1-படித்தவன் சூது செய்தால்… திருமலை ராஜன்


ஐயோ கொல்றாங்க ஐயோ கொல்றாங்க. இந்த வசனத்தை இந்த முறை பேசியிருப்பவர் முத்தமிழ் வித்த டாக்டர் கலைஞர் அல்ல பாரத ரத்னா நோபல் லாரெட் அமர்த்யா சென்.

நாலந்தா பல்கலைக் கழகத்தின் சான்சலரான சென்னுக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் முடிவை உடனடியாக எடுக்காததன் மூலமாக ஒரு நோபல் பரிசு பெற்ற அறிஞரை, இந்தியாவின் மாபெரும் எக்கானாமிஸ்ட்டை மோடி அரசாங்கம் அவமானப் படுத்தி விட்டது, கேவலப் படுத்தி விட்டது, பழி வாங்குகிறது என்று இந்தியாவின் மீடீயாக்களும் இடது சாரிகளும் கூக்குரல் எழுப்பத் துவங்கி விட்டார்கள். காலையில் எழுந்தவுடன் ஆய் வரவில்லையென்றால் அதற்கும் பாசிச மோடி அரசுதான் இவர்களுக்குக் காரணமாகத் தெரிகிறது.

கடந்த காங்கிரஸ் அரசாங்கம் நாலாந்தாவில் முஸ்லீம் படையெடுப்பாளர்களினால் எரிக்கப் பட்ட பல்கலைக் கழகத்தின் நினைவாக ஒரு மாபெரும் புது பல்கலைக் கழகம் துவங்க திட்டம் போடுகிறார்கள். அப்படி ஒரு பல்கலைக் கழகம் துவங்கி அதை உலகப் புகழ் பெற்ற பல்கைக்கழகமாக ஆக்க வேண்டும் என்பது முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கனவும் கூட. இதில் இந்நாள் ஜனாதிபதியும் முன்னால் நிதி மந்திரியுமான பிராணாப் முகர்ஜியும் இதில் ஆர்வம் காட்டுகிறார். இதற்காக கிட்டத்தட்ட 2700 கோடி ரூபாய்கள் நிதி ஒதுக்கி காங்கிரஸ் அரசாங்கம் இந்தப் பல்கலைக் கழகத் திட்டத்தைத் துவக்குகிறது.

அதன் தலைவராக சான்சலராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியா சென்னை நியமிக்கிறது. அவருக்கும் அவர் நியமிக்கப் போகும் துணைவேந்தர், இணைவேந்தர் தோலான் துருத்தி என்று அனைவருக்கும் இந்தியப் பல்கலைக் கழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பெரும் சம்பளம் அளிக்கப் படுகிறது. இந்தப் பல்கலைக் கழகத்தின் மீட்டிங்குகள் எல்லாமே நாலந்தாவைத் தவிர உலகின் அனைத்து பெரிய நகரங்களிலும் நடத்தப் பட்டு பல ஆயிரம் டாலர்கள் செலவழிக்கப் படுகின்றன.

இந்தப் பல்கலைக் கழகத்தில் உலக நாடுகள் எல்லாம் பங்களிக்கப் போவதினால் இது ஒரு இண்ட்டர்நேஷனல் பல்கலைக் கழகம் என்று சொல்லி அதனால் இது இந்தியாவின் வெளியுறவுத் துறையினால் நிர்வாகிக்கப் படும் என்று ஏற்பாடு செய்யப் படுகிறது. இந்தப் பல்கலைக் கழகத்தில் என்ன செய்யப் போகிறார்கள், என்ன பாடங்கள், திட்டம் என்ன, ஆயிரம் கோடி நிதியை எப்படிச் செலவழிக்கப் போகிறார்கள் அதன் வரவு செலவுகளை யார் மேற்பார்வை செய்யப் போகிறார்கள் என்ற தெளிவு இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று துவக்குகிறார்கள்.

அதன் சான்சலராக நியமிக்கப்பட்ட பொருளாதார மேதை பல்கலைக் கழகம் 800 ஆண்டுகளுக்குப் பின்னர் துவக்கப்பட்ட அன்று கூட கலந்து கொள்ளவில்லை. அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அவரால் நியமிக்கப் பட்ட வைஸ் சான்ஸலர் ஐந்தரை லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு டெல்லியில் இருக்கிறார். இதனால் எரிச்சல் அடைந்த பல்கலைக் கழகத்தின் இன்னொரு முக்கியமான தலைவராக நியமிக்கப் பட்ட அப்துல் கலாம் ராஜினாமா செய்து விட்டு தன் கண்டனங்களை ஒரு லெட்டராக வெளியுறவுத் துறைக்கு அனுப்பி வைத்து விட்டு வெளியேறி விடுகிறார்.

