நூல் அறிமுகம்: அருட்பிரகாச வள்ளலார் – பா.சு.ரமணன்


இன்று தைப்பூச நன்னாள். மாபெரும் சித்தர், மகா ஞானி, வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டு மறைந்த தினம்.

அவரை நினைவு கூர்வோம்.

அவரைப் பற்றி எழுதப்பட்ட ”அருட்பிரகாச வள்ளலார்” என்ற நூலில் இருந்து…
———————————————————————————————————–
ஒருமுறை சித்திவளாகத்தில் வள்ளலார் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். பெருந்திரளாக மக்கள் கூடி அதனைக் கேட்டுக் கொண்டிருந்தனர். திடீரென அங்கே பிரவேசித்தார், ‘சதாவதானி ஐயங்கார்‘ எனப் போற்றப்பட்ட ஓர் அறிஞர். அவர் கவனக நிகழ்ச்சியில் விற்பன்னர்.

தமக்கு அங்கே யாரும் இடமளிக்க முன் வராததை எண்ணி மனம் நொந்தார். தன்னை விட வள்ளலார் எந்த விதத்தில் உயர்ந்தவர் என்ற எண்ணமும் அவருக்குத் தோன்றிற்று. “சபையில் இடமே இல்லையா என்ன?” என்று உரக்கக் கூவினார். அவர் குரல் கேட்ட மக்கள் அவர் வந்திருப்பதை அறிந்து அவர் அமர இட வசதி செய்து கொடுத்தனர். உள்ளே சென்று வள்ளலாரை நெருங்கினார் அவர்.

“சபையில் இடம் கிடைத்து விட்டதல்லவா?” கருணையுடன் வினவினார் வள்ளலார்.

“இப்போது கிடைத்து என்ன? அப்போது கிடைக்கவில்லையே!” என்றார் சதாவதானி.

“அப்போது என்றால்…எப்போது,, எக்காலம்?” என்றார் வள்ளலார்.

“அது இறந்த காலம்?” இறுமாப்புடன் பதில் சொன்னார் சதாவதானி

“அப்படியானால் காலத்தின் அளவை விளக்கிக் கூறுங்களேன்?” என்றார் வள்ளலார்.

“காலத்தின் அளவா?, அதனை எப்படி விளக்குவது?”, விளக்கும் வழி அறியாது திகைத்தார் சதாவதானி.

“தாமரை மலரின் 1008 இதழ்களை அடுக்கி வைத்து, ஒரு ஊசியினால் ஆரம்பம் முதல் இறுதி வரை குத்திய காலமே காலத்தின் அளவு” என்று விளக்கினார் வள்ளலார்.

தமது அறியாமையை உணர்ந்த சதாவதானி ஐயங்கார், வள்ளலாரை வணங்கி அமர்ந்தார். அவரது ஆணவமும் அவரை விட்டு அகன்றது.
———————————————————————————————————–

அருட்பிரகாச வள்ளலார்
விலை ரூ.45
ஆசிரியர் : பா.சு.ரமணன்
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்: 978-81-8476-024-8
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
வள்ளலார் என்றவுடன் அவருடைய ஜீவ காருண்யமே நினைவுக்கு வரும். வாடிய பயிரைக் கண்டு வாடிய கருணை உள்ளம் மிக்க உத்தமர். கருணைக்காகவே வாழ்ந்த வள்ளலாரின் சீரிய வாழ்க்கை வரலாற்றை விவரிப்பதுதான் இந்த நூல்.
குழந்தையாக இருந்தபோதே ஆன்ம முதிர்ச்சியைக் காட்டியிருக்கிறார். ஆசான் ஒருவரிடம் சென்று நன்கு கற்று அதன் பிறகு ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றிய அவருடைய அண்ணனைப் போல் இல்லாமல், எங்கும் சென்று கற்காமலேயே சிறப்பான சொற்பொழிவை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். இறைவன் தனக்கு அளித்த அருட்கடாட்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதைப் போன்ற பல நிகழ்ச்சிகளை நூலாசிரியர் பா.சு.ரமணன் இந்த நூலில் சுவையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
துன்பங்களையும் புன்முறுவலுடன் சந்தித்தவர் என்பதோடு அதற்காக எவரையும் குறை கூறாத உத்தமராகவும் வாழ்ந்தவர் வள்ளலார். ஆனாலும் அவரை சிலர் தவறாக எடைபோட்டு சோதித்த சம்பவங்களும் உண்டு.
ஒருமுறை புலமைமிக்க தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் சங்க காலப் பாடல்களைப் போல, தானே கடினமான புலமை வாய்ந்த சில பாடல்களை இயற்றி அதை சங்க காலப் பாடல் என்று கூறி அவற்றின் அர்த்தத்தை விளக்கும்படி கூறினாராம். அது சங்க காலப் பாடல் அல்ல என்று வள்ளலார் கண்டுபிடித்து மறுத்ததோடு, அவை இலக்கணம் தெரியாத யாராலேயோ எழுதப்பட்டிருக்கின்றன என்று அவர் மனம் புண்படாதவாறும், அதேநேரம் தன் கருத்தில் சற்றும் மாறாமலும் பணிவுடன் கூறினார்.
இதைப்போன்ற பல சம்பவங்களை நூலாசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார்.
சமரச சன்மார்க்க நெறியைக் கண்ட வள்ளலார் வாழ்க்கை நம் வாழ்வுக்கு நிச்சயம் நம்பிக்கை ஊட்டும்.
FullSizeRender (39)
FullSizeRender (40)
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s