2-படித்தவன் சூது செய்தால்… திருமலை ராஜன்


இதன் முந்தைய பகுதி…

பல்கலைக் கழகம் துவங்க முடிவெடுத்தவுடன் அது குறித்து சில தீர்மானங்கள் போடுகிறார்கள். அதன்படி 3000 கோடி ரூபாய்கள் செலவழிக்கும் அந்த மாபெரும் திட்டத்தை இந்திய அரசின் எந்த அமைப்பும் கேள்வி கேட்க முடியாது. அது வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் வருமே அன்றி மனிதவள கல்வித் துறையின் கீழே வராது.

இந்தப் பல்கலைக் கழகத்தின் தலைவர் எனப்படும் சான்ஸலர் என்ற பதவிக்கு நோபல் பரிசு பெற்ற அமர்த்யா சென்னை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் ஏற்கனவே இந்திய அரசியலில் சார்பு நிலை எடுத்து மோடியைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி.

ஒரு உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகமாக ஹார்வோர்டுக்கும், ஸ்டான்ஃபோர்டுக்கும் இணையான ஒன்றாக உருவாக்க வேண்டும் என்றால் அதில் என்ன்ன துறைகள் இருந்திருக்க வேண்டும்? உலகத் தரம் வாய்ந்த ஹார்வார்ட் போன்ற பல்கலைக் கழகங்களீல் உள்ள துறைகள் போல இந்தியாவின் தேவைக்கும் இந்தியாவின் கலை பண்பாடு பாரம்பரியத்தின் தொடர்ச்சிக்குமான படிப்புகள் வைக்கப் பட்டிருக்க வேண்டும். அல்லது இதில் ஆர்வம் காட்டும் நாடுகளான ஜப்பான் போன்ற நாடுகள் கோரியது போல புத்த தத்துவ ஆராய்ச்சி இந்திய தத்துவங்கள் சார்ந்த படிப்புகளாவது இருந்திருக்க வேண்டும்.

ஆனால் சென் துவக்கியதோ சோஷியாலஜி, என்விராண்ட்மெண்ட் சயின்ஸ் மற்றும் ஐடி படிப்புகள். அட. கம்ப்யூட்டர் கற்றுத் தரத்தான் குப்பனாம் பட்டியில் ஆரம்பித்து முக்குக்கு முக்கு வீதிக்கு வீதி எம் சி ஏ சொல்லித் தரும் கல்லூரிகள் தடுக்கி விழுந்தால் இருக்கின்றனவே. இதற்காகவா 3000 கோடி ரூபாய்கள்? இதுவா நாலந்தாவின் தொடர்ச்சி?

சரி போகட்டும் ஏதோ சில பாடங்களை வைத்து ஆரம்பிக்கிறார்கள். இந்தியாவின் புகழ் பெற்ற பிருமாண்டமான பல்கலைக் கழமாக விளங்கிய நாலந்தாவின் தொடர்ச்சியாக உருவாக்கப்படப் போகும் ஒரு பல்கலைக் கழகத்திற்கு இந்தியாவின் தத்துவங்களிலும் இந்தியாவின் பாரம்பரியங்களிலும், இந்திய மதங்களிலும், இந்தியப் பண்பாடுகளிலும் இந்தியக் கலைகளிலும் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றங்களிலும் இந்தியாவின் தொழில் நுட்பங்களிலும் ஆர்வம் உள்ளவரும் அதே சமயத்தில் நல்ல நிர்வாகியுமான ஒருவரையல்லவா தலைவராக நியமித்திருக்க வேண்டும். அப்துல் கலாம், கஸ்தூரி ரங்கன், சி என் ஆர் ராவ், சிதம்பரம் போன்றவர்கள் அல்லவா அதன் சான்சலராக நியமித்திருக்க வேண்டும். ஒரு இடதுசாரியும் இந்திய கலை பண்பாடு கலாசாரம் எதையுமே கீழாகப் பார்க்கும் கேவலமாகச் சித்தரிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு நபரை அவர் நோபல் பரிசு பெற்றவர் என்ற ஒரே காரணத்தினால் மட்டும் காங்கிரஸ் அரசாங்கம் தேர்வு செய்ததன் ரகசியம் என்ன?

