96-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


கோபுலு கூறுகிறார்…..

விகடன் தீபாவளி மலர்களில் தேவன் எழுதிய பல கட்டுரைகளுக்கு நான் படம் வரைந்திருக்கிறேன்.

அவற்றில் ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு பற்றிய ‘சங்கர விஜயம்‘ என்ற ஒரு சிறப்புச் சித்திர மடலும் ஒன்று.  நான் படங்களை வரைந்து முடித்தவுடன்,  தேவன் என்னைத் தனது காரிலேயே அழைத்துக் கொண்டு காஞ்சிபுரம் போனார்.

அப்போது விஷ்ணு காஞ்சியில் முகாமிட்டிருந்த பரமாச்சாரியாரிடம் நான் வரைந்திருந்த படங்களைக் காட்டினோம்.  படங்களில் ஒன்றிரண்டு திருத்தங்களைக் கூறினார் பரமாச்சாரியார்.  அங்கேயே உட்கார்ந்து அந்தத் திருத்தங்களைச் செய்து முடித்து,  அவரிடம் மறுபடி காட்டியபோது,  அசீர்வதித்து பிரசாதம் கொடுத்தார்.  அடுத்தடுத்த வருடங்களில்,  ராமானுஜ விஜயம்மத்வ விஜயம் என்று வரிசையாகச் சித்திர மடல்கள் வரைந்தேன்.

எஸ். சந்திரமௌலி தொகுத்துள்ள ஓவியர் கோபுலுவின் கோடுகளால் ஒரு வாழ்க்கை!

மஹா பெரியவா அருள்வாக்கு : –

வைதீக தர்மத்திற்கு சாரமாக இருப்பது பஞ்ச மகா யக்ஞங்கள் எனும் பஞ்ச வேள்விகள். வேதம் ஓதுவது, ஒதுவிப்பது  எனும் வித்யா தானமே “ப்ரம்ம யக்ஞம்“. மூதாதையருக்குச் செய்யும் தர்ப்பணமே “பித்ரு யக்ஞம்“. ஈஸ்வர ஆராதனமே “தேவ யக்ஞம்“. நாயும் காக்கையும் உட்பட எல்லா ஜீவராசிகளுக்கும் பலி போடுவது “பூத யக்ஞம்“. அதிதி – விருந்தினரை உபசாரம் செய்வது “ந்ரு யக்ஞம்“. படைப்பில் ஒரு பிரிவைக்கூட விடாமல் உபகாரம் பண்ணி வைப்பது பஞ்ச மகா யக்ஞம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s