புக் மார்க்ஸ் – என்.சொக்கன்


ஒரு பழைய பவுண்ட் வால்யூமை புரட்டிக் கொண்டிருந்தேன். 1994-ம் வருட குமுதம் இதழ்களின் தொகுப்பு அது. அப்போதைய ஆசிரியர் சுஜாதா.

குத்துமதிப்பாக, நான் +2 படித்துக் கல்லூரியில் சேர்ந்த / சேரவிருந்த நேரம் அது. இந்த இதழ்களின் மாதக் கணக்கு தெரியவில்லை.

அப்போது ஒரு வாரம், ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் ரோஜாப் பூக்களின் படத்தை அச்சடித்து, அதில் நிஜமான ரோஜா ‘வாசனை‘யைப் பூசியிருந்தார்கள்.

அந்தப் படத்தை விரல்களால் தேய்த்து முகர்ந்தால் ரோஜாப் பூவின் வாசனை வரும். வந்தது. அந்த வயதில் அதைப் பார்த்து / நுகர்ந்து அசந்து போனோம்.

அதே பக்கத்தில், சுஜாதா அந்தத் தொழில்நுட்பத்தை விளக்கியிருந்தார். வாசனை என்காப்சுலேஷன், 6 மைக்ரான் பொட்டலங்கள், தேய்த்தால் உடைந்து மணம்.

அப்போது இந்தியாவிலேயே முதல் முயற்சி அது. நிச்சயம் big hit, talk of the town ரேஞ்சுக்கு வெற்றி.

இன்றைக்கு அந்த பவுண்ட் வால்யூமில் அதே பக்கத்தைப் பார்த்தேன். சும்மா தேய்த்து முகர்ந்தேன். கொஞ்சம் மங்கலாக இருந்தாலும் அதே வாசனை!

சும்மா ஜிம்மிக்ஸ் என்று அப்போது நினைத்தேன். இருபத்தோரு வருடம் தாங்குமளவு தில்லாலங்கடி தொழில்நுட்பமா அது? பலே பலே!

N. Chokkan

வாசிப்புப் பழக்கம் என்பது, ஒரு வழிப் பாதை. அதனுள் சென்ற யாரும் அந்தச் சுகமான வலையிலிருந்து விடுபட விரும்புவதே இல்லை. மேலும் மேலும் புதிய புத்தகங்கள், எழுத்தாளர்கள் என்று தேடித்தேடி வாசித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

புத்தகங்களைப் படிப்பது ஓர் இனிய அனுபவம் என்றால், புத்தகங்களைப்பற்றி, அவற்றை எழுதிய எழுத்தாளர்களைப்பற்றி, பொதுவான வாசிப்புப் பழக்கங்களைப் பற்றிப் படிப்பது இன்னும் பரவசமூட்டுகிற விஷயம். இதன்மூலம் பல படைப்பாளிகளின் இதயக் கதவுகள் நமக்காகத் திறக்கின்றன. அவர்களை இன்னும் நெருங்கி உணர்ந்து கொள்கிறோம்.

வாசிப்புப் பழக்கம் உள்ள எவருக்கும், இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம். நீங்கள் படித்தறிந்த, அல்லது அறியாத பல படைப்பாளிகளைப் பற்றிய அறிமுகங்கள், அவர்களது சிந்தனைகள், வாழ்க்கை நிகழ்வுகளையெல்லாம் சுவையான குறுங்கட்டுரைகளின் வடிவில் தரப்பட்டுள்ளன. அதோடு, நாம் எதையெல்லாம் வாசிக்கவேண்டும், எப்படி வாசிக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் புத்தகத்தை நீங்கள் எந்தப் பக்கத்திலும் பிரித்துப் படிக்கத் தொடங்கலாம். சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம் கேரண்டி!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s