95-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


பெரியவா‘ என்றால், அது காஞ்சிப் பெரியவரைத்தான் குறிக்கும். விழுப்புரத்தில் பெரியவர் இருந்த காலந்தொட்டு அவருடன் கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். தனது ஆறு வயது முதலே பெரியவாளுடன் நெருக்கமாகப் பழகி, அவருக்குச் சேவை புரிந்தவர். மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயம் புதுப்பிக்கப்படுவதற்கும், அருகேயே இவர் ஒரு வேத பாடசாலை ஆரம்பிப்பதற்கும் காஞ்சிப் பெரியவர் காரணமாக இருந்ததை விவரிக்கிறார் லக்ஷ்மிநாராயணன்.

அது 1952-ஆம் வருஷம்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும், பெரியவாளைப் பார்க்கக் காஞ்சிபுரம் வருவோம். அப்படி ஒரு வியாழக்கிழமையன்னிக்கு வந்தப்போ, ”நேத்திக்கு எனக்கு ஒரு சொப்பனம். ‘பஞ்சாக்னி ஜுவாலையால எனக்கு ஒடம்பெல்லாம் எரியறது. இங்கே புனருத்தாரணம் பண்ணணும்’னு அம்பாள் சொப்பனத்துல பேசினா. எங்கேயோ அம்பாள் கோயில் ஒண்ணு பாழடைஞ்சு கெடக்கு. கண்டுபிடிச்சு சொல்றியா?”ன்னு எங்கிட்ட கேட்டார். ”ஒரு வாரம் டயம் கொடுங்கோ”ன்னேன்.

அடுத்த வாரம் அவரைப் பார்த்தப்போ, முதல் நாள் ராத்திரி மறுபடியும் அம்பாள் சொப்பனத்துல வந்ததா சொன்னார். அன்னிக்கு ஒரு யானை வந்து தும்பிக்கையால அவரைக் கைப்பிடிச்சு அழைச்சுண்டு போச்சு.பெரியவா அந்த யானையோடு கிளம்பிட்டா. அவருக்கு மட்டும் அது யானையா தெரியலே. அம்பாளாத்தான் தெரிஞ்சிருக்கு.

ரொம்ப நேரம், ரொம்ப தூரம் யானை பெரியவாளை அழைச்சுண்டு போச்சு.பெரியவாளும் அது பின்னாடியே நடந்து போயிண்டே இருந்தா. பல மணி நேரத்துக்கப்புறம் ஒரு மண் ரோட்டுல யானை திரும்பித்து. அங்கே கொஞ்ச தூரம் போனதும், யானை மறைஞ்சுடுத்து. அப்படின்னா, அந்தப் பாழடைஞ்ச அம்பாள் கோவில் இங்கேதான் எங்கேயோ இருக்கணும்னு பெரியவாளுக்குத் தெரிஞ்சுடுத்து. ராத்திரி பெரியவா அங்கேயே தங்கறதா தீர்மானம் பண்ணிட்டா. அங்கே ஒரு மாட்டுக் கொட்டகை மாத்திரம்தான் இருந்துது. பெரியவா அதனுள்ளே போய்ப் படுத்துண்டுட்டா.

இதையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டுப் பெரியவா மறுபடியும் காஞ்சிபுரம் போயிட்டா. இடத்தை எல்லாம் சரி பண்ணி, கும்பாபிஷேகம் நடத்தினோம். அப்போதைக்கு ஏகாம்பர குருக்கள்னு ஒருத் தரை பூஜை பண்ண நியமனம் பண்ணினோம். மாங்காடு கோயில் பத்தி அப்பல்லாம் யாருக்கும் தெரியாது.அந்த ஏரியாவுக்கு அப்போ மணலி ராமகிருஷ்ண முதலியார்தான் நாட்டாமை.பெரியவா வந்திருக்கிற விஷயம் தெரிஞ்சு முதலியார் வந்து பார்த்தார். ”என்ன செய்யணுமோ, நான் செய்யறேன். பெரியவா கவலைப்படாதீங்கோ”ன்னார். ”24 மணி நேரத்துல சம்ப்ரோக்ஷணம் பண்ணணும்”னு சொன்னா பெரியவா. மளமளன்னு காரியங்கள் ஆரம்பிச்சுது. ஆளுக்கு ஆயிரம் ரூபா போல போட்டா. புதரும், பாம்புப் புத்துகளுமா இருந்த அந்த இடத்தைச் சுத்தம் பண்ணினா. சின்ன கோபுரம் தெரிஞ்சுது. ”ஆதிசங்கரர் கர்ப்ப வாசம் இருந்த இடம் இதுதான்”னா பெரியவா. கர்ப்ப வாசம்னா பத்து மாசம் ஓரிடத்திலே தங்கியிருக்கறது. ”அர்த்த மேரு இங்க பிரதிஷ்டை பண்ணியிருக்கு. அம்பாள் இங்கே உக்ரமா இருக்கா; அவளுடைய உக்ரத்தைத் தணிக்கணும்”னு சொன்னா.

