லிங்கா – திரை விமர்சனம்


நான்காண்டுகளுக்குப் பின்னர் மற்றொரு ரஜினி படம் (கோச்சடையானை ரஜினி படமாக கணக்கில் எடுத்துக் கொள்ள முடியுமா என்ன?) என்றவுடன் ரசிகர்கள் பல்ஸ் பயங்கரமாக எகிறிவிட்டது. ரஜினி திரையில் தோன்றினவுடனே காதைக் கிழித்த விஸில் ஒலி, அடுத்த முக்கால் மணி நேரத்தில் காணாமல் போவிட்டது.

கடைசியில், ரஜினி மீண்டும் பைக் பிடித்து தனது வழக்கமான ஸ்டைலோடு வானத்தில் பறந்து பறந்து சண்டை போட்டபோது மீண்டும் விஸில் சத்தம்.

இடையில் என்னாச்சு? அதிபயங்கர அமைதி. கொஞ்சம் உச், கொஞ்சம் ஹச்.

மைனஸ்

* மிரட்டும் வில்லன் மிஸ்ஸிங். அதனால் மோதல் மிஸ்ஸிங். ஜகபதி பாபுவும் வெள்ளைக்கார துரையும் யானைப் பசிக்குச் சோளப் பொறி.

* 20 ஆண்டு பழைய திரைக்கதை. ராஜா லிங்கேஸ்வரனிடம் பணம் இருந்தது, அதனால், சுலபமாக அணை கட்டிவிட்டார். இது என்ன பெரிய விஷயம்?” – பக்கத்து சீட் கமென்ட்.

* ரெண்டு ஹீரோயின்கள் இருந்தும் காதல் கெமிஸ்ட்ரி மருந்துக்கும் இல்லை.

* இசை : ஏ.ஆர். ரஹ்மான் என்று டைட்டில் கார்டில் பார்த்த ஞாபகம்.

* ராஜா லிங்கேஸ்வரன் அணை கட்ட வேண்டிய காரணம் மனத்தில் ஆழமாகப் பதியும்படி சொல்லப்படவில்லை.

* முதல் பாதியில் வரும் நெக்லஸ் திருட்டு சீன்கள் பயங்கர இழுவை.

ப்ளஸ்

* ரஜினி

* ரஜினி

* ரஜினி

ஒரே ஆறுதல்

பணக்கார ரஜினி, சொத்து மொத்தத்தையும் ஊர் மக்களுக்காக கொடுத்துவிட்டு, சமையல்காரனாக அப்பளம் பொறித்துக்கொண்டு இருப்பார். அப்போது தங்கள் தவறு உணர்ந்து ஊர்க்காரர்கள் வந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, சாப்பிடுவார்கள். ஏழைமையிலும் குறையாத மிடுக்கோடு ரஜினி பேசும் வசனங்கள், அத்தனையும் ஏ கிளாஸ்.

லிங்கா – இன்னும் சூப்பராக இருந்திருக்கலாம்.

துளசி

லிங்கா’ படத்தை வேந்தர் மூவிஸ் தமிழ்நாடு, கேரளா என இரண்டுக்கும் சேர்த்து 120 கோடிக்கு வாங்கி விநியோகித்துள்ளது. சென்னை நகர உரிமை மட்டும் 14 கோடிக்குப் போயுள்ளதாம்.

விதவிதமான கிரேன் ஷாட்டுகள் போட்டு சுப்பர் ஸ்டார் ரஜினியின் ‘லிங்கா’வைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, 80களில் பார்த்த ரஜினியைப் போலவே காட்டியிருக்கிறார் என்கிற பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருந்தவரிடம் ‘லிங்கா’ ஒர்க் எக்ஸ்பீரின்ஸை கேட்டோம்.

ரஜினி போன்ற பெரிய ஹீரோ படத்தில் ஒளிப்பதிவாளரின் தனித்துவம் தெரியுமா?

“ பொதுவாக பீரியட் படங்களில் ஃப்ளாஷ்பேக் காட்சிகளைக் காட்ட கறுப்பு – வெள்ளை அல்லது மங்கலான கலரில் ஒளிப்பதிவு செய்வார்கள்.

