ரஜினியின் நல்ல மனசு — வெங்கடேஷ் பட்


‘பட்ரே…’ தோள்ல தட்டினார் மேனேஜர். தாஜ் கோரமண்டல் சதர்ன் ஸ்பைஸோட நீள கிச்சன்ல கரண்டிகள் மோதிக்கொண்டு இருந்தன. மேலே குட்டிக் குட்டியாகப் புகை மேகம். வெள்ளை ஏப்ரனோடு டொக் டொக் ஷூக்களின் அவசர ஒலி. கற்கண்டு சைஸில் பொடிப் பொடியாகும் வெங்காயம். ஒரு பக்கம் ஏதோ ஒரு ஜந்து வாணலியில் சொய்யென்று திரும்ப; இன்னொரு பக்கம் பீங்கான் தட்டுகள் இடித்துக்கொண்டன.

சதர்ன் ஸ்பைஸ் ஷெஃப் பான பிறகு, மேனேஜர் வந்து கூப்பிட்டதில்லை. அப்பதான் கேட்டரிங் படிச்சுட்டு, டிரெனி ஷெஃப்பா சேர்ந்தாபோல இருந்தது. திரும்பிப் பார்க்கறதுக்குள்ள இரண்டு வருஷம் ஓடிப் போயிடுச்சு. கூடப் போறேன்.

ஒருத்தர் முன்னால நின்னு, இவர்தான் எங்க சீஃப் ஷெஃப் வெங்கடேஷ் பட். உங்ககிட்ட இவர் ஆர்டர் எடுத்துப்பார்”ன்னு சொல்றார். பளிச் சென்று மின்னல் வெட்டினா போல், முகம் முழுக்க புன்னகையோட, அவர் எழுந்து நிற்கிறார். கூடவே அவர் மனைவி, மகள்கள் எழுந்து நிக்கறாங்க. நான் ஆடிப்போட்டேன். நானோ சின்னப் பையன். எழுந்து நிற்கிறதோ, தமிழகத்தின் சூப்பர் ஸ்டார். லதாம்மா மலர்ந்து சிரிக்கறாங்க. மகள்களெல்லாம், துடைச்சு வெச்ச பீங்கான் பொம்மைகள் மாதிரி பளபளக்கறாங்க.

சூப்பர் ஸ்டார் விசாரிக்கிறாரு. நான் என்னவோ சொல்றேன். என்ன கேட்டார், என்ன சொன்னேன்? எதுவுமே ஞாபகம் இல்லை. பதினாலு வயசு பையனா அவர் வீட்டுக்குப் போனது மட்டும் ஞாபகம் வருது. அப்போ எல்டாம்ஸ் ரோடு கார்னர்ல ‘சலூன் அம்புலி’ன்னு ஒரு கடை இருக்கும். அங்க சூப்பர் ஸ்டார் முடிவெட்டிக்க வருவாராம். நானும் அங்க முடி வெட்டிக்குவேன்.

நான் ரஜினியோட அதிதீவிர ரசிகன். அப்போ என்னோட ஆசையெல்லாம், ரஜினிகிட்ட ஆட்டோகிராஃப் வாங்கறது தான். சலூன்காரர் என்னை, ரஜினி வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். ரஜினி இல்லை. ஏதோ ஷூட்டிங். லதாம்மா ஆட்டோகிராஃப் போட்டுத் தந்தாங்க.

grey லிங்கா [2014]

ரஜினி ஆர்டர் சொல்றார்: வீட்டுல செய்யற ருசியோட கோழி மிளகு கறி, இடியாப்பம், பாயா. லதாம்மா முழு வெஜிடேரியன். பிசிபேளாபாத்தான் அவங்க ஃபேவரிட். அவரோட பெண்களும் ஆர்டர் சொல்றாங்க.

அன்னிக்கு ஆரம்பிச்சது. கிட்டத்தட்ட அஞ்சு வருஷம். ரஜினிக்கும் அவர் குடும்பத்துக்கும் முப்பது நாற்பது முறைகள் நான் உணவு பரிமாறியிருப்பேன். ஒவ்வொரு முறையும் அவரோட ஃபேவரிட் ஐட்டங்கள் மாறியதில்லை. மின்னல்வெட்டுச் சிரிப்பு மாறியதில்லை. ஒவ்வொரு முறையும் அவரும் அவர் குடும்பமும் எழுந்து நிற்பது மாறியதில்லை.