பக்கத்துலயே பெரியவா தனக்கொரு இடம் வேணும்னு கேட் டிருந்தா. ”ஆகட்டும். முடிச்சுத் தரேன்”னேன். ஆனா, ஏதேதோ வேலையில் அது அப்படியே தள்ளிப் போயிடுத்து. 1965-லே மறுபடியும் ஒரு தரம், ”மாங்காட்டுல இடம் வாங்கித் தரணும்னு கேட்டேனே, மறந்துட்டியா?”ன்னு ஞாபகப்படுத்தினா பெரியவா. கூடவே, ”ஒருத்தர்கிட்டேயும் கடன் கிடன் வாங்கப்படாது. உன் கைக்காசைப் போட்டு வாங்கித் தரணும்”னு நிபந்தனை போட்டா. அதனால, அது முடியாமலே இருந்தது. பெரியவா அப்பப்போ ஞாபகப்படுத்திண்டே இருப்பா. ஒருவழியா 1976-ல இந்த இடத்தை வாங்கினேன். மூணரை கிரவுண்டு நிலம். அஞ்சு லட்சம் இருந்தாத்தான் கட்ட முடியும். என்னோட வீட்டை வித்து, மனைவியின் நகைகளை வித்து எப்படியோ புரட்டிப்போட்டு வாங்கிட்டேன்.

”இங்கே ஒரு அம்பாள் கோவில் கட்டணும். முதல்ல ஆதிசங்கரர் பாதுகையை வைக்கணும். அப்புறம் மேல கட்டலாம். 16 அடி அஸ்திவாரம் தோண்டி, உள்ளே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதிப் போடணும். அஞ்சு ஜட்ஜ் வந்துதான் ஃபவுண்டேஷன் போடணும்”னார். சுத்துப்பட்டு இருக்கிற பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள்கிட்டே 108 கோடி பஞ்சாட்சரம் எழுதி வாங்கினோம். ஜட்ஜ் பாலசுப்பிரமணிய அய்யர்கிட்ட ஃபவுண்டேஷனுக்குப் பெரியவாளே சொல்லிட்டா. அவர் ஆக்ஞை பண்ணினா, உடனே எடுத்துச் செய்யறதுக்குப் பெரிய மனுஷாள்ளாம் காத்திருந்தா.

1982-ஆம் வருஷம்… குரோம்பேட்டைல ஒரு சின்ன இடம் வாங்கி வீடு கட்டிண்டு போயிட்டேன். அப்போ நான் சிம்ஸன்லே அக்கவுன்ட்ஸ் செக் ஷன்ல வேலை பார்த்துண்டு இருந்தேன். வேலை முடிஞ்சதும், நேரே இங்கே வந்து கட்டட வேலைகளைக் கவனிச்சுட்டு, ராத்திரி குரோம்பேட்டை போயிடுவேன்.