அவர் காங்கிரஸின் அரசியலை செய்து வரும், இடதுசாரிகளின் கொள்கைகளைப் பரப்பி வரும் இந்தியாவை கேவலமாகச் சித்தரிக்கும் மனநிலை உள்ள ஒருவர் என்பதினால் மட்டுமே அதற்கான பரிசாக மட்டுமே இந்த பல்கலைக் கழகத்தை உருவாக்கி அதன் தலைவராக அவரை நியமிக்கிறது காங்கிரஸ் அரசு. அவரும் வாங்கிய காசுக்கும் கொடுத்த பதவிக்கும் விசுவாசமாக காங்கிரஸின் நன்றியுள்ள நாயாக உழைக்கிறார். மோடி எப்படியும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். பிரசாரம் செய்கிறார். மணி சங்கர ஐயரை விட மோசமாக மோடியைத் தாக்குகிறார். இதற்காகவா இவரை நாலந்தா பல்கலைக் கழகத்தின் தலைவராக மக்கள் பணத்தில் நியமித்தார்கள். ஜப்பானும், சீனாவும் இதற்குத்தானா அதில் பங்கு கொள்ள விரும்பினார்கள்?

அப்படி துவக்கப் பட்ட பல்கலைக் கழகத்தின் தலைவரான சென் மீது ஏராளமான புகார்கள், குற்றசாட்டுக்கள் எழுகின்றன. அவற்றுள் சில:

1. ஒரு உலகத் தரமான பல்கலைக் கழகத்திற்கு சான்சலராக ஒரு 80 வயது முதிர்ந்த அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவுடன் தொடர்புகள் அற்ற ஒருவரை காங்கிரஸ் கட்சி நியமிக்கிறது. அவர் தனது கீழே பணிபுரியும் ஆட்களை நியமிக்கிறார். ஒரு உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகத்தின் அன்றாட நிர்வாகங்களைக் கவனிக்கப் போகும் படிப்புக்களைத் தீர்மானிக்கப் போகும் தலைவராக துணைவேந்தராக எப்பேர்ப்பட்ட தகுதியுள்ள நபர் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்திருக்க வேண்டும்? நிர்வாகத் திறனும், ஆராய்ச்சி நோக்கும், கல்வியிலும் தத்துவங்களிலும் பாண்டித்தியமும் தலைச் சிறந்த அறிவும் உடைய ஒரு நுட்பமான அறிஞரை அல்லவா தேர்தெடுத்திருந்திருக்க வேண்டும். மாறாக அமர்த்தியா சென் யாரை துணைவேந்தராக நியமிக்கிறார். டெல்லி ஸ்ரீராம் கல்லூரி என்னும் கல்லூரி ஒன்றில் துணை பேராசிரியராக லெக்சரராக வேலை பார்த்த ஒரு பெண்மணியைத் தேர்வு செய்கிறார்

கோபா சபர்வால் என்ற அந்தப் பெண்மணியை எந்தவிதமான முறையான தேர்வும் இன்றி எந்தவிதமான விதிகளும் பின்பற்றப்படாமல் சென்னின் அடியாள்கள் குழு நியமிக்கின்றது. அவரது ஒரே தகுதி ஸ்ரீராம் கல்லூரியில் சோஷியாலஜி துறையில் குப்பை கொட்டியது மட்டுமே. ஒரு உலகத் தரம் வாய்ந்த பல்கலைக் கழகத்திற்கு 3000 கோடி ரூபாய்களை நிர்வாகிக்கும் பொறுப்புக்கு இந்தியாவில் வேறு முறையாகப் படித்த தகுதியுள்ள நிர்வாகத் திறன் உள்ள அறிஞர்கள் ஒருவர் கூடவா அகப்படவில்லை?

இந்தப் பெண்மணிக்கும் சென்னுக்கும் என்ன தொடர்பு? ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? ஏன் எந்த விதிமுறைகளும் பின்பற்றப் படவில்லை. இதையெல்லாம் மோடி அரசு முறையாக விசாரிக்க வேண்டும். இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு யூனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா பெர்க்கிலிக்கோ அல்லது ஒரு யேல் பல்கலைக்கழகத்திற்கோ ஒரு டூட்டோரியல் காலேஜ் பார்ட் டைம் லெக்சரரை அதன் தலைவருக்கு நெருக்கமானவர் என்பதினால் நியமிப்பது போல இருக்கிறது.

