது கவர்னராலோ ஜனாதிபதியாலோ நியமிக்கப் பட்ட துணைவேந்தர் தேர்வுக் குழுவா? மூச். எவனும் கேட்கப் படாது. சபர்வாலை ரெக்கமெண்ட் செய்தது சென் நியமித்த ஒரு ஆலோசனைக் குழு. எவனும் பல்லு மேலே நாக்கப் போட்டுக் கேள்வி கேட்க முடியாது கபர்தார். அப்பேர்ப்பட்ட அதிசய துணைவேந்தருக்கு சம்பளம் என்ன? மாதம் 5 லட்ச ரூபாய்களும் இதர படிகளும். இந்தியாவில் வேறு எந்த துணைவேந்தருக்கும் ஆனானப் பட்ட ஜவஹர்லால் நேரு ஸ்டாலின் மாவோ பல்கலைக்கழகத் துணை வேந்தருக்குக் கூட அம்புட்டுச் சம்பளம் கிடையாது. நான் பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த பொழுது ஆனானப்பட்ட எஸ்.கிருஷ்ணசாமி, சிட்டிபாபு போன்ற துணைவேந்தர்களுக்குக் கூட வெறும் 3000 ரூபாய் கவுரவச் சம்பளம் மட்டுமே கொடுத்தார்கள் 95 வது வருடம் வரையிலும். இப்பொழுது அதிக பட்சமாக 1 லட்சம் இருக்கலாம். 5 லட்சம் என்பது கிட்டத்தட்ட 8000 யு எஸ் டாலர்கள். அமெரிக்காவில் வேலை பார்க்கும் இந்த அம்மிணி தகுதியுள்ள எந்தவொரு லெக்சரருக்கும் அம்புட்டு சம்பளம் கிடையாதே. அப்படி என்ன இவரிடம் ஸ்பெஷல்? ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்றால் ஒரு பல்கலைக் கழகத்திலோ பெரிய கல்லூரியிலோ பேராசிரியராக இத்தனை ஆண்டுகள் பணிபுரிந்து இத்தனை ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த அனுபவம் வேண்டும் என்பது யூ ஜி சி நிர்ணயித்துள்ள தகுதி. அதையெல்லாம் தமிழ் நாட்டுப் பல்கலைகள் கண்டு கொள்வதில்லை. மாவட்டச் செயலாளர், மந்திரியின் மருமகள், துணைவி, எடுபிடி எல்லோரும் எவரும் தமிழ் நாட்டில் வி சி ஆகி விடலாம். இன்றைய மக்கள் முதல்வரின் ஆட்சியில் தமிழ் நாட்டில் ஒரு வி சி யின் விலை சுமார் 4 சி முதல் 8 சி வரை.  4 சி கொடுத்து வி சி ஆகி சம்பாதித்து விட்டு எடுத்த பணத்தை மீண்டும் 6 சி ஆக முதலீடு பண்ணி மீண்டும் வி சி ஆகிக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டில். அதையெல்லாம் ஜுஜுபி ஆக்கி விட்டிருக்கிறார் ஸ்ரீமான் நோபல் எக்கானமிஸ்டு மேதை. எந்த தகுதியில் எந்த அடிப்படையில் இந்தப் பெண் வி சியாக நியமிக்கப் பட்டார்? அறிவிப்பு செய்தார்களா, விண்ணப்பம் கோரினார்களா, இண்ட்டர்வ்யூ செய்தார்களா? எதுவும் கிடையாது. ஐ அம் த சான்சலர், ஐ அம் த நோபல் ஐ அம் த அத்தாரிட்டி யூ ப்ளடி இண்டியன்ஸ் கேனாட் கொஸ்ச்சென் மீ.