வேலை இழுத்துண்டே போய், 1992-லதான் முடிஞ்சுது. இந்தக் கோவிலுக்குப் பெரியவா கையாலதான் கும்பாபிஷேகம் பண்ணணும்னு எனக்கு ஆசை. ”நான்தானே எல்லாம் பண்ணி வெச்சேன். இதுக்கும் ஏன் என்னையே கூப்பிடறே? ஜெயேந்திரரைக் கூப்பிட்டுக்கோ. கும்பாபிஷேகம் பண்ற காலம், குரு வாரமும் பஞ்சமியும் சேர்ந்து இருக்கணும்”னா. பெரியவாளோட நட்சத்திரம் அனுஷம்கிறதால, அனுஷமும் சேர்ந்திருந்தா நன்னாருக்கும்னார் ஜெயேந்திரர்.

1994 ஜனவரி 8-ஆம் தேதி… 12 மணிக்கு எனக்குத் திடீர்னு கடுமையான ஜுரம்! என் குடும்பத்தார் என்னை ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிட்டாங்க. ”உங்களுக்குக் கடுமையான ஹார்ட் அட்டாக் வந்திருக்கு”ன்னார் டாக்டர். மூணு நாள் ஐசியு-ல இருந்தேன். நாலாம் நாள், டாக்டர்களே ஆச்சரியப்படும்படியா நான் குணமாகிட்டேன். ”உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடறோம். இருந்தாலும், 45 நாளைக்கு எங்கேயும் டிராவல் பண்ண வேண்டாம்”ன்னார் டாக்டர். பிற்பாடுதான் எனக்குத் தெரிய வந்துது… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த அன்னிக்குதான் பெரியவா முக்தி அடைஞ்சுட்டாங்கிற விஷயம்.

அப்புறம், விஜயேந்திரர்தான் வந்து இங்கே கும்பாபிஷேகம் பண்ணி வெச்சார்.

”இந்த இடத்திலே யஜுர் வேத பாடசாலை ஆரம்பிச்சு நடத்து”ன்னு சொல்லியிருந்தா பெரியவா. அதன்படி ஆரம்பிச்சு நடத்தினேன். முதல்லே ஆறு பேர் வெளியூர்ல இருந்து வந்தா. அப்புறம் பத்தாச்சு; பன்னிரண்டாச்சு. அப்புறம் வேதம் கத்துக்க வரவாளோட எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சுடுத்து.ஒண்ணரை வருஷமா யாரும் வரதில்லே. எனக்கு இது பெரிய குறை. பெரியவா ஆசைப்படி கட்டின கோயில் இது. வேத பாடசாலையும் அவர் உத்தரவின் பேரில் ஆரம்பிச்சதுதான். இது தொடர்ந்து நன்னா நடக்கணும்கிறதுதான் என் ஆசை!”

– சொல்லும்போதே லக்ஷ்மிநாராயணனின் குரலில் ஒரு தழுதழுப்பு!

ஓவர் டு நண்பர் Halasya Sundaram Iyer…

Halasya Sundaram Iyer

மிகவும் வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.

லக்ஷ்மி நாராயணன் அவர்கள் மறைந்து மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு பின்னர் இந்த பாடசாலையை நிர்வாகிக்க ஆள் கிடையாது.

மாங்காடு வேத பாட சாலையின் நிலை என்ன?

சென்னை மாங்காடு காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில் மஹாபெரியவா உத்தரவின் பேரில் காலஞ்சென்ற லக்ஷ்மிநாராயணன் அவர்கள் ஒரு பாடசாலையை நிறுவினார். அதில் சில வித்யார்த்திகளும் படித்தனர். நான் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால் அந்த பாடசாலைக்கு சென்ற சமயம் பாடசாலையின் நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தது. வித்யார்த்திகளும் இன்றி வித்தை சொல்லித்தருவதற்கு வாத்யாரும் இன்றி பரிதாபகரமான சூழலில் இருந்தது. அங்குள்ள (அந்த பாடசாலை அமைந்துள்ள) கோவிலுக்கு வரும் அர்ச்சகரும் மிகவும் மனதொடிந்து தான் அங்கு வந்து செல்கிறார். ஷண்மத உருவங்களின் தெய்வச் சிலைகளும், ஆதி சங்கரருக்கு தனி சன்னதியும் அங்கு உள்ளது. ஆழ்வார்பேட்டையில் எதோ ஒரு அலுவலகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பெரியவா சொல்கிறபடி வேதபாடசாலையை நாம் கவனித்தால் பெரியவா நம்மை கவனிப்பார். யாராவது கொஞ்சம் விசாரியுங்களேன்.

