108-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


மஹாஸ்வாமிகளுக்கு எல்லா மதத்தினர் மீதும் மரியாதை உண்டு.அதேமாதிரி மற்ற மதத்தினரும் அவருக்கு மரியாதை செலுத்தத் தவறியதே இல்லை. அவர் சமாதியான அன்று மரியாதை செலுத்த வந்தவர்களுள்  சில இஸ்லாமிய சகோதரர்களும் அடக்கம்.

ஒருமுறை சிறந்த இலக்கியவாதியும், கம்பன் கழகத்தின் தலைமை பொறுப்பிலிருந்த திரு.நீதியரசர் இஸ்மாயில் அவர்கள் பெரியவர்களைப் பார்க்க வந்தார். இருவருக்கும் இடையே இலக்கிய விஷயங்களைப் பற்றியும் கம்பராமாயணத்தைப் பற்றியும் விவாதம் வெகு நேரம் நடந்து கொண்டு இருந்தது. மடத்திலிருந்த எல்லோருக்கும் ஸ்வாமிகள் நீதியரசருக்கு என்ன பிரசாதம் கொடுக்கப் போகிறார் என்ற எண்ணமே மிகுதியாக இருந்தது. இந்துக்களுக்கெல்லாம் விபூதி குங்குமம் வழங்கலாம். ஆனால் இந்த இஸ்லாமிய பெரியவருக்கு என்ன கொடுப்பார்? விவாதம் முடிந்து நீதியரசர் விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது.

ஸ்வாமிகள் மடத்துச் சிப்பந்தி ஒருவரை அழைத்து சைகையால் ஒரு பொருளைக் கொண்டுவரச் சொன்னார்கள். உடனே அவரும் ஒரு வெள்ளிப் பேழையில் அந்தப் பொருளைக் கொண்டுவந்து ஸ்வாமிகள் முன் வைத்தார். ஸ்வாமிகள் நீதியரசரைப் பார்த்து இந்தப் பேழையில் சந்தனம் இருக்கிறது இதை அணிந்துகொண்டு நலமாக இருங்கள் என்றார். மேலும் கூறினார்   நம் இருமதத்தினருக்கும் பொதுவான அம்சம் இது.   உங்கள் தர்காவிலும் சந்தனக்கூடு உண்டு   எங்கள் கோவில்களிலும் சந்தனம் உண்டு.   நீதியரசரும் சந்தோஷத்துடன் அதை அணிந்து கொண்டு சென்றார்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

உயிர் பிரிபவருக்கு உதவி!

சாகிற நிலையில் இருக்கும் ஒரு ஜீவனுக்கு மற்றவர்கள் பெரிய பரோபகாரம் செய்யலாம். அந்த ஜீவனைப் பரமாத்மாவிடம் அனுப்பி வைக்கும் பரம உத்க்ருஷ்டமான உபகாரம். இந்த மாதிரி சமயத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் பகவத் நாமாவையே கோஷித்துக் கொண்டிருந்தால், அது அந்த ஜீவனை மற்ற நினைப்பிலிருந்து இழுத்துக் கொண்டே இருக்கும். ஒருவன் எத்தனை துன்மார்க்கத்தில் போனவனாக இருந்தாலும், அந்தக் கடைசி நாழியில் இந்த சம்சாரத்திலிருந்து தப்புவதற்குப் பகவானைப் பிடித்துக் கொள்ளத் தவிக்கத் தான் செய்வான். அவனுக்குத் தானாக அந்தத் தாபம் வராவிட்டாலும் கூட, நாம் உண்டாக்கித் தந்து விட்டால், பிடித்துக் கொண்டு விடுவான். நாம் பகவானை நினைக்கும்படியாகப் பண்ணி, அதனால் பகவான் அந்த ஜீவனை எடுத்துக் கொள்ளச் செய்து விட்டால், அதைப் போன்ற உபகாரம் வேறே எதுவும் இல்லை.

ஆயுள் முழுக்க நாத்திகனாக இருந்தவன்கூட, அந்திம காலத்தில் ஏதோ ஒரு பெரிய சக்தியின் கையில்தான் இருக்கிறோம் என்று கொஞ்சமாவது தெரிந்து கொள்ளாமலிருக்க மாட்டான். ஆதலால் நாம் அவனுக்கு உதவுவதை அவன் நிச்சயம் ஏற்றுக் கொள்வான்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s