107-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், சில துறைகளைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் சிறந்து விளங்குகிறவர்களுக்கு கௌரவ டாக்டர்  பட்டம் வழங்கப் போவதாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டது.

https://balhanuman.files.wordpress.com/2010/08/vanathi.jpg?w=205

வானதி திருநாவுக்கரசு தமது புத்தக வெளியீடுகள் மூலம் சிறந்த தொண்டை ஆற்றி வருகிறார் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த அபிப்பிராயம்.  அதனால் புத்தக பதிப்புத் துறையில் சிறந்து விளங்கும் அவருக்கு டாக்டர்  பட்டம் வழங்க சிபாரிசு செய்திருப்பதாகவும், திருநாவுக்கரசு வாழ்க்கைக் குறிப்புகள் வேண்டுமென்றும் கேட்டிருந்தார்கள்.   எந்தக் காரியத்தை துவங்குவது என்றாலும் திருநாவுக்கரசு, காஞ்சி மகானின் ஆசி இல்லாமல் துவங்கியது இல்லை.

அதனால், தனது வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய கடிதத்தை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் சென்று மகானைச் சந்தித்தார்.  ஒரு பழத் தட்டில் பூக்களுடன் இந்தக் கடிதத்தையும் வைத்து மகான் முன் சமர்ப்பித்தார்.

விவரத்தைச் சுருக்கமாகச் சொல்லி, ஜனாதிபதியின் அனுமதிக்காக லிஸ்ட் டெல்லி போயிருக்கிறது என்று முடித்தார்.

மகான் அக்கடிதத்தை அவரே எடுத்துப் படித்தார்.  ‘அவா வேற தர்ராளாமா ?  நாமதான் ஏற்கனவே உனக்கு  ‘சமய இலக்கிய பிரச்சார மணி’ னு பட்டம் தந்தாச்சே”  என்று சொல்லி அக்கடிதத்தைப் பழத் தட்டிலேயே போட்டுவிட்டார்.  உடனே தன் உதவியாளரை அழைத்து ஒரு சால்வையைக் கொண்டு வரச் சொல்லி, அதை வானதி திருநாவுக்கரசுக்கு அணிவிக்கச் செய்தார்.  அத்துடன் நில்லாது, தன் மார்பில் இருந்த பவளமாளையைக் கழற்றி வானதியாருக்கு அணிவிக்கச் செய்தார்.

மகானே பட்டம் கொடுத்த பிறகு…..வேறு பட்டம் எதுவும் தேவை இல்லை தானே ?  அதேபோல் இன்று வரை பாண்டிச்சேரி பல்கலைக்கழக பட்டம்  அவருக்கு வரவே இல்லை.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

மஹான்கள் வசந்த காலம் போன்றோர்!

சந்திரனின் கிரணங்கள் லோகத்துக்கெல்லாம் தாப சமனம் தருகிறது. சந்திரனுக்கு இப்படி உலகத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஆசை இருந்து, இதற்காக முயல வேண்டுமென்பதில்லை. தன் இயல்பாகவே அது லோக இதத்தை உண்டாக்குகிறது. அதே போல சஜ்ஜனங்கள் என்ற சாதுக்கள், தங்களுடைய ‘நேச்சர்’படி, இயல்பாக இருப்பதே, நடப்பதே பரோபகாரமாகத் தான் இருக்கும்.

வசந்தகாலம் போல, உலக நலனைச் செய்தபடி உலாவுகிறார்களாம் மஹான்கள். வசந்தம் என்று ஒன்று கண்களுக்குத் தெரிகிறதா? சந்திரனாவது தெரிகிறது. மஹான்கள் தங்களை இப்படிக் காட்டிக் கொள்வது கூட இல்லை.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s