102-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


photo (21)

காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பி.ராமகிருஷ்ணனின் அனுபவம் (குமுதம் பக்தி ஸ்பெஷல்) தொடர்கிறது…

மகா பெரியவாளைப் பற்றி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம், அவர் சன்யாச தர்மத்தில் இருந்து ஒரு துளிகூட தவறாம இருந்தவர்ங்கறது.

தான் கடைப்பிடிச்ச மாதிரியே எல்லாரும் அவரவர்க்கு உரிய குலதர்மத்தை தவறாம கடைப்பிடிக்கணும்னு எப்போதுமே அவர் சொல்லுவார்.

எனக்கு உபநயனம் நடந்து முடிஞ்சதும் நாங்க எல்லாரும் ஆசார்யாள் கிட்ட ஆசி வாங்கிக்கறத்துக்காக காஞ்சிபுரத்துக்குப் போயிருந்தோம். அப்போ, “தலை ஆவணி அவிட்டம் வரைக்குமாவது உன் பிள்ளையை தினமும் சமிதாதானம் பண்ணச் சொல்லு. ஒவ்வொரு நாளும் மூணு வேளை சந்தியாவந்தனம் பண்றதை எப்போதும் கடைப்பிடிக்கச் சொல்லு. உன்னால முடிஞ்ச சமயத்துல எல்லாம் அவனுக்கு வேத மந்திரங்களைச் சொல்லிக் கொடு!” அப்படீன்னு சொல்லிட்டு என்னை ஆசீர்வதிச்சார்.

பரமாச்சார்யார் சொன்ன மாதிரியே எனக்கு வேதங்களை சொல்லித் தர ஆரம்பிச்சார் அப்பா. அந்த சமயத்துல ஒரு நாள் நான் விளையாட்டா சிவலிங்க பூஜை செய்ய ஆரம்பிச்சேன். இதை யாரும் பெரிசா எடுத்துக்கலை.

பட்டப் படிப்பை முடிச்சுட்டு மேற்படிப்புக்காக நான் விண்ணப்பிக்க இருந்த சமயம், என்னோட அப்பாவும் அம்மாவும் வழக்கம் போல பரமாச்சாரியா தரிசனத்துக்காக காஞ்சீபுரம் போயிருக்காங்க. வழக்கப்படி ஆசீர்வதிச்ச மகா பெரியவர், மடத்துல இருந்த ஒருத்தரைக் கூப்பிட்டு, ருத்ராட்ச மாலை ஒன்றை எடுத்துக் கொண்டு வரச் சொல்லியிருக்கார்.

அவர் கொண்டு வந்த ருத்ராட்ச மாலையை எங்க அப்பா கிட்ட குடுத்து, “உன் மகன் சிவ பூஜை எல்லாம் செய்யறான் போலிருக்கே… அவன் பூஜை பண்ற சமயத்துல இதைப் போட்டுக்கச் சொல்லு!” அப்படீன்னு சொல்லியிருக்கார்.

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஒரு பக்கம் ஆனந்தம், மறு பக்கம் ஆச்சரியம்! ‘நம்ப மகன் சிவ பூஜை செய்யறதை நாம பெரிசாவே எடுத்துக்கலை. அதை பெரியவா கிட்ட சொல்லவும் இல்லை. ஆனா, அவராகவே தெரிந்து கொண்டு, ஆசீர்வாதமும் செய்திருக்கார்னா அது எவ்வளவு பெரிய பாக்கியம்!’ இப்படி நினைத்துக் கொண்டே ஆசார்யாள் தந்த ருத்ராட்ச மாலையை மகா பிரசாதமாக நினைத்து எடுத்துக் கொண்டு வந்தவர்களுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்துக் கொண்டு இருந்தது.

அவங்க கையில இருந்த ருத்ராட்ச மாலையைப் பார்த்த மடத்து சிப்பந்தி ஒருத்தர், “அடடே…இது பிரதோஷ காலத்துல பிரத்யேக பூஜை பண்ற சமயத்துல பெரியவா போட்டுக்கற ருத்ராட்ச மாலை ஆச்சே…! இதை உங்களுக்குத் தந்திருக்கார்னா பெரிய பாக்யம் தான்!” னு சொன்னாராம்.

அந்த ருத்ராட்ச மாலையை இன்றைக்கும் நான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். தினம்தினம் முறைப்படி பஞ்சாயதன பூஜை பண்ணும்போது அதைப் போட்டுக் கொள்கிறேன்.

நான் கேட்காமலே இப்படி ருத்ராட்ச மாலையைத் தந்த மகான், எத்தனையோ தெய்வீக நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றைப் பார்க்கும் பாக்யம் எனக்குக் கிடைத்திருக்கிறது. அவற்றைத் தொடர்ந்து பார்ப்போம்…

மஹா பெரியவா அருள்வாக்கு : –

எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணும் நெருப்பு மாதிரித்தான் ஆசை. எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்ம க்ஷேமம். “நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழ வேண்டும்” என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழ வேண்டும் என்பதைத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். அதற்கு மேல், ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s