மஹா பெரியவா அருள்வாக்கு : –

வைத்துக்கொண்டு அனுபவிப்பதை விட, கொடுத்து அனுபவித்தால் அதுவே பரம ஆனந்தத்தைத் தருகிறது. மஹாபலி வாரிவாரிக் கொடுத்தான். ஆனால், தான் கொடுக்கிறோம் என்ற அஹங்காரத்தை அவன் பகவானுக்குப் பலி கொடுக்கவில்லை. இதனால்தான் பகவானே அவனிடம் இந்த அஹங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான்.

Advertisements

15 thoughts on “95-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

 1. Ramanan September 28, 2014 at 11:58 PM Reply

  Can you pl. send the address of Chrompet Office as mentioned in the details and also any contacts relevant / related to this topic?

  Om Namo Bagawathe Sri Ramanayah

  • BaalHanuman September 29, 2014 at 5:37 AM Reply

   TAPAS TRUST

   HDFC Bank, Gopalapuram, Chennai – 86.

   Current Ac. No.: 06751450000127

   IFSC Code : HDFC0000675

   Contact Person : V.Ramachandran 9841754198

   Padasala address :

   Mangadu : Plot No.34, Gurukulam, Sakthi Nagar, Mangadu – Chennai – 600122

   Kozhikuththi : 101, Kozhikuththi Agraharam, Mayiladuthurai – Nagappattinam District.

   The registered office of the trust is at 86/131, I Floor, Lloyds Road, Royapettah, Chennai 600014. Ph : 044-28116393

 2. Rightmantra Sundar September 29, 2014 at 12:10 AM Reply

  Now at mangadu vedha pada sala…

 3. Rightmantra Sundar September 29, 2014 at 12:12 AM Reply

  Outer elevation of Sankara mutt and padasala. A detail write-up follows…

 4. Rightmantra Sundar September 29, 2014 at 12:16 AM Reply


  இன்று காலை மாங்காடு சென்றிருந்தேன். திரு.லக்ஷ்மி நாராயணன் அவர்கள் மறைந்தவுடன் வேதபாடசாலை கவனிப்பார் யாருமின்றி மூடப்பட்டுவிட்டது. தற்போது அங்கு உள்ள ஷண்மத கோவிலில் தினசரி பூஜை மட்டுமே நடந்துவருகிறது. குருக்களிடம் பேசியதில், காஞ்சி மடத்தின் ஆசியோடு தற்போது ‘தபஸ் டிரஸ்ட்’ என்கிற அமைப்பு, மாங்காடு சக்தி நகரில் ஒரு வேத பாடசாலை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

  ஷண்மத கோவிலில் தரிசனம் செய்துவிட்டு குருக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அங்கே இருந்து நவராத்திரி பூஜையை கண்டுகளித்துவிட்டு, அம்பாளாக ஆவாகனம் செய்யப்பட்ட ஒரு சிறுமியின் காலில் விழுந்து ஆசிபெற்றுவிட்டு கிளம்ப எத்தனிக்கையில், இருந்து மதிய உணவையும் சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். பாயசத்துடன் கூடிய அருமையான சாப்பாட்டை முடித்துவிட்டு, சக்தி நகர் புறப்பட்டேன்.

  புறப்படும்போது, வாசலில் ஜன்னலில் மாட்டப்பட்டிருந்த மகாபெரியவா படம் ஒன்று பார்வையில் பட்டது. படத்தின் மீது தூசி படிந்திருந்தது. கண்கலங்கியபடி என் கைக்குட்டையை எடுத்து துடைக்க எத்தனிக்கையில், இந்த பாவியின் வியர்வை அவர் மீது படலாகாது என்று அவர்களிடமே ஒரு துணியை வாங்கி படத்தை துடைத்தேன். பின்னர் சக்தி நகர் பயணம்.