பொதுவா ராத்திரி 11.30 மணிக்கு மேலதான் ரஜினி குடும்பத்தோட வருவாரு. அமைதி விரும்பி. ஒரு நாள் அவர் டேபிளுக்குப் பின்னாடி ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு அன்னிக்கு எண்பதாவது பிறந்தநாள். பன்னிரண்டு மணிக்கு, கேக் வெட்டி செலிபரேட் செய்ய, அவர் குடும்பம் காத்திருந்தது. தூரத்துல ரஜினி இருப்பது பெரியவருக்குத் தெரிஞ்சுது.

‘ரஜினியோட ஒரு ஃபோட்டோ எடுத்துக்க முடியுமா’ன்னு அந்தப் பெரியவர் கேட்டார். ரஜினி மிட்நைட்ல வர்ரதே, தொல்லை கூடாதுங்கறதுக்குத்தான். ஒத்துப்பாரோ மாட்டாரோ? ரஜினிகிட்ட போய் விஷயம் சொன்னேன், ‘உங்களுக்கு விருப்ப மில்லைன்னா வேண்டாம்.’

‘எங்கே அவங்க…’ டேபிளைக் காண்பிச் சேன். ‘வாங்க.’ சரசரவென ஸ்பீடு நடை… பின்னாடியே அவர் ஃபேமிலியும். பெரியவரும் அவர் குடும்பமும் அதை எதிர்பார்க் கலை. இருபது நிமிஷம் அங்கேயே இருந்தார். எல்லோரிடமும் கைகொடுத்து, குடும்பத்தைப் பத்தி விசாரிச்சு, கேக் வெட்டி, கிளாப்ஸ் தட்டி, ஒரு சின்ன கேக் துண்டையும் சாப்பிட்டு, ஃபோட்டோ எடுத்துக்கொண்டு, அத்தனை பேரையும் திக்குமுக்காடிப் போக வெச்சார்.

அன்னிக்கு ராத்திரி அந்தப் பெரியவர் கெஸ்ட் புக்குல இப்படி எழுதினார்: ‘இதுதான் என்னோட முதல் பர்த்டே. வாழ்க்கையே புதுசா மாறிடுச்சு.’

ஒரு நாள் ராத்திரி ரஜினி ரெஸ்டாரண்ட் வந்தார். போய் நின்னேன். ‘பட், நீங்க பாயா கறி நல்லாதான் பண்றீங்க… ஆனா…’ இன்னொரு பெரிய ரெஸ்டாரண்ட் பேரைச் சோல்லி, ‘அங்க கிடைக்கற பாயா கறி இன்னும் டேஸ்டா இருக்கு…போய்ப் பாருங்களேன்’னார்.

சுருக்குன்னு தெச்சுது. அவர் ஆர்டர் பண்ண முக்கால் மணி ஆகும்னு எனக்குப் பட்டது. பைக்கை எடுத்துக்கிட்டு சூப்பர் ஸ்டார் சொன்ன ரெஸ்டாரண்ட் போனேன். பாயா கறி பார்சல் வாங்கி, நேரா எங்க ரெஸ்டாரண்ட் கிச்சனுக்கு வந்தேன். எங்க ஷெஃப்புங்ககிட்ட கொடுத்தேன். அவங்க அதைத் தொட்டு டேஸ்ட் பண்ணிப் பார்த்தாங்க.

அடுத்த பதினைந்தாவது நிமிடம் சூப்பர் பாயா கறி ரெடி. ரஜினிகிட்ட ரெண்டையும் வெச்சோம். எது எங்களோடது, எது வாங்கி வந்ததுன்னு சொல்லலை. ‘எது நல்லா இருக்குன்னு சொல்லுங்க சார்’ன்னு கேட்டோம். ரெண்டையும் சுவைத்தார். பளிச்சுன்னு பல்ப் எரிஞ்சுது. ‘இதுதான்யா சூப்பர்’ன்னு எங்க தயாரிப்பைக் கொண்டாட ஆரம்பிச்சார்.