ஆனால், இதில் இதுவரை பயன்படுத்தாத புதுமையான கலரைப் பயன்படுத்தியிருப்பதில் என் தனித்துவம் தெரியும். ஆனால், இன்னொரு விஷயம், ஒளிப்பதிவு என்பது தனியாகத் தெரியக்கூடாது. டைரக்டரின் கற்பனைகளை மொழியாக்கம் செய்வதுதான் ஒளிப்பதிவாளரின் பணி.”

‘லிங்கா’ ஒளிப்பதிவில் சிறப்பம்சம் என்ன?

“ ‘பிளாக்மேஜிக் 4K’ என்ற கேமிராவில் ஹெலிகாப்டர் ஷாட்களை ஷூட் செய்திருக்கிறோம். இது தமிழ் சினிமாவில் முதல்முறை. ஒரே செகன்டில் ஆயிரம் பிரேம்களை ஒளிப்பதிவு செய்யும் ‘பேன்டம் பிளக்ஸ்’ (Phantom Flex) கேமிராவைப் பயன்படுத்தியுள்ளேன்.”

உங்களுக்குச் சவாலாக இருந்த காட்சி?

“பீரியட் படங்களில் ஸ்டெடி காமிராவை வைத்து குறைவான மூவ்மென்ட்களில் எடுப்பார்கள். ஆனால், கே.எஸ்.ரவிகுமார் அதிகமான கேமிராக்களை வைத்து பல மூவ்மென்டுகளில் எடுக்க விரும்பினார். அவரின் விருப்பத்தை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முடித்துத் தந்தேன். ஷிமோகா மாவட்டத்தில் ஷூட்டிங்கின்போது 37 நாட்கள் ஷெட்யூலில் 17 நாட்கள்வரை கடுமையான மழை. இருப்பினும் ஷூட்டிங்கை நல்லபடியாக நடத்தி முடிதோம்.”

ரஜினிக்கும் ‘லிங்கா’வுக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்ட ரத்னவேலுவின் நிலை?

“நான் சின்ன வயதிலிருந்து ரஜினி ரசிகன். ஷூட்டிங்கில் ரஜினி சாரின் அன்புப் பிடியில் அகப்பட்டுக் கொண்டதால் இந்த ஒளிப்பதிவாளனுக்கு எந்தக் கஷ்டமும் தெரியவில்லை.”

–நன்றி கல்கி

grey லிங்கா [2014]

லிங்கா – குமுதம் விமர்சனம்…

ரஜினியைத் தவிர யார் நடித்திருந்தாலும் இந்தப் படத்தை பார்க்க முடியாது!

ரஜினி நடித்திருப்பதால் பார்க்காமல் இருக்க முடியாது!

நண்பர் ரசனை ஸ்ரீராமின் விமர்சனம்…

லிங்காச்சுது. ரஜினிக்கு கதை பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. கதைக்களனில் ஒரு பெரிய கேன்வாஸ் இருக்கணும், அரசியல் ஈயம் பூசியும், பூசாம இருக்கணும், பிளாடரை அமுக்கி தண்ணி வரவைக்கணும். லிங்காவின் அணைக்கட்டு(ம்) கதையில் அது சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால் இக்கதை படமாய் வந்த வகையில் எங்கேயோ பல கண்ணிகள் அறுந்திருக்கிறது. விகடன் விமர்சன பாணியில் லாஜிக் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மேஜிக்கும் இல்லைன்னா எப்படி?

ரஜினி. படத்தில் ஒரு காட்சியில் எளிய வீட்டில் ரஜினி தானே சமைத்து பரிமாறுவார். பிறகு சாவகாசமாய் அமர்ந்து கொஞ்சம் தத்துவம் பேசுவார் (நெஞ்சை தொட்டு,  “இங்க சந்தோஷம்னா எங்கயுமே சந்தோஷம். இங்க சந்தோஷம் இல்லன்னா..) அவரின் ரசிகனாக நான் மிகவும் கனெக்ட் ஆன காட்சி. படத்தில் ரஜினி முழுமையாய் கம்ஃபர்ட் சோனில் இருக்கும் காட்சியும் இதே. ரஜினி நகர்ந்துவிட்டார். இது ரசிகர்களுக்கும் புரியணும், அவரை இயக்கும் KSR போன்ற இயக்குநர்களுக்கும் புரியணும். அவரை வைரம் திருடவைத்தால், ஆடவைத்தால் அதை அவர் ரசித்து செய்கிறார்போல் தெரியவில்லை. ப்ரிட்டிஷ் கால ராஜா/கலெக்டர் ரஜினி கம்பீரமாய் எந்த அளவுக்கு எடுபட்டிருக்கிறதோ, அந்த அளவுக்கு சமகால ஜாலி ரஜினி அன்கம்ஃபர்ட்டபிளாக இருக்கிறார்.