இதே போன்று தகுதியில்லாத நபர்களை பல்கலைக் கழகத் துணைவேந்தர்களாக நியமிக்கும் கேவலம் இந்தியா முழுவதும் இருந்துதான் வருகிறது. ஆனால் நாலந்தா என்பது உலகத்தரமானது அல்லவா? இண்ட்டர்நேஷனல் பல்கலை அல்லவா? பர்க்கா தத் சொல்வது போல ஹார்வார்டை விட மேலானது அல்லவா? உலகத்தில் எங்கும் இல்லாத அதிசயமாக வெளியுறவுத் துறையினால் நிர்வாகிக்கப்படுவது அல்லவா? அதன் நிதி மேலாண்மையை எவருமே கேள்வி கேட்க்க முடியாத சர்வ வல்லமை உள்ள பல்கலை அல்லவா? அதற்குப் போய் கேவலம் ஒரு ஆர்ட்ஸ் காலேஜில் சோஷியாலஜி டிப்பார்ட்மெண்ட் லெக்சரர்தானா கிடைக்கிறார் இவர்களுக்கு?

தமிழ் நாட்டில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் உயர்கல்வியைக் கேலிக் கூத்தாக ஆக்கி வருகிறார்கள். ஜெயலலிதாவுக்கு உதவி செய்த கவர்னர்/ஜட்ஜிடம் எடுபிடி ஏஜெண்டாக இருந்த ஒரு ஆளை அவரிடம் ப்யூன் வேலை பார்த்த ஒரு அடியாளை ஜெயலலிதா ஒரு பல்கலைக் கழகத்திற்குக் கூசாமல் வி சியாக நியமித்தார். பதிலுக்குக் கருணாநிதி ஏதோ ஒரு கல்லூரியில் லெக்சரராக வேலை பார்த்த தன் மந்திரியின் வைப்பாட்டியின் தம்பியை வி சியாக நியமிக்கிறார். பதிலுக்கு ஜெயலலிதா போட்டியாக தனது கட்சிக்காரரின் மருமகளை எந்தவிதமான அடிப்படைத் தகுதியும் இல்லாத ஒருவரை வி சியாகப் போடுகிறார். இப்படியாகப் போட்டி போட்டுக் கொண்டு கண்ட கண்ட கழிசடைகளையும் வி சியாக நியமித்து தமிழ் நாட்டுப் பல்கலைக் கழகங்களை சாக்கடையை விடக் கேவலமான இடங்களாக மாற்றி வருகிறார்கள். அவர்கள் இருவரும் அரசியல் வாதிகள், ஊழல்வாதிகள், படிக்காதவர்கள், உயர் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும் அறியாதவர்கள். அவர்கள் அயோக்கியர்கள் படிக்காத தற்குறிகள். அவர்கள் ஊழல் செய்தால் தகுதியில்லாத தராதரம் இல்லாத ஆட்களை விசிக்களாக நியமித்தால் அது அவர்கள் தரம் அவர்கள் அரசியல் என்று புறம் தள்ளி விடலாம். ஆனால் சென் எப்பேர்ப்பட்ட அறிஞர்? நோபல் பரிசு வாங்கியவர் அல்லவா? படித்தவர் அல்லவா? அவரும் ஜெயலலிதா போலவே ஒரு ஆர்ட்ஸ் காலேஜ் லெக்சரரை ஒரு மாபெரும் பல்கலைக் கழகத்துக்கு நியமித்தால் அது அயோக்கியத்தனம் அல்லவா? படித்தவன் செய்யும் சூது அல்லவா?

