புக் மார்க்ஸ் – என்.சொக்கன்


சுஜாதாவின் எழுத்து மக்களிடையே பிரபலமாகிக்கொண்டிருந்த நேரம். அவரது முகத்தையும் அதே அளவுக்குப் பிரபலப்படுத்த நினைத்தார் பத்திரிகையாளர், எழுத்தாளர் சாவி.

இதற்காக, ‘சுஜாதாவைச் சந்திக்க வாருங்கள்’ என்று வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்தார்கள்.

அந்தக் கூட்டத்தில் சுஜாதா பேசி முடித்தவுடன், கலந்துரையாடல் தொடங்கியது. வாசகர்கள் அவரிடம் விதவிதமான கேள்வி கேட்கத் தொடங்கினார்கள்.

ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்த இந்தக் கேள்வி – பதில் நிகழ்ச்சி, மெதுவாக போரடிக்க ஆரம்பித்தது. நிறைய அபத்தமான கேள்விகள் வந்தன. சுஜாதாவுக்கு எரிச்சலாகி விட்டது.

அப்போது ஒரு வாசகர், ‘உங்களுக்குப் பாடத் தெரியுமா?’ என்று கேட்டார்.

‘ஒரே ஒரு பாட்டு தெரியும், பாடுகிறேன்’ என்றார் சுஜாதா. எழுந்து நின்று சத்தமாகப் பாடத் தொடங்கினார். ‘ஜனகனமன அதி நாயக ஜெயஹே!”

வேறு வழியில்லாமல், வாசகர்களும் எழுந்து நின்றார்கள். போரடிக்கும் கூட்டம் அதோடு நிறைவு பெற்றது!

(ஆதாரம்: திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய ‘சில மேடை நினைவுகள்’ கட்டுரை).

N. Chokkan

வாசிப்புப் பழக்கம் என்பது, ஒரு வழிப் பாதை. அதனுள் சென்ற யாரும் அந்தச் சுகமான வலையிலிருந்து விடுபட விரும்புவதே இல்லை. மேலும் மேலும் புதிய புத்தகங்கள், எழுத்தாளர்கள் என்று தேடித்தேடி வாசித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

புத்தகங்களைப் படிப்பது ஓர் இனிய அனுபவம் என்றால், புத்தகங்களைப்பற்றி, அவற்றை எழுதிய எழுத்தாளர்களைப்பற்றி, பொதுவான வாசிப்புப் பழக்கங்களைப் பற்றிப் படிப்பது இன்னும் பரவசமூட்டுகிற விஷயம். இதன்மூலம் பல படைப்பாளிகளின் இதயக் கதவுகள் நமக்காகத் திறக்கின்றன. அவர்களை இன்னும் நெருங்கி உணர்ந்து கொள்கிறோம்.

வாசிப்புப் பழக்கம் உள்ள எவருக்கும், இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம். நீங்கள் படித்தறிந்த, அல்லது அறியாத பல படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகங்கள், அவர்களது சிந்தனைகள், வாழ்க்கை நிகழ்வுகளையெல்லாம் சுவையான குறுங்கட்டுரைகளின் வடிவில் தரப்பட்டுள்ளன. அதோடு, நாம் எதையெல்லாம் வாசிக்கவேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் புத்தகத்தை நீங்கள் எந்தப் பக்கத்திலும் பிரித்துப் படிக்கத் தொடங்கலாம். சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம் கேரண்டி!

One thought on “புக் மார்க்ஸ் – என்.சொக்கன்

  1. yarlpavanan March 1, 2015 at 2:27 PM Reply

    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s