KSR. படத்தின் வீக் லின்க்காய் நான் நினைத்தது இவரைத்தான். இரு படங்கள் ட்ராப்பான காரணத்திலோ எதற்கோ இவரிடம் படத்தை கொடுத்துவிட்டார். இவரின் வேலை சைன் கர்வ் போல் மேலும்,கீழுமாய் போய்வருகிறது. அணை கட்டும் அந்த ஃப்ளாஷ்பேக் எபிசோட் நீளமென்றாலும் நன்கு செய்திருக்கிறார். எப்படி இப்படியொரு லொகேஷன் பிடித்தார், எடுத்தார், இத்தனை பேரை கட்டி மேய்த்தார் என தெரியவில்லை. ஆனால் அதுதவிர மானாவாரியாக சொதப்பியிருக்கிறார். க்ளைமாக்ஸ் எல்லாம் நாட்டுக்கு ஒரு நல்லவனை விட படுமோசம் (ஆனால் நடுவில் வரும் ட்ரைன் சண்டை அட்டகாசம்) பொதுவாக கடைசியில் அவர் தோன்றும் காட்சியாவது சுவாரசியமாக வைப்பார். இதில் படத்தை சரியாக முடிக்கக்கூட இல்லை. என்னை கேட்டால் வெறுமன ஃப்ளாஷ்பேக்கை வைத்தே முழுப்படமும் எடுத்திருக்கலாம்.

மற்றபடி, பாசிட்டிவ்ஸ்: ராஜா ரஜினி, ரஜினியின் குரல் (பாபாவுக்கு முந்தைய ஜலதோஷம் இல்லாத பேஸ் வாய்ஸ்), போகப்போக பிடிக்கும் சோனாக்‌ஷி, ரிச்சான/தரமான ப்ரொடக்‌ஷன் (குறிப்பாய் ப்ரிட்டிஷ் காலத்திய காட்சிகள்), கேமரா ரத்னவேலு, இந்தியனே வா..

நெகட்டிவ்ஸ்: இளமை ரஜினி, ஃபிட்டாகாத/ஃபிட்டாக இல்லாத அனுஷ்கா, க்ளைமாக்ஸ், தெலுங்கு வில்லன் ஜெகபதிபாபு, அத்தனை சீனிலும் வரும் ராதாரவி உட்பட 100 பேர்..

மரியாதையான மசாலா என ஒன்றுண்டு. நரசிம்மா, பாலகிருஷ்ணா படங்கள் என ஒன்றுண்டு. ரஜினி படங்களிலேயே பாட்ஷாவும் உண்டு, பாண்டியனும் உண்டு. லிங்கா இந்த இரண்டு எக்ஸ்ட்ரீமுக்கும் மாறிமாறி ஊசலாடுவதே என்னைப் பொறுத்தவரை அதன் பிரச்சனை.

ஒரு காட்சியில் ராதாரவி “உங்களை மாப்பிளைன்னு கூப்பிடலாம்ல” என்பார். ரஜினி சோனாக்‌ஷியை ஒருநொடி திரும்பி பார்த்து சிரித்து “கூப்பிடலாம்ல?” என்பார்.

பைசா வசூல்.

இனி இந்த ரஜினியை எப்போது ஸ்க்ரீனில் பார்ப்போமோ..ஆதலால் பார்த்து விடுங்கள்.

2 thoughts on “லிங்கா – திரை விமர்சனம்

  1. கிரி February 18, 2015 at 3:48 AM Reply

    நீங்க பார்த்துட்டீங்களா? 🙂

    • BaalHanuman February 18, 2015 at 4:58 AM Reply

      பார்த்து விட்டேன் கிரி. இந்தப் படத்தில் ரஜினிக்கு மெயின் வில்லனே டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் தான் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s