106-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


அல்லாடி கிருஷ்ண சாமி ஐயர் மகன் டாக்டர் ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதா ராமகிருஷ்ணனும் அமெரிக்கா செல்வதற்கு முன் காஞ்சிபுரம் மடத்திற்கு பெரியவரைக் காண வந்திருந்தனர். பெரியவரிடம், “வரும் 12ம்தேதி புறப்படறோம்.பெரியவாளின் அனுக்ரஹம் பூரணமாக வேணும்” என்று சொல்லி அந்த தம்பதிகள் வணங்கினர்.

பெரியவர் கண்ணை மூடிக் கொண்டு மௌனத்தில் ஆழ்ந்தார். “பதினைஞ்சு நாள் கழிச்சு புறப்படு” என்று கண்டிப்பான தொனியில் சொன்னார். டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. பயணத்தை தள்ளிப்போட இஷ்டமில்லை. பெரியவர் பேச்சை கேட்காமலும் இருக்கமுடியவில்லை. டிக்கட் கான்சலேஷன், அடுத்து ரிசர்வேஷன் எப்படி செய்வது? என்று மனக்குழப்பமும் உண்டானது. கடைசியில் அமெரிக்கப் பயணத்தை ஒத்தி வைத்தார்.

மீனம்பாக்கத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மும்பையிலேயே தன் பயணத்தை முடித்துக் கொண்டு விட்டது. அதில் பயணம் செய்த நூறு பேரும் இறந்துவிட்டனர். இதனைக் கேள்விப்பட்ட டாக்டர் அல்லாடி ராமகிருஷ்ணனும், அவரது மனைவி லலிதாவும் தாங்கள் பெரியவரால் காப்பாற்றப் பட்டதை எண்ணி ஆனந்தக்கண்ணீர் பெருக்கினர். வரவிருந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றிய காஞ்சிப் பெரியவரின் அருளாசியை வியந்து மகிழ்ந்தனர்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

வசவுதான் நல்லது செய்யும்!

ஸ்தோத்ரத்தைவிட, புகழ்ச்சியைவிட வசவு தான் எப்போதுமே ஒருவனுக்கு நல்லது செய்யும். புகழ்ச்சி, கர்வத்தில் கொண்டுவிட்டு ஆத்ம ஹானிக்குத்தான் வழி செய்கிறது. “சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறவர் மற்ற பேர்; அழ அழச் சொல்கிறவர் உற்ற பேர்” என்று சொல்வதுண்டு.

6 thoughts on “106-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. s.rajah iyer October 28, 2014 at 3:20 AM Reply

  Dr.Ramakrishnan’s wife is a good veena player.She performed@Pollachi Tamil Isai Sangam when they came to greet late Sri Pollachi Mahalingam.Ramakrishnan is a Maths Genius who went to USA with full scholarship!

  • BaalHanuman October 29, 2014 at 2:09 PM Reply

   Great info… Thanks for sharing…

 2. Jagannathan R October 28, 2014 at 8:05 AM Reply

  பக்தருக்கு அனுக்ரஹம் செய்த வகையில் சந்தோஷம், அவர் வரையில் சந்தோஷப்படுவதும் சரி. ஆனால் 100 பேர் பலி ஆனது, அதைத் தவிர்க்க முடியாதது வருத்தமளிக்கிறது.

  • BaalHanuman October 29, 2014 at 2:11 PM Reply

   அன்புள்ள R.J,

   உங்கள் நெருடல் புரிகிறது. சுந்தர் சொல்வது போல் இதன் காரணம் அவருக்குத்தான் தெரியும்…

 3. Right Mantra Sundar October 28, 2014 at 11:54 AM Reply

  சில கேள்விகளுக்கு விடைகள் ஆண்டவன் ஒருவனுக்கு தான் தெரியும்.

  தம்பதிகளின் நல்லநேரம், பெரியவாவை பார்க்கத் தூண்டி அவர்களுக்கு வரவிருந்த ஆபத்து தவிர்க்கப்பட்டுவிட்டது. அவ்வளவே.

  “சிரிக்கச் சிரிக்கச் சொல்கிறவர் மற்ற பேர்; அழ அழச் சொல்கிறவர் உற்ற பேர்” – அருமையான அற்புதமான பழமொழி இது. இதை கேள்விப்பட்டிருக்கிறேன். பெரியவா இதை பிரயோகித்திருக்கிறார் என்பதை அறியும்போது மகிழ்ச்சி.

  ஞானசாகரத்துக்கு தெரியாததும் உண்டோ…

 4. R NAGARAJAN October 31, 2014 at 9:38 PM Reply

  காஞ்சி பெரியவர், விமானம் விபத்துக்கு உள்ளாகும் என்று தெரிந்து ராமகிருஷ்ணன் தம்பதிகளை போக வேண்டாம் என்று தடுத்திருந்தால், அவர் பெரியவரே அல்ல. இரண்டு உயிரைக் காப்பாற்றி விட்டு 1௦௦ உயிர்களைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால், அவர் பெரியவரே அல்ல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s