வசனத்தைச் சுருக்கச் சுருக்கத் தான் சினிமாவிற்குச் சுவை – சுஜாதா


என்னைப் பொறுத்த வரை இப்போது என்றில்லை.  ஆரம்பம் முதலே குறைவான வசனங்களையே எழுதி வருகிறேன்.  நான் கதை-வசனம் எழுதி, கே.பாலசந்தர் இயக்கிய  ‘நினைத்தாலே இனிக்கும்’  படத்தைப் பாருங்கள்…  மிக மிகக் குறைவான வசனங்களே அதில் இருக்கும்.

அப்போது ‘ABBA ‘ என்றொரு ஆங்கிலப் படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த நேரம்.  அதுபோல நாமும் ஒரு படம் பண்ணலாம் என்று பாலசந்தர் விரும்பியதால்,  அதே போன்ற ஒரு சுப்ஜெக்ட்டை ரெடி செய்தோம்.  ‘ABBA ‘  போலவே ஒரு இசைக் குழுவை வைத்துக் கதை பண்ணினோம்.  காட்சிகளும்,  பாட்டும்தான் அதிகம் வைத்தோம்.  வசனம் மிகக் குறைவாகவே இருந்தது.  அது மாபெரும்  வெற்றி பெற்றது.

என்னைப் பொறுத்த வரை,  ஒரு சினிமாவில் வசனகர்த்தாவின் பங்கு அதிகம்தான்…ஆனால் அது பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்றே நினைக்கிறேன்.  ஒரு நாவல் எழுதினால்,  அதை முழுக்க முழுக்க வாசகர் மனதில் விரித்துக் காட்ட வேண்டிய கடமை எழுத்தாளருக்கு உள்ளது.  ஆனால், சினிமாவில் இயக்குனரும், கேமராமேனும் ஒரு எழுத்தாளர் எழுதியதை விட அழகான காட்சிகளைப் படம் பிடித்து ரசிகன் முன் நிறுத்தி விட முடியும்.

பொதுவாக, நான் வசனம் எழுதி முடித்துவிட்டு,  மறுபடி அதில் எதை எதைச் சுருக்கலாம் என்று பார்த்து,  அதன்படி கொஞ்சம் சுருக்குவேன்.  பிறகு அதை இயக்குனருக்குக் கொடுத்து அனுப்புவேன்.  அவர் அதைப் படித்து இன்னும் கொஞ்சம் சுருக்கித் தருவார்.  நான் அதை எல்லாம் கழித்து விட்டு,  மேலும் ஒரு முறை சுருக்க முடியுமா என்று பார்ப்பேன்.  அப்புறம்தான் அது முடிவுக்கு வரும்.

ஆக,  வசனத்தைச் சுருக்கச் சுருக்கத் தான் சினிமாவிற்குச் சுவை என்பது இன்றைய சூழல்.  ஹாலிவுட்டில்  ‘காண்பி;  சொல்லாதே’  (Show Don ‘t  tell )  என்பதுதான் தாரக மந்திரம்.  அந்த நிலை இப்போது தமிழ்ச் சினிமாவிற்கும் பொருந்தி விட்டது.

Advertisements

2 thoughts on “வசனத்தைச் சுருக்கச் சுருக்கத் தான் சினிமாவிற்குச் சுவை – சுஜாதா

  1. bganesh55 December 25, 2014 at 7:42 AM Reply

    இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்குக் கணக்கே இல்லைண்ணா. சுஜாதா சார் சொன்ன மாதிரி சுருக்கமா இருந்தாலும் நறுக்குன்னு மெல்லிய குறும்போடவும், ஆழமான உணர்வுகளோடயும் இருக்கும் வசனங்கள். சுஜாதாவுக்கு ஜே!

  2. கிரி February 18, 2015 at 3:47 AM Reply

    நானும் இவர் கூறியது போல சுருக்க முயற்சிக்கிறேன் ஆனால், பெரியதாகிட்டே இருக்குது 😀

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s