பல்கலைக் கழகம் துவக்கப் பட்டு எதுவும் உருப்படியாக நடப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை. கொடுக்கப்பட்ட 1200 கோடிகளுக்கு என்ன கணக்கு என்று கேட்டதற்கு பொருளாதார மேதை யாரிடம் கேட்கிறாய் கணக்கு நான் ராஜினாமா செய்து விடுவேன் என்று மிரட்ட காங்கிரஸ் அரசு பம்மி விடுகிறது. அவரது ஆட்கள் எல்லோரையும் அவரே தகுதியில்லாத நபர்களைக் கொண்டு நியமித்து அவர்களுக்கு அவர்களே பல லட்சம் ரூபாய் சம்பளங்களையும் கொடுத்துக் கொள்கிறார்கள். இப்படி ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்று மக்களின் வரிப்பணத்தை வைத்து சென்னும் அவரது கூட்டாளிகளும் இதில் இன்னொரு பொருளாதார மேதையான மன்மோகனின் மகளும் அடக்கம் வாண வேடிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது அவர் பதவிக் காலம் முடியப் போகிறது. அவரால் நியமிக்கப்பட்ட ஜால்ரா குழுவினர் அவரே தொடர வேண்டும் என்று தீர்மானம் போடுகிறார்கள். அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்கள். ஜனாதிபதி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து விட்டு காத்திருக்கிறார். பல ஆயிரம் கோடி பொருட் செலவில் துவக்கப் பட்டு உருப்படியாக எதுவும் நடக்காத ஒரு பல்கலைக் கழகத்தில், கணக்குக் கேட்டால் கோபித்துக் கொள்ளும் அதே தலைவரைத் தொடரச் செய்வதா வேண்டாமா என்பதை மத்திய அரசு இன்னமும் முடிவு செய்யவில்லை. அவர் வேண்டாம் என்று இன்னமும் உறுதியாகச் சொல்லி விடவும் இல்லை. இன்னமும் அதற்கு அவகாசம் இருக்கும் நிலையில் என்னை காக்க வைத்து அவமானப் படுத்தி விட்டார்கள் என்னைப் பழிவாங்கி விட்டார்கள் பாசிச பா ஜ அரசு அரசியல் செய்கிறது என்று சென் தானே போட்டியில் இருந்து விலகப் போவதாக அறிக்கை விடுகிறார்

அந்த அறிக்கையை அனைத்து இந்திய விரோத மீடியாக்களுக்கும் அனுப்பி வைக்கிறார். உடனே பா ஜ கவின் பாசிச அரசின் பழிவாங்கும் போக்கைப் பாரீர் அறிஞரை அவமானப் படுத்தும் இந்த்துவ அரசைப் பாரீர் என்று சென்னின் இடதுசாரி ஆதரவாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல ஒப்பாரி வைக்கிறார்கள். பாசிச மதவெறி பிடித்த பா ஜ க அரசை கண்டிக்கிறார்கள். எல்லாமே திட்டமிட்ட ஸ்கிரிப்ட்படி நடந்தேறுகிறது. இனி வரும் நாட்களில் இந்திய பொருளாதார மேதையை அவமதித்த பழிவாங்கிய மோடி அரசை கடுமையாக வசை பாடப் போகிறார்கள். ஆனால் உண்மையில் நடப்பது என்ன? இந்த சென்னின் யோக்கியதாம்சங்கள் என்ன? இந்த பல ஆயிரம் கோடி திட்டத்தில் இது வரை நடந்த ஊழல்கள் என்ன? என்பதையெல்லாம் சற்று உற்று நோக்கினால் காமன்வெல்த் கேம்ஸில் கல்மாடி அடித்ததெல்லாம் ஒன்றுமேயில்லை என்று ஆகி விடுகிறது. அதை அடுத்த பதிவுகளில் வரிசையாகக் காணலாம். மோடி மீது இந்த இடதுசாரிகள் வீசும் அவதூறுகளில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கிறது என்பதையும் பார்த்து விடலாம்.

ஒன்று மட்டும் உறுதி. ஆம் மோடியின் அரசு நிச்சயமாகப் பெரும் தவறு செய்து விட்டிருக்கிறது. அதற்காக மோடியையும் அவரது அரசையும் கடுமையாக கண்டிக்கவே வேண்டும். இந்த அமரத்யா சென்னை இத்தனை நாட்கள் அந்தப் பதவியில் தொடர விட்டது மோடி அரசாங்கத்தின் முதல் தவறு. அவர் மீது சுமத்தப் பட்டுள்ள ஊழல் குற்றசாட்டுக்களை விசாரிக்க சிபிஐயை நியமிக்காதது இரண்டாவது பெரும் தவறு. தகுதியில்லாத ஒரு மோசடிப் பேர்வழியை ஒரு இண்டர்நேஷனல் ஃப்ராடை ஒரு பல்கலையில் தொடர விட்டு கண்ணியமாக இது வரை நடத்தியது மோடி அரசின் மூன்றாவது பெரும் தவறு.

இனி இந்த சென்னின் முழு வண்டவாளத்தையும் சற்று அலசலாம்.

