87-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


Yamirukka Bayamen

துக்ளக் ஆசிரியர் சோ கூறுகிறார்…

https://i0.wp.com/im.in.com/connect/images/profile/b_profile1/Cho_Ramaswamy_300.jpg

நான் ஒரு incident சொல்றேன். ஆச்சரியமா இருக்கும்.

“நான், Indian Express Group-ல நிறைய பேர், Goenka, grand sons… Arun Shourie, Gurumurthy எல்லோரும் மஹா சுவாமிகளைப் பார்க்கப் போயிண்டிருக்கோம்.

அப்போ போற வழியிலே, என் வாய் சும்மா இல்லை. என் வாய்தான் எப்பவுமே சும்மா இருக்காதே…”ஏன் இந்த மகா ஸ்வாமிகள் இப்படிப் பண்ணினார்னு ஒரு விஷயம் பத்திக் கேட்டேன். அது சரியில்லையே, ஏன் அப்படிப் பண்ணினார்?” என்று.

நான் தான் பெரிய ப்ருஹஸ்பதி ஆச்சே… எல்லாத்தைப் பத்தியும் பேச முடியுமே!” பகவான் கொடுத்த எதை use பண்றேனோ இல்லையோ, வாயை மட்டும் நன்னா use பண்ணிண்டு இருக்கேன். So, அந்த மாதிரி கேட்டுட்டேன். அப்ப குருமூர்த்தி அவாள்லாம், “நமக்கு என்ன தெரியும்? என்னமோ பண்ணியிருக்கார். நமக்குத் தெரியாது” என்றனர்.

இது தாம்பரத்துக்கும் முன்னால் நடந்த சம்பவம். காஞ்சீபுரத்துக்குப் போய் உட்கார்ந்தோம் அவர் முன்னாலே… நிறைய பேர் இருந்தா. அதனால இந்த incident சொல்றதில்ல தப்பில்ல… ஒரு 200 ~ 250 பேர் இருந்தா. அவர் நிறைய விஷயங்கள் பேசினார். பேசிட்டு, என்னைப் பார்த்து, “இப்ப உனக்கு நான் அந்த மாதிரி ஏன் பண்ணினேன்னு தெரிஞ்சுண்டாகணும் இல்லையா? இல்லைனா மூளை சும்மா இருக்காது, இல்லை ?”

ஆடிப் போயிட்டேன். எழுந்து ஓடிப் போயிடலாம் போல இருந்தது. சாதாரணமாகவே அவர் முகத்தைப் பாக்கறதே கஷ்டம். இந்த மாதிரி சொன்னதுக்கப்புறம் என்ன பண்றதுன்னே தெரியலே. நைசா நழுவிடலாமா என்கிற அளவுக்கு வந்துட்டேன். அப்புறம் பெரிய explanation கொடுத்தார்.

எனக்காக இல்ல. அங்க இருக்கற எல்லாருக்காகவும் – தெரிஞ்சுக்கட்டும்னு…

எப்படி அவருக்குத் தெரிஞ்சுது சார் ? எப்படிக் கண்டு பிடிச்சார் அவர் ? நாங்க இங்க எங்கேயோ பேசிண்டிருக்கோம். நான் கேட்டிருக்கேன். அங்க போய் உட்கார்ந்தவுடன், “இது உனக்குத் தெரிஞ்சாகணும் இல்லியா?” என்று கேட்கிறார். இது மாதிரி சில powers எல்லாம் இருக்கு சார்.

நான் இத சொல்றத வச்சு நான் அவருக்கு என்னமோ ஆத்மார்த்த சிஷ்யன் என்று எல்லாம் நினைச்சுடாதீங்கோ. கிடையாது. ஏதோ சில சமயம் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன்.. ஆனா அவருக்கு என் தாத்தா மேல ரொம்ப அபிமானம் உண்டு. அதனால கொஞ்சம் பேசுவார். அப்படி வச்சுக்கணுமே ஒழிய நான் என்னமோ அவருக்கு ரொம்ப close, சிஷ்யன் அப்படி எல்லாம் நினைச்சுடாதீங்கோ…எனக்கு அந்த அருகதை கிடையாது. But, எதுக்கு சொல்ல வந்தேன்னா, நமக்கு மீறின விஷயங்கள் நிறைய தினம் உங்க Life-லேயும் நடக்கிறது. என் Life-லேயும் நடக்கிறது. நம்ப Realize பண்றதில்ல. இதெல்லாம் கடவுளோட வேலைன்னு…

மஹா பெரியவா அருள்வாக்கு : –

பாப கர்மாவினால்தான் துக்கம் வருகிறது. ஒருவரின் பாபத்தை இன்னொருவர் வாங்கிக் கொண்டு அனுபவிப்பதை vicarious suffering என்று சொல்வார்கள். லோகம் பூராவின் பாபத்தையும் வாங்கிக்கொண்டு தீர்ப்பதற்கே ஜீசஸ் சிலுவையில் அறையப்பட்டதாகச் சொல்வார்கள். இந்தத் தியாக சிந்தனை நம் மதத்துக்குப் புதிதல்ல. ரந்திதேவன் வேண்டினது இதைத்தான். “எல்லார் துன்பமும் எனக்கு வந்து சேரட்டும்” என்றான். “எல்லா ஜீவராசிகளின் கஷ்டங்கள் அனைத்தையும் நான் எடுத்துக்கொண்டு அனுபவிக்கிறேன். அதனால் அவற்றின் கஷ்டம் தீரட்டும்” என்றான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s