சரி அப்பேர்ப்பட்ட சோஷியாலஜி அறிஞரும் இந்தியாவில் எங்கு தேடியும் கிடைக்காத நிர்வாகியுமான சபர்வாலுக்கு இந்திய பல்கலைக் கழகங்களின் வரலாற்றில் இல்லாத ஏன் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் சம்பளத்தை விட அதிகமாக அவர்களே சம்பளம் நிச்சயித்துக் கொள்கிறார்கள். அப்பாயிண்ட்மெண்ட்டும் அவர்களே சம்பளமும் அவர்களே. ஆம் அவருக்கு சம்பளமாக மாதம் 5 லட்ச ரூபாய்களை நிச்சயம் செய்கிறார் சென். யார் வீட்டுக் காசு? இவர் அப்பன் வீட்டுக் காசா?

அந்த சபர்வால் உடனே தனக்கென்று சில பதவிகளை உருவாக்கி அந்தப் பதவிகளுக்கும் எந்த ஒரு முறையுமின்றி தனது ஆட்களை நியமித்து ஆளுக்கு 2 லட்சம் 3 லட்சம் என்று சம்பளமும் அளிக்கிறார். ஆக எந்தவிதமான தகுதியும் இல்லாத ஆட்களை நியமித்ததும் இல்லாமல் அவர்களுக்கு இந்தியாவில் வேறு எந்தவொரு பல்கலையிலும் இல்லாத அளவுக்கு அசாத்தியமான அபரிதமான சம்பளத்தையும் வழங்கிக் கொள்கிறார்கள்.

அவர்கள் எப்படி அப்பாயிண்ட்மெண்ட் செய்யப் பட்டார்கள் என்பதையோ அவர்களுக்கு எந்த நியதிப் படி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது என்பது குறித்தோ எவரும் கேள்வி கேட்க முடியாது அந்தப் பல்கலைக் கழகம் இந்தியாவின் எந்த சட்ட திட்டங்களூக்கும் உட்பட்டது அல்ல என்று சென் சொல்லி விடுகிறார். காமன் வெல்த் ஊழல், 2 ஜி ஊழல்களையெல்லாம் அரசியல்வாதிகள் அயோக்கியர்கள் செய்தார்கள். ஆனால் இதை மெத்தப் படித்த மேதாவி நோபல் பரிசு வாங்கிய பொருளாதார மேதை செய்கிறார், படித்தவன் சூது செய்கிறார்.

சபர்வால் தனது தோழி அஞ்சனா ஷர்மாவை ஆபிசர் ஆன் ஸ்பெஷல் டுயூட்டி என்ற பதவியில் நியமித்து அவருக்கு மாதம் 3.5 லட்சம் சம்பளம் கொடுக்கிறார். இப்படியாக சென், சபர்வால், சர்மா கும்பல் சேர்ந்து கொண்டு பல்கலைக் கழகத்தில் பல்வேறு பதவிகள் உருவாக்கி அவர்களுக்கு எல்லாம் சகட்டு மேனிக்கு மாதம் 2 லட்சம் 3 லட்சம் என்று சம்பளம் தங்களுக்குத் தாங்களே அளித்துக் கொள்கிறார்கள். இதை எவரும் கேள்வி கேட்க முடியாது என்றும் அவர்களே ரூல் போட்டுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் காங்கிரஸ் அரசாங்கம் கேள்வி கேட்காமல் வேடிக்கை பார்க்கின்றது. ஏன்? ஏனென்றால் அப்படி தர்ம சம்பளம் கொடுக்கப் பட்ட நபர்களில் ஒருவர் முறைகேடாக நியமிக்கப்பட்ட ஆட்களில் ஒருவர் உலக மகா யோக்கியன் உத்தம புத்திரன் பொருளாதார மேதை மன்மோகனின் உத்தம புத்திரி.

படித்தவர்கள் செய்த ஊழல்கள் இத்தோடு நிற்கவில்லை இன்னும் தொடர்கிறது. 3000 கோடிகள் அல்லவா? கொள்ளையடிக்க சற்று நேரம் எடுக்கும் அல்லவா?

தொடரும்…

Advertisements

One thought on “2-படித்தவன் சூது செய்தால்… திருமலை ராஜன்

  1. Jayashrimohanasundaram February 26, 2015 at 5:45 PM Reply

    I feel really pity for our country. The number one culprit are the politicians they already spoiled our country and are still doing. They cannot withhold the reputation of the ancient Nalanda University. All the literates and the illiterates are jointly bringing our country to a shameful shape. All the like minded people like APJ should come forward to save this ancient University

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s