  அங்கிருந்து (2km) பக்கத்தில் தான். எப்படியோ பாடசாலையை தேடி கண்டுபிடித்து சென்றேன். அங்கு உள்ள வேத பாடசாலையில் சுமார் 30 சிறுவர்கள் வேதம் பயின்று வருகிறார்கள். இங்கிருக்கும் மாணவர்கள் அனைவருமே பீகார் மற்றும் உ.பி.யிலிருந்து வந்தவர்கள். இவர்களை பார்த்துக்கொள்ளும் இருவர் உட்பட யாருக்கும் தமிழ் தெரியவில்லை. கோ-சாலையும் இருக்கிறது. தினமும் கோ பூஜை நடந்துவருகிறது. (இவர்களுக்கு மயிலாடுதுறை கோழிக்குத்தியிலும் ஒரு வேத பாடசாலை இருக்கிறது.)

  ராமச்சந்திரன் என்பவரின் தொடர்பு எண்ணை தந்தார்கள். அவரிடம் பேசி, நாம் வந்த நோக்கத்தை கூறி, வேதபாடசாலைக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்ய வந்திருப்பதாக கூறினேன். ஒரு பாடசாலை நடத்துவதற்கு என்னென்ன தேவைப்படும் என்று உங்களுக்கே தெரியும். நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கித் தரலாம் என்றார். முடிந்தால் நன்கொடையாக கூட தரலாம் என்றார். அங்கிருப்பவர்களிடம் ஏதோ கூறி, எனக்கு அவர்கள் பாடசாலை பற்றிய நோட்டீஸை தந்தார்கள். மறுபடியும் ராமச்சந்திரன் அவர்களிடம் அலைபேசியில் பாடசாலையையும் மாணவர்களையும் ஒரு புகைப்படம் எடுத்துகொள்கிறேன் என்று கூறினேன்.

  அதுவரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் சட்டென்று மூட் மாறிவிட்டார். என்ன நினைத்தாரோ “அது இப்போது வேண்டாம். நீங்கள் தீபாவளிக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறிவிட்டார். தொண்டு செய்ய களம் இறங்குபவர்கள் அனைத்து மான, அவமானங்களையும் தாண்டித் தான் செய்யவேண்டியிருக்கிறது என்பது எனக்கு தெரியும் என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நண்பர்களுடன் பேசி, அந்த பாடசாலை மாணவர்களுக்கு ஏதேனும் செய்ய உத்தேசித்திருக்கிறேன். Halasya Sundaram Iyer மூலம் நவராத்திரி பிரசாதமும் பகவத் பாதாளின் தரிசனமும் கிடைத்தது. மிக்க நன்றி. சற்று விரிவாக என் RightMantra.com தளத்தில் பதிவு விரைவில் செய்கிறேன்.

 5. Rightmantra Sundar September 29, 2014 at 12:23 AM Reply

  தூசி படிந்திருந்த அந்த படம்….

 6. Rightmantra Sundar September 29, 2014 at 12:33 AM Reply

  வேத பாடசாலை சிறுவர்கள்…

 7. Chandra venkataraman September 29, 2014 at 1:42 AM Reply

  I want to offer help to Veda para sala. Please send address and name where to send check.
  Chandra.venkataraman@gmail.com

  • BaalHanuman September 29, 2014 at 5:36 AM Reply

   TAPAS TRUST

   HDFC Bank, Gopalapuram, Chennai – 86.

   Current Ac. No.: 06751450000127

   IFSC Code : HDFC0000675

   Contact Person : V.Ramachandran 9841754198

   Padasala address :

   Mangadu : Plot No.34, Gurukulam, Sakthi Nagar, Mangadu – Chennai – 600122

   Kozhikuththi : 101, Kozhikuththi Agraharam, Mayiladuthurai – Nagappattinam District.

   The registered office of the trust is at 86/131, I Floor, Lloyds Road, Royapettah, Chennai 600014. Ph : 044-28116393

 8. varagoorannarayananv September 29, 2014 at 6:38 AM Reply

  மாணாக்கர்கள் இருக்கும் பக்ஷத்தில் உதவி செய்ய தயார். எண்ணிக்கை தெரிவிக்கவும்.