7. சரி இப்பேர்ப்பட்ட அதிசய வைஸ் சான்ஸலர் இந்தியாவிலேயே வேறு எவருக்குமே இல்லாத தகுதி உடைய ஒருவர் 5 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு அந்த நாலந்தா இருக்கும் பீஹாருக்குச் சென்றாரா ? அவர் என்ன கவர்மெண்ட் ஆப்பீசரா டிரான்ஸ்ஃபர் கொடுத்தவுடன் மூட்டையக் கட்ட? ஆனானப் பட்ட நோபலுக்கு வேண்டப் பட்டவர் ஆயிற்றே. ஆகவே அவர் டெல்லியிலேயே தன் வைஸ் சான்சலர் வேலையைத் தொடர்கிறார். எக்ஸ்க்யூஸ் மீ நாலந்தா? வாட்? அது எங்கே இருக்கிறது? அப்படி ஒரு ஊர் இருக்கிறதா என்ன? நான்சென்ஸ். நான் எல்லாம் வி சி ஆக்கும் டெல்லியை விட்டுப் போக மாட்டேன் என்று அங்கேயே இருந்தும் கொண்டார். ஆக சான்ஸலர் மிஸ்டர் நோபல் பாஸ்டனில் வசிக்கிறார் அங்கு போரடித்தால் பொண்டாட்டி ஊரான லண்டனுக்குப் போய் விடுவார். அவரைப் போய் கேவலம் ஆடு மாடு திரியும் பீஹாருக்குப் போகச் சொன்னால் எவன் போவான்? நியூயார்க்கிலும், லண்டனிலும் இருந்து நான் ஆணி புடுங்குகிறேன் நீ டெல்லியில் இருந்து புடுங்கினால் போதும் என்று இருவரும் இருந்து கொண்டார்கள். இதைக் கண்டு பொறுக்காத நிர்வாகக் குழுவில் நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் கொந்தளித்து போங்கடா நீங்களும் உங்கள் டுபாக்கூர் யுனிவர்சிடியுமாச்சு என்று கால் கடுதாசி கொடுத்து விட்டு விலகிக் கொண்டிருக்கிறார்.

8. 2011ம் ஆண்டு இந்த பல்கலைக்கு கொடுக்கப்பட்டுள்ள நிதி போதாது என்று மேலும் பல நூறு கோடிகளைக் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை பரிந்துரைக்கிறது. அது சரி நியூயார்க்கிலும், சிட்னியிலும் அல்லவா கூட்டங்கள் நடத்த வேண்டியிருக்கிறது கேவலம் எப்படி பிச்சைக்காசு 1006 கோடி ரூபாய்கள் போதும். ஆகவே போடு இன்னும் ஒரு 2000 கோடி ரூபாயை ஒதுக்கு அண்ணன் சென்னுக்கு என்று ஒதுக்கிக் தள்ளி விட்டார்கள். கடைத் தேங்காயை எடுத்து சென் பிள்ளையாருக்கு உடைத்து விட்டார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

9. வெளியுறவு அமைச்சகத்தில் ஆர் டி ஐ அடித்து எப்பொழுதில் இருந்து இந்த வைஸ் சான்ஸலர் செயல் படுகிறார் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆகஸ்ட் 25 2011 வரை வைஸ்சான்சலர் என்று எவரும் நியமிக்கப்படவில்லை என்று புளுகுகிறார்கள் உண்மையில் அக்டோபர் 2010ல் இருந்தே இந்த கோபா சபர்வால் மாசம் ரூபாய் 5,06,513 தண்டச் சம்பளமாக வாங்கிக் கொண்டு இருந்திருக்கிறார்.

10. இந்த பல்கலையில் வேலை பார்க்கும் ஸ்ரீமான் சென் 420 ல் ஆரம்பித்து இந்த கோபா சபர்வால், அஞ்சனா சர்மா தோலான் துருத்தி அனைவருக்கும் வருமான வரி கிடையாது. ஆம் இவர்களது சம்பளத்தையும் எவரும் கேள்வி கேட்க முடியாது இவர்களுக்கு வரியையும் விதிக்க முடியாது. இந்தியாவில் வருமான வரி விலக்கு பெற்ற சிறப்பான பல்கலை ஊழியர்கள் இவர்கள். நீங்கள் கஷ்டப்பட்டு நாள் முழுக்க உழைத்தாலும் வாங்கும் சம்பளத்தில் வரியைப் பிடித்துக் கொண்டுதான் மீதம் தருவார்கள். ஆனால் இந்த மோசடிக் கும்பலுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது ஏன்?