அப்புறமாதான், வெளியே போய் வாங்கி வந்த விஷயத்தைச் சோன்னேன். அப்படியே கட்டிப் பிடிச்சுக்கிட்டார். இத்தனைக்கும் இன்னி வரைக்கும் என் நாக்குல ஒரு துளி மாமிசம் பட்டதில்லை. ஒரு தேர்ந்த ஷெஃப்பா தோளைத் தட்டிக்கொண்டது அப்போதான்.

ஒரு சமயம், நியூயார்க் பொங்கல் ரெஸ்டாரண்டுக்கு 4000 டாலர் சம்பளத்துக்கு சீப் ஷெஃப்பா கூப்பிட்டாங்க. அப்போ ஹெச்1பி விசா வாங்கறது ரொம்ப கஷ்டம்.

ரஜினி கிட்ட சொன்னேன். பொறுமையா கேட்டவர், உடனே, பட், அமெரிக்கன் கவுன்சிலேட்டுக்குப் போங்க. அங்க ஒருத்தரை எனக்குத் தெரியும். நான் அவர் கிட்ட பேசறேன். உங்களுக்கு நான் கேரண்டி தரேன். விசா ரெடி பண்ணலாம்”னார்.

2001 ஜனவரி 15 – அமெரிக்கன் கான்ஸலேட்டுல விசா இண்டர்வியூ. ஜனவரி 14 ஆம் தேதி எங்கம்மா ராதா பட் மைசூரில் இருந்து வரும்போது ரயில் ஆக்ஸிடெண்டுல தவறிட்டாங்க. நான் அலறி அடிச்சுக்கிட்டு ஓடினேன். எல்லாம் முடிஞ்சு போச்சு. விசா இண்டர்வியூவும் போக முடியலை.

அம்மாவோட காரியங்களை முடிச்சுட்டு, மொட்டை போட்டுக்கிட்டு, பிப்ரவரி மாசம் வேலைக்கு வந்தேன். அன்னிக்கு ராத்திரி ரஜினி வந்தார். மேனேஜர் எல்லா விஷயத்தையும் சொன்னார். என்னால், விசா இண்டர்வியூவுக்குப் போக முடியலைங் கறதையும் சொன்னேன். அவர் கண்ணு கலங்கிப் போச்சு. சட்டுன்னு சமாளிச்சுக்கிட்டு, ‘கவலையே படாதீங்க பட். India needs you… அதனால், உங்க அம்மா உங்கள அமெரிக்கா போகவுடாம தடுத்திருக்காங்க… டோண்ட் வொர்ரி’ன்னார்.

அந்த நல்ல மனசு, வாய் முகூர்த்தம் யாருக்கு வரும்? அதுக்கப்புறம் அமெரிக்கா வரச்சொல்லி நாற்பதுக்கும் மேல ஆஃபர் வந்துது. இன்னி வரைக்கும் நான் போகல. ரஜினி சார் வாய் முகூர்த்தம் பலிக்காம போயிடுமா என்ன? இப்போ சொந்தமா எட்டு ரெஸ்டாரண்டு வெச்சிருக்கேன். ஜாம்ஜாம்னு இருக்கேன்.

சென்னை ஓட்டல் தாசப்பிரகாஷ் குடும்பத்தில் வந்தவர் வெங்கடேஷ் பட். தாஜ் கோரமண்டல், பெங்களூர் லீலா பேலஸ் ஆகிய உணவகங்களில் தலைமை ஷெஃப்பாக இருந்தவர், இப்போது தி சௌத் இண்டீஸ் என்ற உணவகங்களின் சி.இ.ஓ.வாக இருக்கிறார்.

நன்றி: கல்கி

Advertisements

2 thoughts on “ரஜினியின் நல்ல மனசு — வெங்கடேஷ் பட்

  1. Vathsala December 16, 2014 at 10:08 AM Reply

    Well done!your programme in vijay tv is very interesting.

  2. D. Chandramouli December 16, 2014 at 10:26 AM Reply

    Rajini with a superstar status in India has no airs, and many a time, responds spontaneously on what his heart says! No wonder he is loved by all. Time and again, he proves to be a simple man, as told in the above story. By the way, I believe he may not fit into the mould of a politician. I wish he uses his influence and reach in lending his voice to the day to day problems of the common man in Tamil Nadu. He cannot be ignored by the powers-that-be.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s