100-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


FullSizeRender

 

FullSizeRender (1)

 

நடமாடும் தெய்வமாம், ஞான தவத்தில்
புடம் போட்ட பொன்னாய்ப் பொலியும் – இடர் யாவும்
போக்கி அருளும் புகழ் காஞ்சிமாமுனியை
நீக்கமற நெஞ்சே நினை!

Golden Maha Periyava

Feb 28, 2014 மஹா சிவராத்திரி நன்னாளில் ஆரம்பித்த நமது ‘அனுபவங்கள் ஆயிரம்‘ நூறாவது பதிவு என்ற எண்ணிக்கையை இத்துடன் எட்டுகிறது. உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றி!

1970-களின் பிற்பகுதியில், ஆந்த்ரப் பிரதேசத்தில், கர்னூலுக்கு வடக்கே துங்கபத்ரா நதிக்கரையில் ஒரு பெரிய மரத்தின் அடியில் தர்சனம் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீ காஞ்சி பரமாசார்யாளை, பிரஹ்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் பூர்வாச்ரம குமாரர் தர்சனம் செய்த போது, சேலம் சின்ன திருப்பதியில் ஸ்ரீ தீக்ஷிதரின் அதிஷ்டான பூஜை பற்றி விசாரித்தபின், நடந்த உரையாடல்.

ஸ்ரீ ஆசார்யாள்: அவன் தகப்பனாரின் உபன்யாச ரெகார்டிங்குகளை பத்திரமாக வைத்திருக்கானா?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: கிடைத்த பகுதிகளை வச்சிருக்கோம்.

ஸ்ரீ ஆசார்யாள்: இங்கு எடுத்துண்டு வந்திருக்கானா?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: எடுத்துண்டு வந்திருக்கேன்.

ஸ்ரீ ஆசார்யாள்: இங்கு போட முடியுமா ?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: உத்தரவு. (அங்கு வந்திருந்த பக்தர்கள் எவரிடமும் டேப் ரெகார்டர் இருக்கவில்லை. இதற்கு சுமார் பத்து நிமிடம் தாமதம் ஆனதில்,)

ஸ்ரீ ஆசார்யாள்: என்ன தாமஸம்?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: எவரிடமும் டேப் ரெகார்டர் இல்லை…

ஸ்ரீ ஆசார்யாள்: பின்ன எதுக்கு (டேப்புகளை) எடுத்து வந்திருக்கான்?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: (நாங்கள் வந்துள்ள) காரில் டேப் ரெகார்டர் உள்ளது…

ஸ்ரீ ஆசார்யாள்: அதுல இப்ப போட முடியுமா ?

ஸ்ரீ தீக்ஷிதரின் குமாரர்: உத்தரவு. (காரை நதிக்கரைக்கே எடுத்து வர செய்கை செய்யப்பட்டது)

ஸ்ரீ ஆசார்யாளின் உத்திரவின்படி, நாங்கள் சென்றிருந்த காரையே, (பக்தர்கள் கைகொடுத்து தள்ளி உபகரிக்க) நதிக்கரையின் மணலில் எடுத்து வந்து, அதிலுள்ள ஸ்பீக்கரை வெளியில் எடுக்க முற்பட்டோம். ஸ்ரீ ஆசார்யாளின் அருகில் ஸ்பீக்கர் வரும் அளவு, தேவையான ஒயர் இருந்ததைக்கண்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டோம். அவசரத்தில் அப்பொழுது கையில் கிடைத்த டேப்பைப் போட்டவுடன், தனது கைகளை வஸ்திரத்துக்குள் வைத்துக் கொண்டு ஜபம் செய்தவாறே சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல், ஒரு அசைவும் இல்லாமல் கேட்டார்கள்.

உபன்யாஸ நடுவில், மகான்களின் லக்ஷணங்களை விவரித்துவிட்டு, கலியில் தமது மஹத்துவத்தை வெளிக்காட்டிக் கொள்ளாத மஹான்களை, சாதாரண ஜனங்கள் எப்படி அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விவரித்துக் கூறிய ஸ்ரீ தீக்ஷிதர், மஹான்களுக்கு உதாரணமாக நம் ஸ்ரீ மஹாபெரியவாளையே குறிப்பிட்டவுடன், அங்கிருந்த அனைவரும் மனம் உருகி ஆனந்தக்கண்ணீர் விட்டோம்.

