92-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


கிளாரினெட் வித்வான் திரு.ஏ.கே.சி.நடராஜன் கூறுகிறார்…..

பெரிய மடங்கள் அனைத்திலும் வாசித்து இருக்கிறேன். 30 வருடங்கள் பெரியவர் காஞ்சிமடத்தில் இருந்தபோது, வியாச பூஜைக்கு வாசித்திருக்கிறேன். டாலர், ருத்ராட்சம் எல்லாம் பரிசளித்திருக்கிறார் பெரியவர். அவருடைய ஜன்ம நட்சத்திரத்திற்கு காலை 9 மணி முதல் மாலை வரை பூஜை செய்வார், அவ்வளவு நேரமும் தொடர்ந்து வாசித்திருக்கிறேன். ஒருமுறை ஒருவர், காஞ்சிப் பெரியவரைப் பார்க்க வந்திருந்தார். அவர் 10,000, 20,000 ரூபாய் பணக்கட்டுக்களைத் தட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார். ஆனால், அவர் அதை என்னிடம் கொடுக்கச் சொல்லிவிட்டார். நான், “எனக்கு வாசிப்பதற்கு மடத்தில் பணம் தருகிறார்கள், எனவே இது வேண்டாம்” என்று அந்தப் பணத்தை வாங்க மறுத்தேன். பெரியவரோ, ‘அது கணக்கு, இது சன்மானம்’ என்று கூறி கொடுத்தார்கள். நான் கணக்கு வைத்திருப்பவரிடம் சென்று எனக்கு பெரியவர் பணம் கொடுத்து விட்டார் என்றேன். ஆனால் அவரோ, திரும்பவும் அங்கும் எனக்குப் பணம் கொடுக்கச் செய்தார்.

Guruve Saranam

சதுரம் பதிப்பகம், 34, சிட்லபாக்கம், 2ம் பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம், சென்னை – 47. (பக்கம்: 288 )

இந்நூல் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான நூல் வெளியிடும் நிதியுதவித் திட்டத்தில் உதவி பெற்று வெளியிடப் பெற்றுள்ளதென்பதே, இந்நூலின் மிகப்பெரிய சிறப்பு என்று தான் சொல்ல வேண்டும். பரூர் எம்.எஸ்.அனந்தராம ஐயர் முதல் திருவெண்காடு ஏ.ஜெயராமன் உட்பட 19 இசை விற்பன்னர்களின் இசை அனுபவங்கள் கலைபட நேர்காணல் முறையில் இடம் பெற்றுள்ளன. இசைக் கலைஞர்களின் படிப்பு, பெற்றோர், இசைச்சூழல், முதல் குரு, இசை ஆரம்பம், குருகுல வாசம், அதில் அவர்களின் குருவைப் பற்றிய பதிவு, மறக்க முடியாத சம்பவங்கள், முதல் கச்சேரி, தொடர் கச்சேரி, குருமார்களின் வாழ்க்கை வரலாறும் கலைபட பதிவாகியுள்ளன.

Guruve Saranam
இசைக் கலைஞர்கள், இசைத்துறை பற்றி அறிந்து கொள்ள உதவும் நல்ல நூல்.

இப்புத்தகத்தில் 19 முக்கியமான கர்நாடக இசைக்கலைஞர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றிருக்கின்றன. கர்நாடக சங்கீதம் தவிர இந்த நேர்காணல்களை இழைக்கும் மையக்கரு ‘குரு’ தத்துவம். ஒவ்வொரு இசைக்கலைஞரும் தான் இசைக்கலைஞராகப் பரிமளிக்கக் காரணமாகயிருந்த பெற்றோர்கள், குருமார்களைக் குறித்து விரிவாகப் பேசுகிறார்கள். “இந்த நூல் இசைத்துறை சார்ந்தது. எனவே சம்பவங்கள், தகவல்கள், பயணங்கள் இசைத்துறை சார்ந்த ஒரு கொத்துப் பூக்கள் போலக் காட்சி அளிக்கும். இசைப் பயண வாழ்க்கை வரலாறுகளாவே இவை அமைந்திருக்கின்றன. இசை, அதன் நுணுக்கம் என்று ‘தியரி’ எனப்படும் விளக்கம் சார்பாக சிறிதும், குரு-சிஷ்ய உறவு, அதனதன் மேம்பட்ட நிலை, குருவே பெற்றோராக மாறும் மாயம், பெற்றோரே குருவாகும் நிலை என்று அவரவர் வாழ்வின் உணர்வு நிலைகளைச் சொல்வதே இந்நூல்.” என்று தன்னுடைய முன்னுரையில் சொல்கிறார், இந்நூல் உருவாக முக்கியமான காரணமாக இருந்த எழுத்தாளர் க்ருஷாங்கினி. நான்காண்டுகளாக முயற்சித்து இப்பேட்டிகளை நடத்திப் புத்தகத்தை உருவாக்கியிருப்பவர்கள் ‘தாம்பரம் இசைக்குழு’வைச் சேர்ந்த பாஷ்யம் தம்பதியினர்.

–நன்றி சொல்வனம்

மஹா பெரியவா அருள்வாக்கு : –

நம்மில் ஒவ்வொருவர் ஒவ்வொரு மந்த்ரத்தை உபதேசம் வாங்கிக் கொள்கிறோம். இவற்றை அவரவர் தங்கள் இஷ்டப்படி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனாலும் நம் அத்தனை பேருக்கும் உபநிஷத்திலேயே உபதேசித்துள்ள மந்த்ரம் – “தத்த – அதாவது தானம் செய்; நல்ல கொடையாளியாக இரு” என்பதுதான். மற்ற மந்த்ரங்களை ஜபிக்க வேண்டும். இந்த “தத்த” மந்த்ரத்தைக் காரியத்தில் பண்ணிக்காட்ட வேண்டும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s