  • BaalHanuman September 29, 2014 at 12:54 PM Reply

   வரகூரான் சார்,

   எங்கள் (அடியேன் மற்றும் Halasya Sundar Iyer) வேண்டுகோளை ஏற்று, கடந்த ஞாயிறு அன்று மாங்காடுக்கு நேரில் சென்று வந்த RightMantra சுந்தர் கூறுகிறார்…

   இன்று காலை மாங்காடு சென்றிருந்தேன். திரு.லக்ஷ்மி நாராயணன் அவர்கள் மறைந்தவுடன் வேதபாடசாலை கவனிப்பார் யாருமின்றி மூடப்பட்டுவிட்டது. தற்போது அங்கு உள்ள ஷண்மத கோவிலில் தினசரி பூஜை மட்டுமே நடந்துவருகிறது. குருக்களிடம் பேசியதில், காஞ்சி மடத்தின் ஆசியோடு தற்போது ‘தபஸ் டிரஸ்ட்’ என்கிற அமைப்பு, மாங்காடு சக்தி நகரில் ஒரு வேத பாடசாலை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

   அங்கிருந்து (2km) பக்கத்தில் தான். எப்படியோ பாடசாலையை தேடி கண்டுபிடித்து சென்றேன். அங்கு உள்ள வேத பாடசாலையில் சுமார் 30 சிறுவர்கள் வேதம் பயின்று வருகிறார்கள். இங்கிருக்கும் மாணவர்கள் அனைவருமே பீகார் மற்றும் உ.பி.யிலிருந்து வந்தவர்கள். இவர்களை பார்த்துக்கொள்ளும் இருவர் உட்பட யாருக்கும் தமிழ் தெரியவில்லை. கோ-சாலையும் இருக்கிறது. தினமும் கோ பூஜை நடந்துவருகிறது. (இவர்களுக்கு மயிலாடுதுறை கோழிக்குத்தியிலும் ஒரு வேத பாடசாலை இருக்கிறது.)

   ராமச்சந்திரன் என்பவரின் தொடர்பு எண்ணை தந்தார்கள். அவரிடம் பேசி, நாம் வந்த நோக்கத்தை கூறி, வேதபாடசாலைக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் செய்ய வந்திருப்பதாக கூறினேன். ஒரு பாடசாலை நடத்துவதற்கு என்னென்ன தேவைப்படும் என்று உங்களுக்கே தெரியும். நீங்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கித் தரலாம் என்றார். முடிந்தால் நன்கொடையாக கூட தரலாம் என்றார்.

   TAPAS TRUST

   HDFC Bank, Gopalapuram, Chennai – 86.

   Current Ac. No.: 06751450000127

   IFSC Code : HDFC0000675

   Contact Person : V.Ramachandran 9841754198

   Padasala address :

   Mangadu : Plot No.34, Gurukulam, Sakthi Nagar, Mangadu – Chennai – 600122

   Kozhikuththi : 101, Kozhikuththi Agraharam, Mayiladuthurai – Nagappattinam District.

   The registered office of the trust is at 86/131, I Floor, Lloyds Road, Royapettah, Chennai 600014. Ph : 044-28116393

 9. v balasubramani September 29, 2014 at 7:42 AM Reply

  Dear sir
  thanks giving bank details
  V balasubramani

  • BaalHanuman September 29, 2014 at 1:11 PM Reply

   உங்கள் நன்றிக்கு உரியவர் கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள – அருமை நண்பர் RightMantra சுந்தர் தான்…

 10. ganesh September 29, 2014 at 6:25 PM Reply

  hara hara sankara jaya jaya sankara kanchi sankara kamakodi sankara

 11. Right Mantra Sundar October 1, 2014 at 12:14 PM Reply

  இப்போது தான் உங்கள் பின்னூட்டங்களை கண்டேன். எல்லாப் பெருமையும் புகழும் நம்மையெல்லாம் இணைக்கும் நல்வழிக்கு தூண்டும் மகா பெரியவாவையே சாரும். ஹாலஸ்ய சுந்தரம் ஐயர் அவர்கள் கூறுவது போல அடியேன் ஒரு அம்பு அவ்வளவே. தங்கள் தளத்தின் அடியேனை பற்றி தகவல் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s