தொடரும்…

இந்தக் கட்டுரை  ஆசிரியர் நண்பர் திருமலை ராஜன். இவர் இங்கே Berkeley Labs-ல் பணி புரிகிறார். மரத்தடி மற்றும் ராயர் காபி கிளப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்பட்டதில்லை என்றால் உங்களுக்கு வயது நாற்பதுக்கும் குறைவு என்று அர்த்தம் 🙂 ராயர் காபி க்ளப்பில் ராஜனும் ஒரு ராயர் 🙂 – மற்றவர்கள், லாஸ் ஏஞ்செல்ஸ் ராம், இரா.முருகன் ஆகியோர். நண்பர் திருமலை ராஜனின் இலக்கிய நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது – ஹரன் பிரசன்னா, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், சுஜாதா தேசிகன், லாஸ் ஏஞ்செல்ஸ் ராம், விருமாண்டி படத்திலும் அவ்வப்போது மற்ற சில படங்களிலும் தலை காட்டும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்…

Advertisements

4 thoughts on “1-படித்தவன் சூது செய்தால்… திருமலை ராஜன்

 1. rjagan49 February 25, 2015 at 6:41 PM Reply

  மேலும் படிக்க ஆவலாயிருக்கிறேன். ஆனாலும் சில கேள்விகள் தோன்றுகின்றன. சர்வ அலட்சியமாக அமர்த்யா சென்னை மோசடிப் பேர்வழியாக சித்தரிப்பதும் சரியில்லை என்றே தோன்றுகிறது. வேலை ஆரம்பிக்கவில்லை என்றுதானே கலாம் அவர்கள் ராஜினாமா செய்தார்? அவர் பல்கலைக் குழுவைக் கூட்டி இருக்கலாம். அந்த சமயத்திலோ, சென் நியமிக்கப் பட்ட போதோ இவ்வளவு கண்டனங்கள் எழவில்லையே! 2000 கோடியும் அரசு வழங்கி விட்டதா? எல்லாம் எப்படி செலவு செய்யலாம், யார் யார் அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப் பாடு இருந்திருக்குமே? அதைவிட, 5 லக்ஷம் சம்பளம் வருடத்திற்கு என்றுதானே செய்தி – இது எப்படி அதிகம்? சென்னை கையில் போட்டுக்கொண்டு யாரேனும் அரசியல் வாதிகள் பின்னணியில் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறதே? எப்படி இருந்தாலும் இப்போது தெரியும் விஷயங்கள் போதாது, கண்டனங்களும் அவசரக் கோலமாக எனக்குப் படுகிறது. – ஜெ.

  • Rajan Satagopan February 26, 2015 at 2:09 AM Reply

   சென்னை மோசடிப் பேர்வழி என்று ஆரம்பம் முதலாகவே சுவாமி போன்றவர்கள் சொல்லி வருகிறார்கள். இது புது குற்றச்சாட்டு அல்ல.

   கலாம் விசிட்டர் என்னும் பதவியில் மட்டுமே இருந்தார் அவரால் சிண்டிக்கேட்டை கூட்ட முடியாது.

   2000 கோடிகளில் 1200 கோடி ஏற்கனவே வழங்கி விட்டார்கள். அதை எப்படி செலவு செய்தார்கள் என்று எவரும் கேள்வி கேட்க முடியாது கூடாது மீறி கேட்டால் நான் ராஜினாமா செய்து விடுவேன் என்று சென் மிரட்டியபடியால் எவரும் ஆடிட் செய்யவில்லை.

   எந்த கட்டுப்பாடும் இந்த நிதிக்கு இருக்கக் கூடாது என்பதுதான் சென் போட்ட நிபந்தனையே அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆகவே எவருக்கும் எப்படி நிதி செலவழிக்கப் பட்டது என்பது தெரியாது.

   சி ஏ ஜி மட்டும் செலவுகளில் முறைகேடு உள்ளது என்று கூறியது. ஆனால் அதை சென் கடுமையாக எதிர்த்து அதற்கு விசாரிக்கும் உரிமை கிடையாது என்று சொல்லி விட்டார்.

   5 லட்சம் என்பது மாதச் சம்பளம். அமெரிக்காவில் கூட லெக்சரர்களுக்கு அந்த அளவு சம்பளம் கிடையாது.

   சென்னின் பின்னால் மன்மோகன் சோனியா அனைவருமே இருந்தார்கள். சென் தான் முழுப் பொறுப்புமே.

   • rjagan49 February 26, 2015 at 1:02 PM

    I am thankful for the response to my comments and I was not aware of some info. I have no issues if the person is indeed corrupt and is punished. I look forward to the developments. – R. J.

 2. chandruwesee February 26, 2015 at 2:15 AM Reply

  Good morning.
  Neatly and nicely written.
  Shall share in my Facebook page today as a Public Post.

  Regards,
  V Chandrasekaran,
  Asst Branch Manager
  Indian Bank
  New Tippsandra
  Bangalore

  +917204851344

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s