நூல் அறிமுகம்: ரமணர் ஆயிரம் – அரவிந்த் சுவாமிநாதன்


Ramanar_1000

அவர் ஒரு வெளிநாட்டு பக்தர். ரமணரைப் பற்றி அறிந்து ஆவலுடன் அவரைக் காண வந்திருந்தார்.

ரமணாஸ்ரமத்துக்குள் நுழைந்ததும் பகவானைத் தேடி வந்து வணங்கினார்.

ரமணர் புன்முறுவலுடன் ஆங்கிலத்தில், “What do you want?” என்று கேட்டார்.

அதற்கு அந்த நபர், “I want peace” என்றார்.

உடனே பகவான், “Then drop ‘I’ and ‘want’ you will get the peace” என்றார்.

சற்று நேரம் திகைத்த அந்த வெளிநாட்டு பக்தர், பின் பகவான் சொன்னதைப் புரிந்து கொண்டார்.

I want peace” என்பதில் “I” மற்றும் “want” என்பதை நீக்கி விட்டால் எஞ்சியிருப்பது “peace” மட்டும்தான். ஆனால் பகவான் சொன்னதன் உண்மைப் பொருள், ஒருவனுடைய “தான்” (I) என்ற அகங்காரமும், எதையும் அடைய வேண்டுமென்ற விருப்பமும் (want) நீங்கினால் அங்கே அமைதி (peace) எஞ்சியிருக்கும் என்பதுதான். உண்மைதான் இல்லையா ?

இந்தப் புத்தகம் பற்றி அரவிந்த் சுவாமிநாதன் கூறுகிறார்…

இது கேள்வி – பதில் தொகுப்பல்ல. அவரது வாழ்க்கைச் சம்பவங்களின் தொகுப்பு. அதில் கேள்வி – பதில்களும் அடக்கம்.

இதற்கு முகப்போவியம் வரைந்திருப்பவர் நண்பர் மணியம் செல்வன்.

நானும் அவரும் அவ்வப்போது பேசிக் கொள்வது வழக்கம். கல்கி, சாவி, ராஜம், சில்பி, கோபுலு போன்ற ஜாம்பவான்கள், அந்தக் கால பத்திரிகை, ஓவிய மேதைகள், ஆலயங்கள், சிற்பங்கள், ஸ்தபதிகள் என்று தொடரும் எங்கள் பேச்சு, பெரும்பாலும் ரமணரைத் தொட்டு விடும். அவரும் ஒரு ரமண பக்தர் என்பதால், அவரது ரமணாச்ரம நினைவுகள், அங்கிருந்த கேப்டன் என்று அழைக்கப்படும் பக்தருடன் கிரிவலம், மௌண்டன் பாத் இதழுக்கு வரைந்தது என்று பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்வார்.

என்றாலும் ஒருமுறை கூட நான் இந்த நூல் எழுதுவது பற்றியோ, அதற்கான முயற்சிகள் பற்றியோ அவரிடம் பகிர்ந்ததில்லை. அவர்தான் இதற்கு ஓவியம் வரைந்திருக்கிறார் என்பது எனக்கு புத்தகப் பிரதி கைக்கு வந்தபிறகுதான் தெரியும். அதுபோல நான் தான் (!) இதைத் தொகுத்து எழுதியது என்பது அவருக்கான பிரதி வந்த பிறகுதான் அவருக்குத் தெரியும்.

புத்தகப் பிரதிகளை அன்றைய இரவுதான் நான் பார்த்ததால் மறுநாள் இதுபற்றி அவரிடம் பேச வேண்டும் என நான் நினைத்துக் கொண்டிருந்தபோது அவரே அழைத்துப் பேசினார். அந்த வகையில் முதன் முதலில் இந்த நூலை முழுமையாகப் படித்துவிட்டு விமர்சனம் செய்தது அவர்தான்.

பொருளடக்கம்” இல்லையே என்று மணியம் செல்வன் கேட்டார். நான் கொடுத்திருந்தேன். 100 தலைப்புகளுக்கு மேல் உள்ளே இருப்பதால் ’பக்க எண்ணிக்கை’ கருதி அவை சேர்க்கப்படவில்லை என நினைக்கிறேன். உங்கள் கருத்தை அறியக் காத்திருக்கிறேன்.

நூல் கிடைக்குமிடம் :

சூரியன் பதிப்பகம்
229, கச்சேரி ரோடு,
மயிலாப்பூர், சென்னை – 600004
தொலைபேசி : 044-42209191

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Welcome to Arunachala Live!

FullSizeRender (39)

FullSizeRender (40)

One thought on “நூல் அறிமுகம்: ரமணர் ஆயிரம் – அரவிந்த் சுவாமிநாதன்

  1. Arvind Swaminathan June 25, 2014 at 11:17 AM Reply

    நன்றி சார்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s