11. இந்த நிர்வாகக் குழுவின் இரு முக்கியமான உறுப்பினர்கள் அட்வைஸர்களாக நியமிக்கப் படுகிறார்கள். அவர்களுக்கு நாலந்தா குறித்தோ புத்தமதம் குறித்தோ இந்திய தத்துவம் குறித்தோ வேறு எந்தவிதமான வரலாறு புவியியல் பொருளாதார கம்ப்யூட்டர் அறிவோ கிடையாது. யார் அந்த சிறப்பான ஆலோசகர்கள்? அவர்கள் என்ன விதமான ஆலோசனையை இந்தப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கினார்கள்? அவர்கள் உலகப் புகழ் பெற்ற பல்கலைகளின் தலைவர்களா பேராசிரியர்களா? கிடையாது. ஒரு ஆலோசகரின் பெயர் உபேந்தர் சிங். யார் இந்த உபேந்தர் சிங்? அவரது தகுதி என்ன? தராதரம் என்ன? அவர் ஹார்வார்டின் தலைவரா? ஸ்டான்ஃபோர்டின் டீனா? ஹாப்க்கின்ஸின் ரெக்ட்டாரா? பெர்க்கிலியின் ரீஜெண்ட்டா? யார் அவர்? அவர் அவர்களையெல்லாம் விட மிகப் பெரியவர். அப்பழுக்கற்ற கைகளுக்குச் சொந்தக்காரரும் கொட்டாவி விடுவதற்கு மட்டுமே வாய் திறந்த புகழுடையவரும் பயாலஜிகல் வொண்டராக முதுகெலும்பு இல்லாத மனிதப் பிறவியும் 2ஜி முதல் நிலக்கரி வரை சகல ஊழல்களின் பிதாமகருமான ஸ்ரீமான் மன்மோகன் சிங் அவர்களுடைய உத்தம புத்திரி. இதை விடவா ஒரு பெரிய தகுதி ஒரு பெரிய பல்கலைக் கழகத்தின் ஆலோசகருக்கு வேண்டும்? இந்த மன்மோகனைத்தான் உத்தமன் என்று இன்னும் இந்த உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது.

12. துவக்கப் பட்ட ஹிஸ்டாரிக்கல் ஸ்டடிஸுக்கும், என்விராண்மெண்ட்டல் ஸ்டடிஸூக்கும் கார்ப்பொரேஷன் கக்கூஸ் அளவுக்கு ஒரு பில்டிங் கட்டிக் கொண்டு பல நூறு கோடி கணக்கு எழுதிக் கொள்கிறார்கள். அடுத்ததாக துவக்கப்படப் போகும் இண்ட்டர்நேஷனல் ஸ்டடீஸ்க்கான கட்டிடத்தை டெல்லியிலேயே கட்டிக் கொள்கிறார்கள். பின்ன என்ன கூந்தலுக்குடா அதற்கு நாலந்தா என்று பேர் வச்சீங்க?

13. 2012-13ம் வருடம் சுப்ரமணியம் சுவாமி போன்றவர்கள் இதில் ஊழல் நடக்கிறது என்று குரல் எழுப்பியவுடன் பாராளுமன்ற நிதி குழு இந்தப் பல்கலையில் செலவுகள் முறைகேடாக நடக்கின்றன என்று கேள்வி எழுப்புகிறது. தொடர்ந்து சி ஏ ஜி இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகக் கூறுகிறது.

14. பேர் என்னவோ நாலந்தா பல்கலைக் கழகம். ஊர் என்னவோ நாலந்தா. அது இருப்பதோ பீஹாரில். ஆனால் ஸ்ரீமான் சென் 420க்கும் அவரது கும்பலுக்கும் உலக மேப்பில் கூட நாலந்தா எங்கிருக்கிறது எந்தத் திசையில் இருக்கிறது என்பது தெரியாது. அவர்களின் அலுவலகக் கட்டிடம் எல்லாமே டெல்லியிலேயே செயல்படுகிறது

இன்னும் வரும்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s