உபன்யாசம் கேட்டு முடித்தவுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளோம். காரின் பின் பகுதியும், அதன் மேல், பிரித்து எடுத்து வெளியில் வைக்கப்பட்ட காரின் ஸ்பீக்கரையும் பின்புறத்தில் துங்கபத்ரா நதியையும் காணலாம்.

FullSizeRender (2)

 

FullSizeRender (3)

மஹா பெரியவா அருள்வாக்கு : –

தர்மம் பண்ணுவதில் மட்டும் ‘அப்புறம்‘ என்று ஒத்திப் போடாமல், எப்போதும் யமன் உன் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருக்கிறான் என்று நினைத்து, உடனுக்குடன் பண்ணி விட வேண்டும்.

வியாசர், பதினெட்டு புராணங்களையும் பண்ணி முடித்தபின், சிஷ்யர்கள் அவற்றின் ஸாராம்சத்தை ஒன்றிரண்டு ஸ்லோகங்களில் சுருக்கித் தருமாறு வேண்டினார்கள். “பதினெட்டுப் புராணம் மட்டுமின்றி, மொத்தமுள்ள கோடிப் புத்தகங்களின் ஸாரத்தையும் அரை ஸ்லோகத்தில் சொல்கிறேன்” என்றார்.

“ச்லோகார்த்தேந ப்ரவக்ஷயாமி யதுக்தம் க்ரந்த கோடீஷு
பரோபகார: புண்யாய பாபாய பரபீடிதம்”

இருக்கும் அத்தனை கோடி மத சாஸ்த்ர புத்தகங்களும் உயிர் நிலையான தத்வம் என்னவென்றால், “புண்யம் சம்பாதிக்க வேண்டுமென்றால் பரோபகாரம் பண்ணு. பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதென்றால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு”, என்பதுதான்.

Advertisements

4 thoughts on “100-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. Rightmantra Sundar October 12, 2014 at 2:43 AM Reply

  ‘மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்’ தொடர் நூறாவது பகுதியை எட்டியமைக்கு வாழ்த்துக்குள். பல்லாயிரம் பகுதிகளை இது எட்ட மகா பெரியவாவை பிரார்த்திக்கிறேன்.

  அருமை… அருமை… அருமை. அரிய புகைப்படம். அற்புதக் காட்சி.

  ///உபன்யாஸ நடுவில், மகான்களின் லக்ஷணங்களை விவரித்துவிட்டு, கலியில் தமது மஹத்துவத்தை வெளிக்காட்டிக் கொள்ளாத மஹான்களை, சாதாரண ஜனங்கள் எப்படி அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி விவரித்துக் கூறிய…///

  கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அந்த உபன்யாச சி.டி. எங்கேனும் கிடைத்தால் எனக்கு தயை கூர்ந்து தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

  ///புண்யம் சம்பாதிக்க வேண்டுமென்றால் பரோபகாரம் பண்ணு. பாபத்தை மூட்டை கட்டிக் கொள்வதென்றால் மற்ற ஜீவன்களுக்குக் கஷ்டத்தைக் கொடு”///

  மனதில் இருத்த வேண்டிய வாசகம்.

  • BaalHanuman October 12, 2014 at 3:08 PM Reply

   அன்புள்ள சுந்தர்,

   உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

   பிரஹ்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதரின் ‘ஸ்ரீமத் பாகவத சப்தாஹம்’ மொத்தம் 24 CD – க்கள் கொண்ட ஒரு அருமையான தொகுப்பு.

   You can contact

   SSADA Trust (It stands for Sri Sengalipuram Anantharama Deekshitar Adishtanam Trust)
   No-1, II Cross, Maravaneri,
   Salem-636007.
   Tamil nadu,
   India
   email – ssadatrsut@gmail.com
   Phone: 0427-2415873

 2. s.rajah iyer October 12, 2014 at 3:06 AM Reply

  WHenever I go to any Temple in South,my bakthi for Mahaperiyava,wd induce me to search for His pictures,whether it is there in some corner.When I visited Guruvayur,I saw only Two huge photOs facing Guruvayurappan,on the rt corner when we enter..Sengalipuram and Mahaperiyava!

  • BaalHanuman October 12, 2014 at 3:09 PM Reply

   அருமையான தகவல் சார். பகிர்ந்ததற்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s