நூல் அறிமுகம்: சேஷாத்ரி ஆயிரம் – பா.சு.ரமணன்


இன்று மகான் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அவதாரப் பெருநாள். கற்பகதருவாய், தங்கக்கை வள்ளாலாய், மகா சித்தராய் வாழ்ந்த, இன்னமும் சூட்சுமத்தில் வாழ்ந்து உண்மை பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகின்ற மகா ஞானியின் நினைவைப் போற்றுவோம் ஓம்.

சேஷாத்ரி ஆயிரம்” நூலில் இருந்து…

துறவி ஒருவர் வட நாட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். பிச்சை வாங்கி உண்ணுவதே அவர் வழக்கம். அவர் வெளியில் துறவு வேடம் பூண்டிருந்தாலும், உள்ளுக்குள் எப்படியாவது ரசவாதம் போன்ற ரகசியங்களை அறிந்து கொண்டு, அதிக பணம், தங்கம் சேர்க்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். அண்ணாமலையில் நிறைய மூலிகைகள் இருக்கும், அதன் மூலம் தங்கம் செய்யலாம். பணக்காரர் ஆகலாம் என மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தார்.

அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த அவர் ஒரு நாள் மகான் சேஷாத்ரி சுவாமிகளைக் கண்டார். மகான் தனது வழக்கமான “ஸ்வஸ்திக்“ ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரின் மகத்துவம் புரியாமல், ‘இவரிடம் போய் யாசிக்க என்ன இருக்கிறது’ என அற்பமாக நினைத்து, தனது திருவோட்டை வேண்டா வெறுப்பாக அவரிடம் நீட்டினார்.

மகானும் அவரது உள் மன ஓட்டத்தை அறிந்தார். தனது கால்களால் எட்டி ஓர் உதை உதைத்தார் திருவோட்டை. திருவோடு கீழே விழுந்தது. ஆனால் அதில் ஒரு தங்க நாணயமும் இருந்தது.

துறவி அதைக் கண்டார். ஆச்சர்யம் கொண்டார். அதே சமயம், சுவாமிகளின் ஆற்றலைக் கண்டு பயமும், அதிர்ச்சியும் அடைந்தார். தனது தவறான நோக்கத்திற்காக மன்னிப்பு வேண்டி, சுவாமிகளைக் கீழே வீழ்ந்து வணங்கியவர், பின்னர் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. திருவண்ணாமலையை விட்டே போய்விட்டார்.

ஒரு சிறிய அற்புதம் மூலம் அவருக்கு உண்மைத் துறவின் மேன்மையை உணர்த்தினார் மகான் சேஷாத்ரி சுவாமிகள்.

மகான்களின் பெருமை சொல்லவும் அரிதே!

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே சரணம்! சரணம்! சரணம்! ஓம்.

பிரம்மானந்தம் பரமசுகதம் கேவலம் ஞானமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககனசத்ருஸம் தத்வமஸ்யாதி லக்ஷியம்
ஏகம்நித்யம் விமல மசலம் ஸர்வதீசாக்ஷி பூதம்
பாவாதீதம் த்ரிகுணரஹிதம் ஸ்ரீஸத்குரும் தந்நமாமி

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே சரணம்!!

விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 144).

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் முக்தியடைந்தது 1929ம் ஆண்டு. இன்று போல் தகவல்களைப் பதிவு செய்யவோ, சேகரிக்கவோ போதிய வசதிகள் அன்று கிடையாது. நிலைமை இவ்வாறு உள்ள நிலையில், இந்த நூலாசிரியர், சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கையை மிகக் கூர்மையாக ஆராய்ந்து, மிகச் சிறப்பாக நிகழ்வுகளைக் கோர்வைப்படுத்தி, எளிய, அழகிய தமிழில் எழுதியிருக்கிறார். எத்துணை பாராட்டினாலும் தகும் அரிய முயற்சி. குறிப்பாக, சத்குருவின் சில சித்து வேலைகளைப் பற்றி சர்வ ஜாக்கிரதையாக நம் பார்வைக்கு வைத்திருக்கிறார். `சத்குரு‘வின் `தங்கக்கை‘ என்பது இன்றும் அருணையில் பேசப்படும் விஷயம். சித்திரங்களுடன் வழவழப்பான காகிதத்தில் அழகாக அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றனர்.

FullSizeRender (39)

FullSizeRender (40)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s